ஒருமையின் பொருண்மை
நிலம் ,நீர் ,தீ , காற்று , வான்
தனியே சிந்தித்தால் ஒருமைதான் !
ஆய்ந்து ஆய்ந்து தனித்தனியே
ஒவ்வொன்றையும் பன்மைசெய்கின்றான்
தனது சிற்றறிவால் இதயம்குறுகிய மனிதன் !
அன்பு, அருள், தூய்மை இவையும்
தனித்தனியே பார்க்கின்,ஒருமையே !
இவற்றின் விசாலம் பெரிதும்பெரிது!
மனிதன் உணரக்கூடும் ! -எவரால்
அளவிடக்கூடும்! அறிவுகள்,அன்புகள்,
தூய்மைகள் என்று கூறப்படின்
அது நகைப்பு அன்றோ !
அறிவு முன்னிற்க இடப்படும் பாதை
அது லௌகீகம்!
அன்பு முன்னிற்க வழிகாட்டும் பாதை
இது ஆன்மீகம் !!
அனுபவமும்,பயிற்சியும் ,மனப்பக்குவமுமே
அன்புகாட்டும் ஆன்மீகத்துக்கு அடிப்படை !
கணினியில் மட்டுமல்ல,
இறைவனின் ஆட்சியிலும்
பூச்சியமும், ஒன்றும் மட்டுமே
மதிப்பீட்டுக்கு உரியன!
(விளக்கம் : : ஆதரவற்ற குழந்தைகளுக்காக கைநீட்டிய அன்னை தெரசாவின் கரங்களில் எச்சில் உமிழப்பட்டபோது,
இது எனக்கு இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவுங்கள் என்று எண்ணிக்கேட்க தோன்றியது அன்பின் பொறுமையும் மாட்சிமையும் அன்றோ! அறிவின் மிக்கார் அன்பில்லாமல்
தொழுநோயாளிகள் மற்றும் இயலாதோரைக் காக்காதபோது தனியளாய் முயன்ற அந்தக்கன்னி அன்னை தெரசா என்று போற்றப்பட்டது அன்பினாலன்றோ !( அறிவினான் ஆகுவதுண்டோ …………..தந்நோய்போல் போற்றாக்கடை .- திருக்குறள் வள்ளுவர் அருள்ளிலாதவரை அறிவுடையவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பின்
வளர்ச்சியே அருள் ; தொடர்பிலார்மீதும் காட்டப்படும் அன்பே அருளாகும் )
மீனவர்களுக்கு ….
அலை விட்டுவைத்தவரையே வீடு !
வலைபட்டவரையே மீன்கள் !!
கடல் விட்டுவைத்தவரையே வாழ்க்கை !!!
அருமை… விளக்கத்திற்கு நன்றி சார்…
welcom mr. danabalan, thank u