தேவையான பொருட்கள்:
குடை மிளகாய் – 1 (பெரியது)
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
வேர்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
எள் – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
தாளிக்க :
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் இல்லாமல் கடலைப் பருப்பு, உளுந்து, வேர்கடலை, தனியா, எள் சேர்த்து இதே வரிசையில் வறுக்கவும்.
பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்த பொருட்களை தனியே எடுத்து ஆறவிடவும்.
குடை மிளகாயை விதை நீக்கி பெரிதாக வெட்டவும்.
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு குடை மிளகாயை வதக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வாணலியை மூட வேண்டாம்.இலேசாக வதங்கிய பிறகு நன்கு ஆற விடவும் .
இரண்டையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.
சுவையான குடை மிளகாய் சட்னி தயார்.
குடை மிளகாய் கிடைப்பது தான் அரிது… இருந்தாலும் நல்லதொரு சுவையான சட்னிக்கு நன்றி…