உதிர்ந்த இளைச்சருகுகளுக்காக
வருந்தாது துளிர்விடும் மரங்கள் !!
தன் எடையிலும் அதிகம்
தள்ள, இழுக்க,தாங்கி
நடக்கின்ற எறும்புகள் !!
வேரில்லாவிடினும் விழுதுகளால்
வென்றுநிற்கும் ஆலமரங்கள் !!
இரண்டுபட்டாலும் இறக்காமல்
இரண்டாய் வளரும் மண்புழுக்கள் !!
விளைந்தாலும் பயிர் அழிந்தாலும்
வேளாண்செய்யும் விவசாயிகள் !!
கற்பிக்கும் பாடம் புரிகிறதா !!
ஊக்கமது கைவிடேல் !!
அதுதான் உண்மையான ஆக்கம்!!!
( தயவுகூர்ந்து யாராகிலும் ஊக்க மது கைவிடேல்
என்று பிரித்து படித்து தவறாக பொருள்கொள்ளாதீர்கள்!
உலகில் சிறக்க ஊக்கம் அதனைக் கைவிடேல் )
— ” திருமுருகு ” , இராமநாதபுரம்.
என் மனைவிக்கு …
இல்லற இசையின்
இராக பிரவாகமாய்
நான் இருக்க
தாள பிரமாணமாய்
சிறப்பிக்கின்றாய் நீ !
வெள்ள ஆறாய்த் திரிந்த என்னை
நல்லநேசம் என்ற அணையால்
இல்லற நெறிபடுத்தினாய் நீ !!
அறிவுப் பரிமாணத்தால்
நான் வளர்கின்ற போது
நீ அன்புப் பரிமாணத்தால்
அழகு செய்கின்றாய் !!!
வாழ்க! வாழ்க!!
வாழ்க்கைத்துணைவியே !!
– திருமுருகு
இரண்டு கவிதை வரிகளும் அருமை…
திருமுருகு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்….
thank you, mr. dhanabalan sir.
“viluthukalal vendru nirkum aalamarankal…” -oru sorpolivin surkkame intha kavithai varikalukkul adanki kidakkirathu. meendum meendum padithu parkiren..sinthanai virinthu konde selkirathu…