உயிர்க்காற்றே…

air

      காற்றே நீயும்

      கடவுளின் சாயல்;

      கடவுள் நீ ! என்ற

      கருத்து  என்னிடம் உண்டு.

        இல்லை, நீ அவரினும்

        சிறந்தவன்;உயர்ந்தவன்;

        ஆம் ! மும்மூர்த்திகளுக்கும்

         கோயில்கட்டி  மூர்த்திகள் வைத்து

         கோயில் செய்து பூட்டிவைத்ததாகக்

          கூறிக்கொண்டாரின்

          நாசிபடுகாற்று அல்லவா நீ!

          இவ்வுலகில் மட்டுமன்று !

           எவ்வண்டத்திலும்

            எவரேனும் உனைச் சிறைவைத்தலோ

            தனிச்சொந்தம் பாராட்டவோ

             கூடுமோ!

            எரிகின்ற எரிமலை

             எவ்வெல்லையில் உளது

             எங்கே குழம்பு ஓடுகின்றது

             என்று எட்டையிருந்து

             ஒவ்வொரு விடயத்திலும்

              எல்லை வகுக்கிறார்கள்;

               விரிந்த வானிலும்கூட

               வானெல்லை என்று

               கற்பித்துக் கொண்டு

               அற்பவாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்

                இந்த ஆதிக்க மனிதப் பயல்கள்!!

                      வயலெல்லை, வீட்டெல்லை,

                     தேச எல்லை,  நதியெல்லை,

                      கடல்லெல்லை ,வானெல்லை

                      என்றெல்லாம் மாற்றானைத்

                      துன்புறுத்தும்  இன்னும் இறக்காத

                      துரியோதனாதிகளின் உயிர்மூச்செல்லை

                      தெரிந்த ஒருவனல்லவா நீ !!!

                       ஏ! இனிய உயிர்க்காற்றே !

                       உலகெல்லாம் சென்று

                      இவர்களது நாசிதொடும்போதெல்லாம்

                       செவியோரம் உரக்கச் செப்பிவா !

                     ” உன் அப்பனும் தாத்தனும்

                       அணு ஆதிக்கப் போர் தொடுத்திருந்தால்

                       நீ அன்றே இவ்வுலகத்துக்கு

                       நலமாய் எஞ்சியிருக்கமாட்டாய் !!

                       இந்த பூமியில் சாந்தி நிலவச்செய் !

                       முடிந்தால்  முன்னைவிட

                       இதனைச் சிறப்பாக்கு !

                       இல்லையேல் உலகிற்கு

                        தீங்கேதும் செய்யாதொழிக ” என்று

                       மூச்சுநடத்தும்போதெல்லாம் – இந்த

                       முர்க்கர்மூடர்களிடம் முடிந்தவரை

                        அமைதிப்  பேச்சை நடத்து

                        கேளாதொழிந்தால் , உயிர்மூச்சை

                         நிறுத்து !  காக்கும் கடவுளே,

                         காற்றுத்தேவா! காத்திடுவாய் !

                         காத்திடுவாய் ! இப்புவியை !!

                         உயிர்மூச்சோடும்

                          உலக அமைதிப்பேச்சோடும்

                           உலவி வா! உயிர்க்காற்றே !

                                                        – திருமுருகு .

3 responses

  1. pothuvil irukka veddiya pancha boothankalai kooda viyabara porulakki vitta muthalalithuva manithanin kaigalil kktrum sikki vidumo enkira kavalaiyum kobamum kavithaiyil velipadukirathu.water bottle potavan nalaikku oxygen bottle poda koodum. atharkul avan(capitalist economy) moochai niruthi vidu endru kaatridam solkirar kavignar.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s