நன்மக்கட்பேறு

This gallery contains 1 photo.

நன்மக்கட்பேறு: செல்வங்கள் பல . பொன்னும் பொருளும் மட்டும் செல்வமல்ல;  மாடுமனை மட்டுமே செல்வமல்ல ; அறியாமையால் மக்கள் பலர் இவற்றையும், இவற்றைப் போன்றவற்றையும் மட்டுமே செல்வமென்று  எண்ணுகின்றனர். ஆனால் , உண்மை அதுவன்று . நன்மக்களைப் பெறுவதும் உயர்ந்த செல்வமே. நல்ல பிள்ளை குடும்பத்தைத் துலக்குவான் . குலத்தை விளக்குவான். இதைப்போல் வேறு செல்வங்கள் செய்யுமா?! பிள்ளைச் செல்வம்,  புத்திர பாக்கியம் , மக்கட்பேறு  என இச்செல்வம் பலவாறு குறிப்பிடப்படுகிறது. மக்கட்பேறின்றி  மனவருத்தமுற்ற தசரதன் அதனைப் … Continue reading

கடவுளும், இயற்கையும்

This gallery contains 2 photos.

  உடலை விடுத்து உயிரை உணர்தல் இயலாது. அதனைப் போல, இயற்கையானது உடல் போன்றது. இறைவன் அதற்கு உயிரைப் போன்றவர்.  உலகேங்கிலும் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன.  தாவரங்கள் குறிப்பாக, மரங்கள் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு எதுவாக உள்ளது. இறைமையை உணரவைக்கும் ஆற்றல் இயற்கைக்கு உள்ளது.  உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய இறைவனை நாம் உணர்தல் வேண்டும்.  கோயிலில் எல்லா உயிரனங்களும் பேணப்பட வேண்டியவை என்பதைக் நடைமுறைப் பழக்கத்தாலும், ஆகமங்கள் மூலமும்உணர்த்தியிருக்கின்றனர் நம் முன்னோர்.   அவர்கள் அதிகம் விளக்கம் … Continue reading

தமையா (falafel)

This gallery contains 4 photos.

தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை  – 1 கப் பார்ஸ்லி – 1 கைப்பிடி (பார்ஸ்லி என்பது மல்லி இலை  போன்று இருக்கும்) வெங்காயம் – 1 பூண்டு – 4 அல்லது 5 சீரகம் –  1 டீ ஸ்பூன் தனியாத் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: … Continue reading

மனம்- குணம்-மரம்

This gallery contains 2 photos.

கொடை  பிறவிக்குணம்  ! ———————————————-   உலகைச் சூழ்ந்த  கடல்நீர் ஒரு துளிகூட குடிக்கமுடியாது ! உள்ளங்கைதான் மூழ்கும்  ஊற்றுநீர் எனினும் நீர்ப்பெருக்கால்  உலகுஊட்டும் ! பெரும்பணக்காரர்களால்  ஆகாதது ,- சிறு வள்ளல்களால்  நிறைவேறும் . –   திருமுருகு ஹைக்கூ பண்புடையாளர் தொடர்பு ——————————————– நட்பினால் கற்றதா  இது?! மரஞ்செடி, கொடிகள் ,மலர்களிடம் ! மென்மையாய் வருடும் தென்றலே!                                              –   திருமுருகு ஈரமான மரத்தை ஈரமில்லா கொடூரர்களால் மட்டுமே வெட்ட முடியும்! மரத்திடம் இருக்கும் மனமும் … Continue reading

பாதாம் பர்பி

This gallery contains 4 photos.

  தேவையான பொருட்கள்: பாதாம் பொடித்தது – 1 கப் ((ஊறவைத்து தோல் உரித்து மிக்சியில் உடைத்துக் கொள்ளவும்) சீனி (சர்க்கரை) – 1 கப் பால் – அரை கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை நான் ஸ்டிக் பாத்திரத்தில் சீனி சேர்த்து 2 ஸ்பூன் பால் சேர்த்து உருகவிடவும். அதனுடன் பாதாம் பொடித்தது சேர்த்து கிளறவும். 2  ஸ்பூன் நெய்,2 ஸ்பூன் பால் விட்டு கிளறவும். சிறிது இறுகிய உடன் நெய் … Continue reading

தாத்தா முதல்ல சாப்பிடட்டும் – ஒரு பக்கக் கதை

This gallery contains 1 photo.

“அழகா , படையலை எச்சில் பண்ணாதே ! நம்ம தாத்தா அதை சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடலாம் ! “அம்மா இலையில் இருந்த வடைபாயாசத்தை சாப்பிடப் போன தனது குழந்தையைத்  தடுத்து நிறுத்தினாள் . அமாம், அன்று தனது மாமனாரின் நினைவுநாள் .  அதற்காக அவள் சமயலறைக்கும் , தனது மாமனாரின் புகைப்படத்தை இறக்கி வைத்து  படையல் ஏற்பாடுகளைச் செய்து  கொண்டிருந்தாள் ..  அழகனின் அப்பா வீடு வந்து சேரவில்லை.  அழகன் மீண்டும் மீண்டும் அதனைச்  சாப்பிட … Continue reading

தமிழ் வழிக் கல்வியா? ஆங்கில வழிக் கல்வியா? – எது தேவை ?

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டில் சமச் சீர் கல்வியைக் கொண்டு வந்தால் மெட்ரிக் மாணவர்களோடு அரசு மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதால் கல்வித் தரம் உயரும் எனவும், ஏழை மாணவர்களும் மெட்ரிக் மாணவர்களுடன் சம நிலைப் போட்டியில் இருப்பார்கள் எனவும் திமுக அரசு அன்று தெரிவித்தது. அதிமுக அரசோ  இன்று ஆங்கில வழிக் … Continue reading

பச்சோந்தி – சிறுகதை

This gallery contains 1 photo.

    துரைப் பாண்டியன். நல்ல உயரம். முறுக்கிய மீசை. நீண்ட கேரா. முத்துப் பற்கள். உடம்பெல்லாம் முடி. ஆள் பார்ப்பதற்கு நடிகர் விஜய குமார் மாதிரி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்களேன். பிறகென்ன, அவர் தான் ஊர் நாட்டாமை. ஊர் பணக்காரரும் கூட.     ஊரில் எந்தப் பஞ்சாயத்து என்றாலும் துரைப்பாண்டியன் தான் தீர்த்து வைப்பார்.     ஊரில் மொத்தமே இரண்டு சாதிதான். அவர்கள் வாழும் பகுதிக்குள் துரைப் பாண்டியனின் சாதியினர் … Continue reading

எண்ணிப் பார்க்கிறேன்…

This gallery contains 1 photo.

ஜூனியராய் இருந்த போது ராக்கிங் பண்ணுதல் தவறென்றெண்ணினேன் சீனியராய் மாறிய போது ராக்கிங் பண்ணுதல் ஜாலி என்றெண்ணினேன் மருமகளாய் இருந்த போது தொட்டதுக்கெல்லாம் நொட்டை சொல்லும் மாமியாரை – இவளெல்லாம் என்ன மாமியார்  என்றெண்ணினேன் மாமியாராய் மாறிய போது இஷ்டத்துக்கு செய்ய நினைக்கிறாளே – இவளெல்லாம் என்ன மருமகள் என்றெண்ணினேன் பதின்ம வயதினனாய் இருந்த போது காசு தர கஞ்சத் தனம் காட்டும் இவரெல்லாம் அப்பாவா என்றெண்ணினேன் அப்பாவாய்  மாறிய போது வடவர்த்தனை தெரியாமால் காசைக் கரியாக்குகிறானே … Continue reading

நெல்லிக்காய் ஊறுகாய்

This gallery contains 4 photos.

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் – 10 அல்லது 15 உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் வறுக்க: காய்ந்த மிளகாய் – 10 அல்லது 15 வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – 2 அல்லது 3துண்டுகள் செய்முறை: நெல்லிக்காயை  கழுவி தண்ணீர் இல்லாமல் காய விடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், சேர்த்து வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது  எண்ணெய் விட்டு துண்டு பெருங்காயம் பொரித்து … Continue reading