உழைப்பவர் தாழ்ந்திடலாமோ?!

labour

உழைப்பவர்  தாழ்ந்திடலாமோ?!
——————————————————–
    விழுந்தே கிடக்கின்றன
    முதலாளிகளின் காலடியில்
     விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும்
     ஒப்பந்தச்சட்டங்களும் !
     சிப்பந்திகளும், பணியாளர்களும்
     ஒப்பந்தம் என்ற முறையில்
    முதலாளியின் முகவரி
     தெரியாமலேயே
      பணிசெய்யும் பரிதாபம் !
     இந்த நூற்றாண்டு
      உழைப்பவனுக்கும்
     முதலாளிக்கும்
       உறவிலும் ,
       உரிமையிலும்
       பெரிய இடைவெளியைச்
       செய்துவிட்டிருக்கின்றது !
       ஆமாம்!
       பசியை அதிகம் உணராத
      இவ்வுலகத்தில்தான்
      சோமாலியா போன்ற
      தேசத்துமக்கள்
      இறந்துகொண்டே இருக்கிறார்கள்  !
      சமூக அக்கறைஇன்மையும்
     ஆதிக்க உணர்வும் என்று
     குறையத் தொடங்குகின்றதோ
    அன்றுதான் சமத்துவம்
    உலகமயமாகத் தொடங்கும் !
-திருமுருகு
food
பசி

——
        வாய் சொல்லுகிறது !
         வயிறு பசிக்குது  என்று
        வயிறு ஆற
         வாய்  தின்றது !
         பசியின் வருணனையை
         பாரினில் செய்வார்
         யாருளர்?
           ——–
   – திருமுருகு
முதுகும் இமயமும்
     “““““““““““““““““
முயன்று முனைவோருக்கு
இமயமும் முதுகுப் பக்கமாய்த்
தெரிகிறது !
சோர்ந்தே கிடப்போர்க்கு
தன் முதுகே இமயமாய்க்
கனக்கிறது !
             ——–
திருமுருகு

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s