தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 10 அல்லது 15
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
வறுக்க:
காய்ந்த மிளகாய் – 10 அல்லது 15
வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 2 அல்லது 3துண்டுகள்
செய்முறை:
நெல்லிக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் காய விடவும்.
வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், சேர்த்து வறுத்து எடுக்கவும்.
பிறகு சிறிது எண்ணெய் விட்டு துண்டு பெருங்காயம் பொரித்து எடுக்கவும்.
இந்த மூன்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு பொடித்து எடுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நெல்லிக்காய் போட்டு வதக்கவும்.
நெல்லிக்காய் வதங்கிய பிறகு, ஸ்பூண் துணையுடன் கொட்டைகளை நீக்கி விடவும்.
அடுப்பின் தணலை குறைத்து வைத்து வதக்கவும்.
இலேசாக வதக்கிய பிறகு உப்பு சேர்க்கவும்.
பின்னர் மிக்சியில் பொடித்த பொடியைப் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு இறக்கினால் நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.
சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் குறிப்பிற்கு நன்றி…