துரைப் பாண்டியன். நல்ல உயரம். முறுக்கிய மீசை. நீண்ட கேரா. முத்துப் பற்கள். உடம்பெல்லாம் முடி. ஆள் பார்ப்பதற்கு நடிகர் விஜய குமார் மாதிரி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்களேன். பிறகென்ன, அவர் தான் ஊர் நாட்டாமை. ஊர் பணக்காரரும் கூட.
ஊரில் எந்தப் பஞ்சாயத்து என்றாலும் துரைப்பாண்டியன் தான் தீர்த்து வைப்பார்.
ஊரில் மொத்தமே இரண்டு சாதிதான். அவர்கள் வாழும் பகுதிக்குள் துரைப் பாண்டியனின் சாதியினர் செல்வதில்லை. இவர்கள் வாழும் பகுதிக்குள் அவர்கள் வருவதில்லை. அவ்வாறு சொன்னால் சரியாக இருக்காது. வர அனுமதியில்லை என்பதுதான் சரியாக இருக்கும்.
அந்த கிராமத்தில் எந்தப் பிரச்சினைகளும் பெரும்பாலும் வந்ததில்லை.
அமைதியாக இருந்த ஊருக்குள் பிரச்சினை காதல் ரூபத்தில் முளைத்தது. கிருஷ்ணனுக்கும் முத்தரசிக்கும் காதல்.
முத்தரசி பெயருக்கேற்றாற்போல முத்துச் சிரிப்பரசி. அவள் சிரிப்பு பார்ப்பவர்களை வசீகரிக்கும். கறுப்புதான். ஆனால் நல்ல களை முகத்தில் தெரியும். உடம்பில் சதை உண்டு. ஆனால் ஊளைச் சதை அல்ல. நல்ல இறுகிய உடம்பு. நன்றாகப் படித்தாள். பலன், அரசு பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
கிருஷ்ணனும் முத்தரசியுடன் தான் படிக்கிறான். ஒருமுறை கல்லூரியில் முத்தரசியுடன் சிலர் வம்பிழுக்க ஊர்ப் பாசத்தில் அவளுக்குத் துணையாய் நின்று அவளைக் கிண்டல், வெற்று கேலிகளில் இருந்து காப்பாற்றினான்.
கல்லூரியில் பேசியதைக் காட்டிலும் விடுப்பிற்கு ஊருக்கு வரும் போதுதான் அதிகமாகப் பேச ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்கள் நகர்ந்தன. மெல்ல காதலிக்கத் தொடங்கி இருந்தார்கள்.
ஒருமுறை அருண் ஐஸ் கிரீம் கடையில் இருவரும் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பதை நகரத்திற்கு வந்த சுப்பையா பார்த்து விட்டான். விஷயம் நேராக ஊர்த் தலைவர் துரைப் பாண்டியன் காதுகளுக்கும், கிருஷ்ணனின் தந்தைக்கும் தெரிய வந்தது.
அவசரத் தந்தி கொடுக்கப் பட்டு கிருஷ்ணன் ஊருக்கு வரவழைக்கப் பட்டான். கிருஷ்ணனின் தந்தை, நாட்டாமை துரைப் பாண்டியனிடம் காதும் காதும் வைத்த மாதிரி பையனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றார் . நாளைக்கு ஊர் பேச ஆரம்பிச்சா தேவையில்லாத சாதி சண்டையா மாறிக் கிடக்கும். புலம்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணனின் தந்தை.
தம்பி, உங்களை எதுக்கு பட்டணத்துக்கு அனுப்பியிருக்கோம்னு தெரியுமில்ல.
இல்லைய்யா … அந்த பிள்ளை நல்ல பிள்ளைதான்யா….
தம்பி, அவுக நம்ம வயல்ல கூலிக்கு வேலை செய்கிறவுக… அவுக வயிற்றிற்கே நாமதான் படி அளக்கிறோம். தெரியுமா? தெரியாதா?
இங்க பாருப்பா…. காதல், கண்றாவின்னு உன் ஒருத்தனால் ஊரே சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியாது. ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு, உன் ஒருத்தனால் பிரச்சினை வரணும்னு நினைக்கியா?
தம்பி நீங்கெல்லாம் நாங்க சொல்லிக் கேட்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. என்னதான் கண்டிச்சு வச்சாலும் போலீஸ் ஸ்டேஷன்லேயோ, ரெஜிஸ்டர் ஆபிஸ்லையோ கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா நாங்கெல்லாம் உங்களுக்கு ஒண்ணும் கிடையாது.
நீங்க மயிரே போச்சுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிருவீங்க. இங்க இன்னும் யாரும் மாறலப்பா. யோசிச்சு முடிவெடுப்பா… இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. சொன்னவர் தண்ணீரால் வாய் கொப்பளிக்க ஆரம்பித்து விட்டார்.
கிருஷ்ணன், தன்னைப் படிக்க வைக்கிற துரைப் பாண்டியனை எதிர்ப்பது அவசியமற்றது எனக் கருதினான். ஐயா, இந்தப் பாழாய் போனக் காதலால் ஊரே வெட்டிக் கிடும்னா வேண்டாம் என்றான்.
சரி தம்பி, நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க தம்பி… என்ன இருந்தாலும் படிக்கிற புள்ளைப்பா நீ. அதான் புரிஞ்சுக்கிட்டே.. வாயாரப் பாராட்டினார்.
மறுநாள் துரைப் பாண்டியன் வயலுக்கு சென்றார். வேலை நல்லா போகுதுல்லா பேச்சி என பேச்சியிடம் கேட்டார். பேச்சிதான் வயலுக்கு ஆட்களை சேர்த்துட்டு வரணும். பேச்சிதான்
சம்பளத்திலிருந்து, எல்லாமும் வருபவர்களுக்குப் பார்த்துக் கொள்வாள். பேச்சி, நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ மட்டும் முடிஞ்சா இருந்து சம்பளத்தை வாங்கிட்டுப் போயிரு என்றார் துரைப் பாண்டியன்.
அன்றைய வேலை முடிந்தது. எல்லாரும் போய் விட்டார்கள். பேச்சியை பம்பு செட் ரூமுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் துரைப் பாண்டியன். பேச்சியின் ஏழ்மை விலை போயிருந்தது. பேச்சி முத்தரசியின் தாய் என்பது கூடுதல் தகவல்.
sirukathiyin karu nantraaga irukkindrathu. aandan-adimai, meelsaathi- keezhsaathi, uyarnthavan- thaazhnthavan endru verupadukalai valarthu thanadhu aduththa thalaimuraiyayum antha velikkulleye valarthu vara
adhikaara varkkangal munainthu varuvadharku thuraipandi paathiram
oru eduthukattu. pechiyay thanathu sambandhiyaaga manathalavil sindhikka mudiyaatha indha thuraipandi pondravargal kaamam konda podhu
saathiya varambu engo kaanamal poividukindrathe athu en!
A GOOD STORY FOR AN EXAMPLE OF SOCIAL IMMORALATIES STILL WHICH IS GOING ON THE UNDEVELOPED VILLAGES
தயவு செய்து தமிழில் எழுதுங்கள். அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள். இதைப்
படிப்பது மிகக் கடினமாக உள்ளது. எனக்கென்றில்லை. நமது பக்கத்திற்கு வருபவர்கள்
உங்களின் பின்னூட்டத்தையும் சேர்த்தே படிப்பார்கள். ஞாபகம் இருக்கிறதா, சில
இடங்களில் ஏன் பிழை ஏற்படுகிறது என்று? நீண்ட கதையை எழுதி விட்டு திருத்தம்
செய்யும் போது நமது கண்களில் கூட படாது. தயைக் கூர்ந்து தமிழில் எழுதினால்
நன்று.
அன்புடன்
லக்ஷ்மண பெருமாள்.
நல்ல கதை…
தொடர வாழ்த்துக்கள்…
நன்றி தனபாலன் சார் . ஊக்கப் படுத்துதளுக்கும் வருகைக்கும் நன்றி.