தாத்தா முதல்ல சாப்பிடட்டும் – ஒரு பக்கக் கதை

heaven
“அழகா , படையலை எச்சில் பண்ணாதே ! நம்ம

தாத்தா அதை சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடலாம் !
“அம்மா இலையில் இருந்த வடைபாயாசத்தை சாப்பிடப் போன
தனது குழந்தையைத்  தடுத்து நிறுத்தினாள் . அமாம், அன்று தனது மாமனாரின் நினைவுநாள் .  அதற்காக அவள் சமயலறைக்கும் , தனது மாமனாரின் புகைப்படத்தை இறக்கி வைத்து  படையல் ஏற்பாடுகளைச் செய்து  கொண்டிருந்தாள் ..  அழகனின் அப்பா வீடு வந்து சேரவில்லை.  அழகன் மீண்டும் மீண்டும் அதனைச்  சாப்பிட முயற்சித்தான் . “அழகா! இங்கே ஓடிவாயேன்! ”  தாயின் மீது மிகுந்த பாசம் உள்ளவன் அந்தக் குழந்தை . வயது 2 3/4 தான் ஆகின்றது .தாயின் குரல்கேட்டு சமையலறை வந்துவிட்டான் . ” நம்ம தாத்தாவுக்கு படையல் போடுறோம் !  அவர் சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடணும் ! சரியா! ” சம்பிரதாயங்களில் மனம் ஊறிப்போன அம்மா சொல்லவே , குழந்தை தலையை அசைத்தது.
சீக்கிரம் , தனது அடுப்படி வேலைகளை முடித்து ,
சாம்பிராணி, பத்தி , நெய்விளக்கு , கற்பூரம் ஏற்றி  வழிபாட்டை
முடித்தாள். குழந்தை இப்போது பொறுமையாக பூஜையைக் கவனித்துக் கொண்டிருந்தான் எச்சில் எதுவும் பண்ணாமல் !
அம்மா இலையைப் போட்டு சாப்பாடு பரிமாறி ” அழகா வா ! சாப்பிடுவோமா ! வா! ஓடி வாப்பா! ” அழைத்தாள் .
பூசை அறையில் இருந்து வந்த அழகன் இப்போது கேட்டான் .
” அம்மா!  தாத்தா  ஏன் இன்னும் வரவில்லை  ! அவர் சாப்பிட்டபிறகு  தானே நாம் சாப்பிடணும் ! ” நீ சொன்னபடி அவர் வந்த பிறகு சாப்பிடுவோம் ! குழந்தை தாய் முன்னே சொன்ன சொல்லில் உறுதியாக இருந்தது.
காலையில் இருந்து உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்த  அழகனின் அம்மாவின் பாடு இப்போது  திண்டாட்டமாகி விட்டது. .
                                    திருமுருகு , இராமநாதபுரம்

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s