தேவையான பொருட்கள் :
வெள்ளை கொண்டை கடலை – 1 கப்
பார்ஸ்லி – 1 கைப்பிடி (பார்ஸ்லி என்பது மல்லி இலை போன்று இருக்கும்)
வெங்காயம் – 1
பூண்டு – 4 அல்லது 5
சீரகம் – 1 டீ ஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெள்ளைக் கொண்டை கடலையை தண்ணீரில் கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு மிக்சியில் ஊறவைத்த கடலை,பார்ஸ்லி,வெங்காயம், வதக்கிய பூண்டு, சீரகம், தனியாத் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று
கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பிறகு 1 அல்லது 2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து, பிறகு சிறிய வடைகளாகத் தட்டி எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
இப்போது தமையா (falafel) ரெடி.
குறிப்பு: தமையா என்பது அரபுச் சொல். தனியாகவும் சாப்பிடலாம். sandwich ல் வைத்துக் கடைகளில் தருவார்கள்.
fine protein item . Shall we add green chillies, and ginger . If we add onion(country) its
makes special taste.
பார்ஸ்லி புதிது… நன்றி…