கடவுளும், இயற்கையும்

tree 1

 

உடலை விடுத்து உயிரை உணர்தல் இயலாது.

அதனைப் போல, இயற்கையானது உடல் போன்றது. இறைவன் அதற்கு உயிரைப் போன்றவர்.  உலகேங்கிலும் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன.  தாவரங்கள்
குறிப்பாக, மரங்கள் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு
எதுவாக உள்ளது.
இறைமையை உணரவைக்கும் ஆற்றல் இயற்கைக்கு
உள்ளது.  உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய இறைவனை நாம் உணர்தல் வேண்டும்.  கோயிலில் எல்லா உயிரனங்களும் பேணப்பட வேண்டியவை என்பதைக் நடைமுறைப் பழக்கத்தாலும், ஆகமங்கள் மூலமும்உணர்த்தியிருக்கின்றனர் நம் முன்னோர்.   அவர்கள் அதிகம் விளக்கம் எல்லோரிடத்திலும் கூறாமல் சின்னங்கள் மூலமும் செயல்முறையின் மூலமும்  குறிப்பால் உணர்த்தி வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
முருகன் கோயிலில் சர்ப்பக் காவடியும் எடுத்தார்கள்.
மயிலையும் கோயிலில் வளர்த்து வழிபட்டார்கள்.  கொடிய பாம்பின் புற்றையும் பாம்பையும்  கோயில் வளாகத்திலேயே  பாதுகாத்தும் வழிபட்டுள்ளனர்.  பெருமாள் கோயிலிலும் கருடனையும் ஆதிசேசன் என்று சொல்லப்படுகின்ற நாகங்களையும் வைணவர்களும் வழிபட்டு வந்துள்ளனர்.  கோயிலில் நந்தவனங்கள் ஏற்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. கோயிலில் குறிப்பாக தல விருட்சம் ஒன்று கண்டிப்பாக இருந்து வந்ததற்கு இன்றும் தல மரங்கள் சாட்சியாக உயிர்வாழ்ந்தும் வருகின்றன .
 உலகிலுள்ள மரம், செடிகொடிகள் முதலாக மனிதன்
வரையில் நாம் எல்லார்க்கும் செய்யும் உதவி இறைவனுக்குச் செய்யும் நன்மையாகும்.
          ”   பல்லுயிராய் பார்தோறும் நின்றாய் போற்றி !
            பற்றி உலகை விடாதாய்  போற்றி ! “
                                                    – திருநாவுக்கரசர் தேவாரம்.
       ”   எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
            எம்பெருமான் பள்ளிஎழுந்தருளாயே ! “
                                                        –   திருவாசகம் .
சிவயோகியாகிய திருமூலர் ,
      பிறப்பும், இறப்பும் இல்லாத சிவபெருமானை
      ( பரமனை) வணங்காதவர்களும், இரவலர்களுக்கு,
      அதாவது  யாசிப்பவர்களுக்கு   கொடுக்காதவர்களும்,
      குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றி மரங்களை
       வளர்க்காதவர்களும் நரகத்திற்கே  செல்வார்கள்
       என்கிறார் .
           அந்தப் பாடல் இதோ கீழே:
பரவப் படுவான் பரமனை எத்தீர்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே.
  ( பாடலை ஊன்றிப் படித்தால் திருமூலர் உலகுக்கு உதவி செய்யாதவரைப் பார்த்து ,”  நன்மைகளை செய்யாது வாழ்நாளில் பெரும்பகுதி  வாழ்ந்து விட்டீரே   !     இறப்பதற்கு   கொஞ்ச காலம் தானே எஞ்சியிருக்கின்றது!
நரகத்தில் நிற்கப்போகிறீரா ? ” என்று கேட்கிறார் .)
இறை மறுப்பு எண்ணம்  இருந்தாலும்  இருக்கலாம்!
இயற்கை மறுப்பு இருந்தால் நம்மைஅழிக்க வேறு எதிரியை
நாம் தேட வேண்டியதில்லை.  இயற்கையை அழிக்க நமக்கு
உரிமையில்லை.  நம் முன்னோர்கள் அதனை அழிக்க எண்ணியிருந்தால் நமக்கு இந்த வாழ்வு நலமாகக் கிடைத்திருக்குமா!  சிந்திப்போமாக !
tree 2
      விடிந்தால் அடைந்தால் திறக்கும் கதவும்
      விரும்பிப் படிக்கும் செய்தித்தாள்களும்
       விரைந்தோடி ஏறும் பேருந்தின் படிக்கட்டும்
       வியர்வை அடங்க வழிஒதுங்கும் நிழலும்
       பசிவேகம் உடன்தணிக்க உண்ணும் பழங்களும்
        பள்ளியில் உதவிடு  பல்வகைத் தளவாடங்களும்
        பலனாய் நமக்கு மரங்கள் தந்ததே ! – நாளை
        நலன்செய்ய நம்  சந்ததிக்கு என்று எண்ணினால்
         நட்டு வளர்த்து வருவோம்  மரங்களை !  – நாளை
         மழைவேண்டுமெனில், வெட்டப்படாமல்
         மரங்களை மறவாதே  காத்திடுவோம் !
                           –  திருமுருகு

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s