நன்மக்கட்பேறு:
செல்வங்கள் பல . பொன்னும் பொருளும் மட்டும் செல்வமல்ல; மாடுமனை மட்டுமே செல்வமல்ல ;
அறியாமையால் மக்கள் பலர் இவற்றையும், இவற்றைப் போன்றவற்றையும் மட்டுமே செல்வமென்று எண்ணுகின்றனர்.
ஆனால் , உண்மை அதுவன்று . நன்மக்களைப் பெறுவதும்
உயர்ந்த செல்வமே.
நல்ல பிள்ளை குடும்பத்தைத் துலக்குவான் . குலத்தை
விளக்குவான். இதைப்போல் வேறு செல்வங்கள் செய்யுமா?!
பிள்ளைச் செல்வம், புத்திர பாக்கியம் , மக்கட்பேறு என இச்செல்வம் பலவாறு குறிப்பிடப்படுகிறது.
மக்கட்பேறின்றி மனவருத்தமுற்ற தசரதன் அதனைப் பெற
அருந்தவ முனிவர் ஒருவரை நாடினான். அம்முனிவரின் உதவியோடு யாகம் ஒன்று செய்தான் . அதனால் நால்வர் மக்கள் பிறந்தனர் . அவர்களுள் முதல்வன் இராமன் . அவனும்
தந்தையைப் போலவே நல்லியல்புகள் நிறைந்து இருந்தான்.
அன்பு காட்டுவதில் தாய் போன்றிருந்தான் . நலம் பயப்பதில் தவத்திற்கு நிகரானவன். நோய்க்கு மருந்து போல் துன்புற்றார் துயர் துடைத்தான் . பல கலைகளையும் கற்று வித்தகன் ஆனான். இப்படிப்பட்டவனாக இராமன் இருந்ததால் அவன் தந்தை தயரதனின் புகழ் இன்றும் நின்று நலவுகின்றது!
நன்மக்கட்பேறே எல்லா நலன்களையும் தரும் .
எல்லாம் உடையார் எனினும் இனியமக்கள்
இல்லாதார் யாதும் இலர். – ஜெகவீரபாண்டியனார் .
எண்ணிக்கையில் ஒருவனாய் இருப்பதைவிட நாட்டு மக்கள்
எண்ணத்தில் எல்லாம் இருப்பவனாக ஒருவன் திகழ வேண்டும். அந்தப் பிள்ளையே பிள்ளை! அவனைப் பெற்றோரே பெற்றோர் !!
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற ! – திருக்குறள்
– முகவை சங்கரனார்
periyorkal 16 vagaiyaana selvathul santhaanam enru pillaichelvathaiyum kurithiruppathaiyum, koilkalikalil, santhana
ganapathi matrum sowbakya ganapathi iruvaraiyum kannimoolaiyil vaithu vanankivaruvaithum iya sankaranaar
avarkal kurippitathiyum enni magilvutren.
unmaiyil ellam udaiyaar yaar enbathaiyum
purindhukonden. nandri IYYA.
Dear Mr Murugan,
Thanks for visiting and give your valuable comments. Thanks , With Love Lakshmana Perumal.