செல்லமே! சீலமாய் வாழ்ந்து காட்டுவாயா! அப்படி ! !

செல்லமே! சீலமாய் வாழ்ந்து காட்டுவாயா!  அப்படி ! !

பள்ளி சென்று படி! – உடன்

பயில்வோருடன் பழகப் படி! – ஆசிரியருக்கு

பணிந்து படி!

எழுத்து, சொல் மற்றும்

எண்ணும் நன்றாய்ப் படி! – பேசப்படி!

எழுதப்படி ! – முதலில்

ஒழுக்கம் படி! – முதல்

மூன்று வகுப்புவரையில்

உரக்கப்படி ! – ஆம் ! சரியாய்

உச்சரிக்கப் படி !

ஐயம், திரிபு நீங்கப்படி!

அன்றாடம் ஒழுங்காய்ப் படி!

தமிழாம்  தாய்மொழியைத்

தரமாய்ப் படி! – மற்ற மொழிகளும்

முயன்று படி! – நீ

முன்னேறப்படி !

“ஏன்? எதற்கு? எப்படி? “

என்றும் கேட்கப்படி!

இசை, ஓவியம், நடனம் படி!

ஓட்டம்படி! விளையாட்டும்படி!

கலை,பண்பாடு, இலக்கியம் படி!

நீச்சல் படி! வாழ்விலும் – எதிர்

நீந்தப்படி!  – துறைதோறும்

முறையோடு படி!

கம்பனை, வள்ளுவனை ,

இளங்கோவைப்படி ! – அதற்கு முன்

பாரதியாரின்

நூலைப் படி! –  உலக

இலக்கியங்களையும்

உவந்து படி!

நேரமறிந்து படி! – காலம்

கையிற்கிடைத்தல் அரிது! – ஆமாம்,

கருதிப் படி! – வாழ்வில்

உயரப் படி! – அதற்கு

உயர்ந்தோரின் வாழ்க்கையைப் படி! – நமக்கென

உழைத்த தியாகிகளை என்றும்

உள்ளத்தே நினைக்கப்படி!

நேரமறிந்து , விழிக்க, உண்ண

உறங்க, வெளியே நகரப் படி!

பேனாவின் வலிமையறிந்து படி!

கணிதம் படி!  கணினி  படி! – காலம்

கணிக்கவும் படி! – மற்றவரின்

காது மட்டுமன்று, மனமும்

இனிக்குமபடி பேசப்படி!

செவிச் சுவையால் வாழ்வும்

வாய்ச் சுவையால் வயிறும்

வளரப் படி! –  உடலைப் பேணப் படி!

சூழல் பேணப் படி!

சுகாதாரம் காக்கப் படி!

உலகின் இயல்பான சுழற்சிகள்

உன்னால் நிலைகுலையாதிருக்கவும் படி!

அறிவியலனைத்தும்படி! அன்பும்,அருளும்

ஆன்மீகமும் உணரப்படி!  – பெரியோரிடம்

பேசுவது எப்படியென்று படி!   – உலகின்

நன்னெறியாம் அருள்நெறியதற்கு

அன்புநெறியே  முதற்படி !

நன்றாய் வளர வளர

நீ ஆனவரைக்கும் அதனைக்

கடைப்பிடிக்கப் படி!

“நீங்கள்  இப்படி ஒரு பிள்ளையை

பெற்றது எப்படி!  “

என்று மற்றவர்

என்னையும்,

உன் அன்னையையும் கேட்கும்படி,

என் செல்லமே !

என்கண்ணே! கண்மணியே! நீ

சீலமாய்

வாழ்ந்துகாட்டுவாயா?

அப்படி !

7 responses

 1. அத்தனையும் அருமை… பாராட்டுக்கள்… முக்கியமாக :

  மற்ற மொழிகளும் முயன்று படி..! – நீ முன்னேறப்படி…!
  மற்றவரின் காது மட்டுமன்று, மனமும் இனிக்குமபடி பேசப்படி…!

  வாழ்த்துக்கள் பல… நன்றி…

 2. நன்றி தனபாலன் சார். தாராளமாக பகிருங்கள். திரு முருகு அவர்கள் எனது மாமா மகன்தான். மாமா தமிழ் பண்டிட்டாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

  அன்புடன்

  லக்ஷ்மண பெருமாள்.

 3. அன்புள்ள திருமுருகு,

  முழு வடிவமும், படிப்பிற்கான மொத்தப் பிடியையும் உங்கள் கவிதையும் பேனாவும் கையாண்டிருக்கிறது. இதுபோன்ற நீண்ட ஒரே கவிதையாய் இருந்தாலும் முழு வடிவம் கிடைக்கும் போது மனம் நிரம்பி வழிகிறது. முகநூலிலும் தங்கள் கவிதையைப் பகிர்ந்து வருகிறேன்.

  நன்றி.

  அன்புடன்

  லக்ஷ்மண பெருமாள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s