காலை 8மணி , வைகாசி மாதம், வானம்
மேகமூட்டத்துடன் பன்னீர் தெளித்தாற்போல சின்னஞ்
சிறிதாய் தூறியது ! நெல்லை சந்திப்பு நகரப் பேருந்து
நிலையம், அன்று முகூர்த்த நாள், நிலையம் முழுக்க
பயணிகள்கூட்டம்!
” அரசு அலுவலர் குடியிருப்பு ” என்று முகப்பு
பலகையில் எழுதப்பட்டு அரசு பேருந்து ஒன்று வந்து நிற்கவும்,
ஒருபுறம் அதிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்;
பேருந்தில்ஏறுவதற்காக ஓடிவந்த பயணிகளில் சிலர்
கைக்குட்டை,துண்டு, கைப்பை இவற்றைச் சன்னல் வழியே
எதிர்புறம் இருக்கையில் போட்டுவிட்டு பேருந்தின் வாசல்பக்கம்
ஓடினார்கள். தன் ஒரு தோளில் தோள்பையையும், ஒரு
கையில் கைப்பையையும்,ஒரு கையில் தன் மகளையும்
பிடித்துக் கொண்டு, மூட்டை முடிச்சுகளுடனும் கைக்குழந்தை
யுடனும் வந்த தன் மனைவி மற்றும் தம்பி குடும்பத்
தாருடனுமாக வேலனும் அந்தப் பேருந்தை நோக்கி ஓடினான்.
அந்தப் பேருந்தின் பின்வாசற்படிக்கட்டுக்கு எதிர்த்தாற் போல
பேருந்து ஆய்வாளர்கள் இரண்டு பேர் பயணிகளின் பயணச்
சீட்டுக்களை ஆய்வு செய்துகொண்டிருக்க, வேலன் அவர்களை
நெருங்கி , ” சார் !, இந்த பஸ் ஜெபா கார்டன் போகுமா ! “
என்றான்.
அந்த இரு ஆய்வாளர்களில் ஒருவரிடமிருந்து,
‘ கண்டக்டர் -ஐப் போய் கேளுப்பா! ” என்ற பதில் பந்து போல
வந்தது.
வேலன் யோசித்து நடத்துநரை நெருங்கும் முன்னால்,
இதனைக் கவனித்துப் பின்னால் வந்த இளைஞன் ஒருவன்
சொன்னான் ” போகும் சார்! நானும் அங்கதான் போகிறேன்!
ஏறுங்க ! ” என்றான்.
வேலன் தன் குடும்பத்தாருடன் ஒருவழியாக அந்த நகரப்
பேருந்தில் ஏறிக் கொண்டான். இதனைக் கவனித்தவாறே
அந்தப் பேருந்தில் ஏறி வந்த முதியவர் ஒருவர் சொன்னார்!
” ரெண்டு செக் இன்ஸ்பெக்டர்ங்க ஒரு பஸ்சை செக்
பண்றாங்கப்பா ! ஆனா ரூட்டக் கேட்டா கண்டக்டர் கிட்டப்
போய்க் கேட்கணும்மாம்ப்பா ! பொறவு என்னதான் செக்
இன்ஸ்பெக்டரோ ! புள்ள குட்டிகளோடசங்ஷன்ல பஸ்-
ஸ்டாண்ட்ல பஸ் ஏறர்தே இவ்வளவு கஷ்டமாப் போச்சு !
சயின்ஸ் எம்புட்டு வளந்து என்ன பிரயோசனம்! மனுசங்க கிட்ட
மனிதாபிமானமும் ,கடமையுணர்வும் குறைஞ்சே போச்சே!
எல்லாம் காலக் கொடுமைதான் சாமி ! ” என்று அலுத்துக்
கொண்டார்.
பேருந்து தாமிரபரணி ஆற்றுப் பாலத்தைத் தாண்டிப்
போன பிறகும்கூட அவருக்கு அருகில் அமர்ந்திருந்த
வேலனின் மனசு அந்தப் பேருந்து ஆய்வாளரின் பேச்சையும்,
அந்த முதியவரின் பேச்சையும் அசைபோட்டுக்
கொண்டிருந்தது.
— திரு முருகு.
அந்தளவு ‘பொறுப்பு’ உள்ளது… …ம்…
DEAR SIR,
THANKS FOR VISITING THIS WEB-SITE REGULARLY.
WITH REGARDS,
THIRUMURUGU.
மனுசங்க கிட்ட
மனிதாபிமானமும் ,கடமையுணர்வும் குறைஞ்சே போச்சே! உண்மைதான் …
welcom mr. gomathiramalingam.
with regards
Thirumurugu,
Ramanathapuram.