தேவையான பொருட்கள்:
பாலக் கீரை – 1 கட்டு
வெங்காயம்- 1 (சின்ன வெங்காயம் – 5)
பூண்டு – 4 அல்லது 5 பற்கள்
தக்காளி- 1
உருளைக் கிழங்கு – 1
சீரகத் தூள் – 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
உளுந்து – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
செய்முறை:
பாலக் கீரையை 3 முதல் 4 முறை தண்ணீரில் அலசி எடுக்கவும்.
பிறகு வாயகன்ற பத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
அதில் பாதி வெங்காயம், பூண்டு, பாதி தக்காளி, கீரை சேர்த்து சிறிது வேக விடவும்.
ஆறிய பிறகு மிக்சியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் கடுகு,உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் மீதி பாதி,தக்காளி மீதி பாதி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த உருளை சேர்த்து வதக்கி, அரைத்த கீரை சேர்த்து பிறகு உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விட்டு இறக்கவும்
சுவையான ஆலு பாலக் தயார்.
படத்துடன் செய்முறை விளக்கம் அருமை சார்…
செய்து பார்ப்போம்.. நன்றி..