தலைகீழாக ஒரு தவம்

yoga

 

“உன்னோடு பேச வேண்டும் !

கேள்!  நான்

கடவுள் படைத்த
கவிதை!
என்னைக்
கதிரவனும், மதியும்
கண்டுகண்டு போவதுண்டு!
தென்றல் என்தேகத்தை
மென்மையாய் வருடிவிடும் !
தன்வேகம் மாறி புயலானால்
என்னைப் புரட்டியும்போட்டுவிடும்!
பைங்கிளிகளும், மைனாவும்
பலப்பல இனிமை பேசும்!
என்னை நாடிவந்திருந்து
குயில்கள் தனித்தும்
கூடியும் கச்சேரி நடத்தும்;
அணில்கள் ஓடியோடி
அழகாய் விளையாடும் !
மயில்கள் கூட்டங்கூடி
மகிழ்ந்தே நடனமிடும் ! -கூடவே
என் தலையாடும்
இக்கோலம் கண்டுகண்டு
மனிதர் சுவைத்திடில் அவர்தம்
இரத்த அழுத்தம் நிலைப்படும்;
புத்துணர்வும் பெற்ற
அவர்தம் மனம் உள்முகமாய்
தம்வயப்படும் !
என்  வெளிமூச்சு
உயிர்களின்  உள்மூச்சு !
மழை வந்தால் நிறமாறும் நான்
வெயில்  வந்தால் மெருகேறுவேன் !
காற்று அடிக்கடி என்னைத்
தலைகோதும்!
நகராமலே நின்று  நான்
வெய்யில் தாங்குவேன் ! -என்னிடம்
வந்து நிழல் வாங்கும் மானிடம் !
உப்பும், உயிர்ச்சத்துகளும் யாவரும்
உண்பது  வாய்வழியே தானே!
பொதுவாக வாயுள்ள பகுதி தலைப்பகுதி என்றால்
அதில் அதில் புதுமை எதுவுமில்லை!
நானும் உண்பது வாயால்தான்!  – ஆயினும்
என்தலை  பூமிக்குள் புதைந்துள்ளது! – எனது
வேர்ப்பகுதி தலைப்பகுதி என்றிடில்  அதில்
புதுமை எதுவுமில்லை ! தீர்க்கமாய் எண்ணிடில்
புதுமை எதுவுமில்லை! நகராது  தலைகீழாய் நின்று
வாழ்ந்து வரும் நான்  மரம் என்பதுதான்
உயிர் வாழ்வினில் புதுமையன்றோ ?
என் வாழ்வே ஒரு தவம்
வாழ்வே தவம்  வாழ்வே தவமாகும்!
நானாக வாழ்ந்து வாழ்ந்து பல்லுயிர் காப்பது
எனது வாழ்க்கையின்  குணமாகும்! – ஆம்
எனது வாழ்க்கையின் பயனாகும் !
நான்மண்ணுள் முளைத்து
எழுந்த விதை !
நான்
கடவுள் படைத்த கவிதை !
மற்ற உயிர்வகை  அழிந்தாலும் – மனிதா
மௌனமாய்  உறங்குகின்றாய் –  நீ
ஏனோ மனம்போல்  திரிகின்றாய் !
நான்
செய்வது தலை கீழாய்  ஒரு தவம் !
பூமிக்குள் புதைந்து  உறங்காத   என் வேருக்கு
பூமாதேவி நிதம் சொல்லும் வேதம்,
”  ஹே ! வாழு! வாழ விடு “
இதுதான் வாழ்விற்கான திருவாசகம்!
இதுவே எனது யாசகம் !
                                      —  திருமுருகு

2 responses

 1. என்னே சிந்தனை…!

  /// நானாக வாழ்ந்து வாழ்ந்து பல்லுயிர் காப்பது
  எனது வாழ்க்கையின் குணமாகும்! – ஆம்
  எனது வாழ்க்கையின் பயனாகும் ! ///

  இது மனிதருக்கு சொல்லப்பட்டவை அருமையாக…!

  திருமுருகு அவர்களுக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s