இஸ்லாமிய நாடுகளின் BLOOD MONEY சட்டமும் சர்ச்சைகளும்

சவுதி அரேபியாவில் ஒருவர் இன்னொருவரின் தவறால், உதாரணமாக சாலை விபத்துகள் மூலம் இறக்க நேர்ந்தால் , தவறை இழைத்த குற்றவாளி பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஈடு செய்ய வேண்டிய தொகையே ” Blood Money ” என்றழைக்கப்படுகிறது. Diya என அரபில் சொல்கிறார்கள். இது பாதிப்புக்கு உள்ளானவர் என்ன மதத்தைச் சார்ந்தவர் என்பதற்கு ஏற்றாற் போல இழப்பீடு (componsation) வழங்கப்படும். மேலும் எந்த அளவுக்கு குற்றம் செய்தவரின் பங்கு மற்றும் பாதிப்புக்குள்ளானவரின் தவறைப் பொறுத்து இழப்பீட்டுத் தொகை … Continue reading

முஸ்லிம் நாடுகள் உலக அதிகாரத்தைப் பிடிக்க இயலுமா?

This gallery contains 2 photos.

21 ஆம் நூற்றாண்டை உலகில் எந்தெந்த நாடுகள் ஆளும் வல்லமைக்குரியன? குறிப்பாக அமெரிக்காவை வெல்லும் சக்திக்குரிய நாடுகளாக அமெரிக்கா பார்க்கும் நாடுகள் எவை? அவை அந்தத் தகுதியை அடைய வேண்டுமானால் அவற்றுக்கான காரணிகள் என்னவாக இருக்க வேண்டும்?  சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள் மற்றும் முஸ்லிம் நாடுகள் எந்த நிலைமையில் இருக்கலாம்? இதில் முஸ்லிம் நாடுகளின் நிலைமையையும், அமெரிக்காவிற்கு சவால் விடுகிற அளவுக்கு எந்த நாடு உள்ளது என்பதையும், போரென வந்தால் யாருக்கு … Continue reading

நான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க என்ன காரணம்?

நான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க சில காரணங்கள் உண்டு. சில முக்கியப் பிரச்சினைகளை விட்டிருக்கலாம். குஜராத் பற்றியோ  & பிஜேபியின் சாதனைகளைத் தவிர்த்தும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு, ஒப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பிஜேபியை ஆதரிக்கிறேன். 1. பாரதிய ஜனதாவை ஆதரிப்பதில் முக்கியமாக நான் கருதுவது, மாநிலக் கட்சிகளை அடக்கியாள காங்கிரஸ் அளவுக்கு பிஜேபி செய்யாது என்பது என் அனுபவம். ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் அளவுக்கு இழி செயல் செய்யமாட்டார்கள். ஏனெனில், ஒரு ஓட்டில் ஆட்சியை … Continue reading

சிறுகதை ” விடிந்தால் தேரோட்டம் “

This gallery contains 1 photo.

மணி 06.45. கதிரவன் முழுவதாய் மறைந்துவிட்ட மாலைநேரம். தூங்குமூஞ்சி வாகைமரங்களின் இலைகள் எல்லாம் மூடி உறங்கதொடங்கி இருந்தன. ” பிர்ர்!  ” என்ற விசில் சத்தம் .  சத்தத்தைத் தொடர்ந்து ஒரு அரசுப் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவும், “மன்னார்புரம் சந்நிதித் தெரு” என்று நடத்துநரின் குரல் உள்ளேயிருந்து  ஒலிக்கின்றது.  அதனைத் தொடர்ந்து, பேருந்திலிருந்து,நிறைய பேர்கள்  இறங்குகின்றனர். இறுதியாக,  அதிலிருந்து பரதனும், பாரதியும் இறங்கி நடக்கின்றனர்.               ” எல்லாம் இன்பமயம் புவியில் ! ” என்ற எம்.எல்.வசந்தகுமாரியின் … Continue reading

நரேந்திர மோடி

This gallery contains 1 photo.

நரேந்திர மோடி: எதிர்காலத்தில் உனை பேசாப் பொருளாய் மாற்றும் முயற்சிகளில் – இன்று நீ பேசும் பொருளாகி விட்டாய்.   மதம் உனக்குப் பிடித்ததாகக் கூறி உன் மீது சிலருக்கு “மதம்” பிடித்திருக்கிறது. நி(த்)தம் தோறும் உனைப் பற்றிய செய்திகள்தான்… ஆங்கில ஊடகங்களின் வெற்றுப் பூதாகரம் தானாம் நீ. குஜராத் நினைக்கிற அளவுக்கு முன்னேறவில்லை என ஒப்பிட மட்டும் ஆங்கில பத்திரிக்கைகள் அவர்களுக்குத் தேவைப் படுகின்றன என்பதை அறியிலார்… அறிவிலார். இனப் படுகொலைகள் உனதாட்சியில் மட்டுமே நடந்தேறியதாக … Continue reading

சாதியால் சமூக பலன்களே இல்லையா?

This gallery contains 1 photo.

சாதியால் சமூக பலன்கள் உண்டா? இட ஒதுக்கீடு அவசியமா? சாதியை ஒழிக்கப் புறப்பட்டிருக்கும் சமூக  முற்போக்குவாதிகளின்  நிலைப்பாட்டோடு என்னுடைய நிலையையும் முன் வைக்கிறேன். எதில் உண்மையுள்ளது? எது சரி என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். இட ஒதுக்கீடு அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம்தான், சமூக, பொருளாதார அடிப்படையில், சமூகத்தில் பின் தங்கியுள்ளவர்களை முன்னேற்றச் செய்ய இயலும். நிச்சயமாக, அம்பேத்கார் கொண்டு வந்த சட்டத்தின் மூலமாகவே, அதை ஓரளவுக்கு சமன்படுத்த … Continue reading

சாதிகள் எப்போது ஒழியும்?

This gallery contains 2 photos.

சாதிகளை ஒழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்வதால் சாதிகள் ஒழிந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பத் தயாரில்லை.  சாதியைப் பிடித்து வைத்துப் பேசுவதால் சாதிகள் மறுமலர்ச்சி பெறப் போவதில்லை. அது கால மாற்றத்தாலும்,  அரசாங்கத்தை ஆள்பவர்கள் அமைக்கிற சட்ட திட்டங்களினாலும் மட்டுமே சாதிகள் ஒழிவதென்பது நடந்தேறும்.   விவசாயம் சார்ந்த வாழ்க்கைக்குள் இருந்த வரை கல்வி தேவையற்று இருந்தது. அது கிராமங்களின் பிடியில் இருந்த காலக் கட்டங்கள். நிலப் பிரபுத்துவ காலமது. கிராமத்தை நம்பி மனிதர்கள் வாழ்ந்தார்கள். … Continue reading