நரேந்திர மோடி

modi

நரேந்திர மோடி:

எதிர்காலத்தில்

உனை பேசாப் பொருளாய்

மாற்றும் முயற்சிகளில் – இன்று

நீ பேசும் பொருளாகி விட்டாய்.

 

மதம் உனக்குப் பிடித்ததாகக் கூறி

உன் மீது சிலருக்கு

“மதம்” பிடித்திருக்கிறது.

நி(த்)தம் தோறும் உனைப் பற்றிய செய்திகள்தான்…

ஆங்கில ஊடகங்களின்

வெற்றுப் பூதாகரம் தானாம் நீ.

குஜராத் நினைக்கிற அளவுக்கு

முன்னேறவில்லை என ஒப்பிட

மட்டும் ஆங்கில பத்திரிக்கைகள்

அவர்களுக்குத் தேவைப் படுகின்றன

என்பதை அறியிலார்… அறிவிலார்.

இனப் படுகொலைகள் உனதாட்சியில்

மட்டுமே நடந்தேறியதாக

கணக்குக் காண்பிக்கிறார்கள்!?

‘செலக்டிவ் அம்னீசியா’ இருக்கும் போல…

மது பிரச்சினைதான் தமிழகத்தின்

பிரதானப் பிரச்சினை என

பேசுகிற முற்போக்குவாதிகள் தான்

மதுவில்லா மாநிலமாக ஆக்கிய விடயத்தில்

மதி இல்லாதவர்களாகி விட்டார்கள்

தொழிற் புரட்சி காலத்திற்கு

மின் பிரச்சினையைத் தீர்க்க இயலா

அரசை விமர்சிப்பவர்களுக்கு

நீ நீக்கியதைப்

புள்ளி விவரத்துடன் விளக்கினாலும்

பாராட்ட மனமில்லா பகட தாரிகள்.

கூட்டாச்சி தத்துவத்தில்

இனக் கலவரங்களுக்கோ

ஒற்றை மதப் பாதுகாப்போ நிகழாது

எனத் தெரிந்தும் குதிக்கிறார்கள்.

பெரும்பான்மை எதை ஏற்றுக் கொள்கிறதோ

அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே

முற்போக்குத் தனம் என்றால்

நான் தேசத்தின் நன்மை கருதி

பிற்போக்குவாதியாகவே இருந்து விட்டுப் போகிறேன்.

முட்டி முன்னேறுவதால் தானோ நீ மோடி.

4 responses

  1. இப்பொழுதுதான் படிக்க நேரம் கிடைத்தது _(எதற்குமே நேரம் வரவேண்டும்….!)_ நன்றாக உள்ளது. கஷ்டப்படாமல் எதுவுமே கிடைக்காது. கிடைத்த வாய்ப்பை நன்றாக —- நாமும்/மோடியும் — நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s