சிறுகதை ” விடிந்தால் தேரோட்டம் “

ther

மணி 06.45. கதிரவன் முழுவதாய் மறைந்துவிட்ட

மாலைநேரம். தூங்குமூஞ்சி வாகைமரங்களின் இலைகள்
எல்லாம் மூடி உறங்கதொடங்கி இருந்தன. ” பிர்ர்!  ” என்ற விசில்
சத்தம் .  சத்தத்தைத் தொடர்ந்து ஒரு அரசுப் பேருந்து
நிறுத்தத்தில் நிற்கவும், “மன்னார்புரம் சந்நிதித் தெரு” என்று
நடத்துநரின் குரல் உள்ளேயிருந்து  ஒலிக்கின்றது.  அதனைத்
தொடர்ந்து, பேருந்திலிருந்து,நிறைய பேர்கள்  இறங்குகின்றனர்.
இறுதியாக,  அதிலிருந்து பரதனும், பாரதியும் இறங்கி
நடக்கின்றனர்.
              ” எல்லாம் இன்பமயம் புவியில் ! ” என்ற
எம்.எல்.வசந்தகுமாரியின் திரையிசைப் பாடல் மிக அழகாக
ஒலிபெருக்கியில் ஒலித்துக்  கொண்டிருக்கிறது .  சாலையின்
இருபுறங்களிலும், அலங்கார விளக்குகள், மாவிலைத்
தோரணங்கள் ,வாழை மரங்கள் போன்றவை அமைக்கப்பட்டு
ஊரே  அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது .  இருவரும்,
சந்நிதித்  தெருவில் இறங்கி நடக்கின்றனர் .  “லக்ஷ்மி சமேத
ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் தேர்த் திருவிழாவைக்
காண  வரும் பக்தர்களை வருக! வருக !என வரவேற்கின்றோம்”
என்று விளம்பரத் தட்டிகள்,பதாகைகள்  அலங்கரித்துக்
கொண்டிருக்கின்றன.  குறுக்கே செல்லும் கீழ ரத வீதியில்
இடப்புறத்தில் தேர் கம்பீரமாக அலங்கரிக்கபபட்டு நிற்கின்றது.
இடவலமாகச்  செல்லும் கீழ ரத வீதியைக்   குறுக்காகக்  கடந்து
சந்நிதித் தெருவில் இடப்பக்கம் கதவு எண்-16 என்று
குறிப்பிட்டிருந்த வீட்டை நெருங்கி பரதன் அழைப்பு  மணியை
அழுத்தினார் .  ” ஸ்பீக்கர் சத்தத்திலே அவா காதிலே விழல்லே “
இது பாரதி .     இப்போது, அளிக்கதவின் வழியே உள்ளே
பார்வையைச் செலுத்தினர். ” அண்ணா ! மன்னி !  உள்ளே
இருக்கிறா ! ” பரதன் சொல்கின்றார்.  உள்ளே 2ஆம் அறையில் ,
ஏறக்குறைய ,40 வயதுள்ள ஆணும்,பெண்ணுமாகிய இருவர்
உட்கார்ந்து இருந்தது  தெரிந்தது. அவர்கள் இருவரது
பார்வையும் விட்டத்தை வெறித்தபடியே இருக்க அவர்கள்
அழைப்பு மணியின்  ஒலியையோ , வாசற்கதவையோ
கவனித்ததாகத் தெரியவில்லை. பரதன் கதவை  ஓங்கித்
தட்டினார்.  கதவு திறந்துகொண்டது.  ” அவா கதவைக்கூடப்
பூட்டவில்லையா ? ” பாரதி சொல்லிக்கொண்டே உள்ளே செல்ல
பரதன் பின்தொடர்ந்து, இருவருமாக அவ்வீட்டின் 2ஆம்கட்டு
அறையை நெருங்கினர்.
      ஒலிபெருக்கி ஓசையைத் தவிர, வீட்டில்
ஒருதனிமையும் , வெறுமையும் சூழ்ந்திருக்க வீட்டில்
அமர்ந்திருந்த இருவரும், உள்ளே தம்மை இருவர் நெருங்கி
வருவதைக் கொஞ்சம்கூடக் கவனிக்கவில்லை. அந்த
இருவரும் இன்னமும் சுவரில் சாய்ந்தபடியே விட்டத்தைப்
பார்த்தபடியே இருந்தனர்.
       பரதன் பக்கத்தில் வந்து ” அண்ணா! அனந்தராம் அண்ணா! “
என்று சொல்லவும் அந்த ஆணின் பார்வை பரதன் பக்கம்
திரும்பியது.  ” வா! ”  என்று சொல்கிறார். ஆனால், வார்த்தை
வரவில்லை. அதனை அவரது   வாயசைவில் புரிந்தகொண்டார்
பரதன்.  பாரதி அந்தப் பெண்ணை நெருங்கியபோது, அவர்
கவனித்ததாகத் தெரியவில்லை . ” மன்னி !  ஜெயலக்ஷ்மி
மன்னி ! “என்றார் பாரதி . பதில் ஏதும் வராததால்,விட்டத்தையே
பார்த்து இருந்தவரின் தோளைத் தொட்டு உலுக்கி , ”  மன்னி!
நன்னா இருக்கேளா? ” என்றார் பாரதி.  இப்போது இவர்கள்பக்கம்
தலையைத் திருப்பிய அந்தப் பெண்மணி , ” வாங்கோ “
என்பது போல்  தலையை அசைக்கிறார். வீட்டிற்கு வந்த அந்த
இருவரும் அவர்களது அருகில் அமர்ந்தனர்.
        அனந்தராமுவும் , ஜெயலட்சுமியும், மேலே, எதுவும்
பேசவில்லை.  அவர்கள் இருவரும், நாளை நடைபெறுகின்ற
தேர்த் திருவிழாவினால், இம்மியளவுகூட மகிழ்ந்திருக்க
வில்லை என்பதை அவர்கள் முகங்கள் சொல்லின;  அத்தனை
சோகம் அவரகள் முகங்களில் கப்பியிருந்தது ; கண்கள் அழுது
சிவந்திருந்தன .  பரதன்   வாய் திறந்தார், “அண்ணா ! மன்னி !
நீங்க இங்கே இருக்க வேணாம் !  மனசு ரெம்பக் கஷ்டப்படும் !
இப்பவே எங்ககூட பாளையம்கோட்டைக்கு வந்திடுங்கோ!
நாம்ப போயிடலாம் ! “
        பரதன் சொல்லி முடிக்கவும் , மின்சாரம் தடைப்படவே
வீட்டிலும்,சந்நிதித் தெரு மற்றும் ரத வீதிகளிலும் மிகப்பெரும்
அமைதி நிலவுகிறது.  வாசலில் ஆட்கள் நடமாட்டம், செருப்புச்
சத்தம் , பேச்சரவம் போன்ற சத்தங்கள் மிகத்தெளிவாகவே
கேட்கின்றது.
    இப்போது , ” டேய் மணி!  நான் சொன்னேன்லாடா! முரளின்னு
ஏழு வயசுப் பையன் ஒருத்தன் போன வருஷம் இந்தக் கோயில்
தேரோட்டம் நடந்த அன்னக்கி, தேர்ச்சக்கரத்துல மாட்டி நசுங்கி
இறந்துட்டான்னு ! அவனோட அப்பா, அம்மா  இந்த வீட்ல
தாண்டா இருக்கிறாங்க !   விடிஞ்சா காலைல தேரோட்டம்!
பாவம்டா  அவங்க !  அவங்க மனசு என்ன பாடுபடும்? என்று
ஒருவன் தன்கூட வந்தவனிடம் கூறிக்கொண்டே போக, அந்த
உரையாடலைக் கேட்ட இறந்துபோன முரளியின் வீட்டிலிருந்த
அந்த நான்குபேரும் தேம்பித் தேம்பி அழுகின்றார்கள் !
– திருமுருகு

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s