நான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க என்ன காரணம்?

நான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க சில காரணங்கள் உண்டு. சில முக்கியப் பிரச்சினைகளை விட்டிருக்கலாம். குஜராத் பற்றியோ  & பிஜேபியின் சாதனைகளைத் தவிர்த்தும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு, ஒப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பிஜேபியை ஆதரிக்கிறேன்.
1. பாரதிய ஜனதாவை ஆதரிப்பதில் முக்கியமாக நான் கருதுவது, மாநிலக் கட்சிகளை அடக்கியாள காங்கிரஸ் அளவுக்கு பிஜேபி செய்யாது என்பது என் அனுபவம். ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் அளவுக்கு இழி செயல் செய்யமாட்டார்கள். ஏனெனில், ஒரு ஓட்டில் ஆட்சியை விட்டவர்கள். காரணம் நாடறிந்ததே. மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டே ஆளும், கேடு கெட்ட தனங்கள் நடக்காமல் இருப்பதே நமக்கு நல்லது.
2 மாநில உரிமையை காங்கிரஸ் அளவிற்கு பிஜேபி நசுக்காது. நிச்சயமாக உதவி செய்யாவிட்டால்கூட, உபத்திரவம் செய்யாது என நம்புகிறேன். மாநிலக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தில் அதிக பங்கெடுக்க பிஜேபி ஆளும் போது வாய்ப்பு கிடைக்கும். (சீட்டைப் பொறுத்துதான் என்றாலும்). கூட்டாட்சியின் கீழ் இருப்பதால், அதற்கான சுதந்திரம் காங்கிரசைக் காட்டிலும், பிஜேபியில் அதிகம் என நம்புகிறேன்.
3இந்தியாவில் கம்யுனிஸ்ட் பல ஆண்டுகளாக ஆண்ட மேற்கு வங்கம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பது நம் முன்னால் இருக்கும் உதாரணம். தானும் படுக்க மாட்டார்கள் தள்ளியும் படுக்க மாட்டார்கள் என்ற ரகத்தோடு என்னால் ஒத்துப் போகவே முடியாது. நான் வலதுசாரியாக அடையாளப்படுத்த ஒருநாளும் தயங்குவதில்லை. கம்யுனிஸ்டுகளின் கொள்கைகள் புதிய பொருளாதாரத்திற்கு ஒருபோதும் உதவாது. உலக அளவில் வணிகம் எவ்வாறு செல்கிறது என்பதை கம்யுநிச்த்வாதிகள் ஏற்காமல் இருக்கலாம். Globalisation மூலம் வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்திலுள்ளது. சில வகைகளில் நான் தாராளமயமாக்கலை ஆதரிக்கவில்லை. அது எந்தத் துறைகளில் இருந்தால் நல்லது என்பதில் பல யோசனைகளுண்டு.  கம்யுனிசத்தின் சித்தாந்தம் ஏற்கனவே குப்பைக்கு சென்ற ஒன்று. தனி நபர்களாக சில பேர் மீது எனக்கு மதிப்புண்டு. ஆனால் கொள்கையிலும், அவர்களுக்கு ஆளக் கிடைத்த இரண்டு மாநிலத்திலும் அவர்கள் அதிகமாக செய்தது, வேலை செய்யாமல் “நோக்குக் கூலி” வாங்குகிற பழக்கத்தை கொண்டு வந்ததுதான், உழைப்பாளிகளுக்கு அவர்கள் செய்த சேவை! ஆகையால், கம்யுனிஸ்ட்டை எந்தக் காலத்திலும் ஆதரிக்கப் போவதில்லை.
4.தேசிய அளவில் காங்கிரஸ் மதச்சார்பின்மை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுதான், பிஜேபிக்கு எதிராக அரசியல் செய்கிறது. ஊடகங்களின் ஆதரவில் மறைக்கப்பட்ட விடயங்கள் ஆயிரமுண்டு. காங்கிரஸ் அளவுக்கு ஊழல் மலிந்து கிடைக்குமா  என்று தெரியாது. காங்கிரசை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சிறிதேனும் குற்ற உணர்ச்சி எதுவுமில்லாமல் செயல்பட்ட காரணத்தினால் என்ற ஒரு விடயத்திற்காக மட்டுமே காலம் முழுக்க எதிர்த்துக் கொண்டிருக்கலாம்.
5.மாற்றம் இந்த முறை தேவைப்படுகிறது. அதற்கு பிஜேபியே சிறந்த கட்சி என நான் கருதுகிறேன். அவர்கள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைப் பொறுத்தே அவர்களின் எதிர்காலம் இருக்குமென்பதை உணர்கிறேன்.
6. இத்தாலி பெண்ணின் கைப்பாவையாக இந்தியா இருக்க வேண்டுமென்று சிந்திக்கிற அளவுக்கு நான் பரந்த மனத்தினன் அல்ல.
7. பிஜேபியிடம் தவறுகளே இல்லை என்பதல்ல என் வாதம். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்டைக் காட்டிலும் பிஜேபி ஆகச் சிறந்த கட்சி என்று நம்புவதாலேயே ஆதரிக்கிறேன்.
8.ஹிந்துத்துவா உலக அரசியலுக்குத் தேவை என்றே கருதுகிறேன். முஸ்லிம் நாடுகளையும், கிருத்துவ நாடுகளையும் எடுத்துப் பாருங்கள். சிறுபான்மையினருக்குத் தேவையான சலுகைகள் யார் கொடுக்கிறார்கள் என்று…. முஸ்லிம் நாடுகளில் இந்துக்களுக்கு கிடைக்கும் நீதியின் அடிப்படையில் பார்த்தால் அரசியலுக்காகவேனும் ஹிந்துத்துவா ஸ்லோகன் தேவையென நான் கருதுகிறேன். உலகம் எவ்வாறு செல்கிறதோ அவ்வகையில் அரசியல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை வரவேற்கிறேன். நிச்சயமாக என்னுடைய இந்தக் கருத்துப் பலரும் பல கோணத்தில் விமர்சிக்கக் கூடும். இது ஒன்றுதான் நான் ஏதோ பிஜேபியை ஆதரிக்கக் காரணம் என்றும் சொல்லக் கூடும். அதில் தவறில்லை. முஸ்லிம் நாடுகள் கோவிலைக் கட்டி கும்பிடக் கூட அனுமதிப்பதில்லை என்பதைப் பற்றி முதலில் சிந்தித்து விட்டு என்னைத் தாராளமாகத் திட்டலாம். இந்துத்துவாவை வைத்து அரசியல் செய்வதை சகிக்க இயலாது என்பவர்கள் சிறுபான்மையினரின் ஓட்டைக் குறிவைத்தே செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்குள் இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை, சிறுபான்மையினர் ஒன்று சேர்வதைப் போல பெரும்பான்மை சமூகம் ஒன்று சேராது என்று நன்றாகத் தெரியும். இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க பிஜேபியே நினைத்தால்கூட நடக்காது என்பது நமக்குத் தெரியும்.
9. ஒரு நண்பர் இரு கேள்விகளை முன் வைத்தார். 1. இரு மாநிலங்களிலும் கம்யுனிஸ்ட் நன்றாக செயல்படாததிற்கு மேலே மாநில அரசுகளை கட்டுப்படுத்தியது (காங்கிரசின் தன்மை)காரணமாக இருக்க முடியாதா?

2. இந்த மூன்று தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்காமால் மாநில தலைவர்களால் ஆளும் சூழல் BJP ஆளும் சூழலை விட மோசமாகத்தான் இருக்குமா?

என்னுடைய பதில்:
1. இரண்டு கேள்விகளுக்கும் நடைமுறை அனுபவம் மட்டுமே பலனளிக்கும் என்று தோன்றுகிறது. 5 வருடத்திற்கு ஒருமுறை ஆட்சி மாறினால் கூட கொள்கை சார்ந்தோ, அரசியல் ஆதாயம் காரணமாகவோ சில நல்ல எதிர்காலத் திட்டங்கள் நடந்தேறாமல் போக வாய்ப்புண்டு. காங்கிரஸ், மேற்குவங்கத்தில் எப்போதேனும் ஆட்சியைக் கலைத்திருக்கிறதா? 35 வருடமாக தொடர் ஆட்சி செய்த மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் மேற்கு வங்கமும், கேரளாவும் பல மடங்கு பின் தங்கியுள்ளது(பெரும்பாலான விடயங்களில்) என்பதற்கான ஆய்வுக் கட்டுரைக்கான link அனுப்பி வைக்கிறேன்.

2. யார் பிரதமர் என்பதில் ஆரம்பிக்கும் ஈகோவிற்கான விடை தெரிந்தால் மட்டுமே நம்மால் சொல்ல இயலும். அரசியல் ரீதியாக காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆதரவு இல்லாமல் இவர்கள் காலம் தள்ள இயலாது. நிச்சயம் இரு கட்சிகளுமே அந்த விடயத்தில் காலை வாரி விட்டு விடும். இல்லையென்றாலும் கூட, மாநிலக் கட்சிகளே காலை வாரி விடும். தேவகவுடாவுக்கு நடந்ததை நாம் பார்த்தோமே.

இன்னமும் பல காரணங்கள் இருக்கின்றன. அவை தற்கால அரசியல் அடிப்படையில்மட்டுமே அமையுமாதலால் அவற்றை தவிர்த்து விட்டேன். பிஜெபி, காங்கிரஸ், கம்யுனிஸ்ட் ஆகிய மூன்றிலும் பிஜேபியை நான் ஆதரிக்க இதுதான் காரணம். எது சரி, எது தவறு என்பதில் வாழ்க்கை நகரவில்லை. இருப்பதில் எது சிறந்தது? என்பதன் அடிப்படையில் மட்டுமே அரசியலில் தேர்ந்தெடுக்க இயலும். அதன் அடிப்படையில், அடுத்த தேர்தலில் பிஜேபி வந்தால் நன்று என்பதே எனது கருத்து.

7 responses

 1. நீங்கள் எழுதிய இந்த கட்டுரையில் BJP பத்தி அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று சொல்வதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது,ஆனால் நிஜம் என்பது வேறாக இருக்கிறது. ஒரே ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவ,இந்து இருக்கிறார்கள், இவர்களுக்குள்ளே திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்,ஒற்றுமையாக இருக்கும் அவர்கள் அரசியல் பற்றிபேசும் போது(கவனிக்கவும் அரசியல் பேசும் போது)மத சண்டையாக மாறுகிறது. இது வேதனை அளிக்ககூடியதாக இருக்கிறது. கிறிஸ்தவ நாடுகளில் எந்த நாட்டில் இந்து மதம் வளர தடை செய்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? மதங்கள் என்பது CBSC ,TSSE ,MATRICULATION போன்று ஒரு SYLLABUS மட்டுமே,எல்லாமே இறை கல்வியையே கொடுகிறது. நாம் தான் நான் படிப்பது தான் நல்லது மத்தவங்க படிப்பது கேட்டது என்று புத்தி இல்லாமல் கூப்பாடு போடுகிறோம். அரசியல் என்பது ஒரு மதத்தை சார்ந்து இருக்கவே கூடாது என்பது என்னுடைய கருத்து.

  • உண்மைதான். கிருத்துவ நாடுகளில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணமில்லை. ஆனால் உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. அவ்வாறிருக்கும் கிருத்துவ நாடுகள் ஏன் இஸ்லாமியருக்கு விசா கொடுக்க மறுக்கிறது? ஏன் பர்தாவை வைத்து முகத்தை மறைக்கக் கூடாது என சட்டம் போடுகின்றன. இஸ்லாமிய நாடுகளை ஏன் கிருத்துவ நாடுகள் எதிரியாகக் கருதுகின்றன. அவர்களுக்குள்ள பயம், எங்கே இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேருமோ என்ற அடிப்படையில் ஆயில் வளமுள்ள நாடுகளை கையில் வைத்துக் கொண்டு செய்கிற அரசியல் தெரியுமா? இஸ்லாம் நாடுகளில் கோவில் கூட வைக்க அனுமதிப்பதில்லை. கிருத்துவ நாடுகள் இஸ்லாமியனை மட்டும் எதிரியாகக் கருதுகின்றன. மத அடிப்படையிலான உலக அரசியல் இவ்வாறுதான் உள்ளது நண்பரே…

   • கிறிஸ்தவ நாடுகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கோ,அவர்கள் சுதந்திரதிருக்கோ அவர்கள் தடை விதிக்கவில்லை. மதத்தின் பேரில் பெண்களின் சுதந்திரம் பறிக்கபடுவதாக அந்த நாடு நினைக்கிறது அதனால் அதை தடை செய்கிறது. அதே நாடுகள் இன்று கிறிஸ்தவ கோட்பாடுகள்படியா நடக்கிறது? இல்லையே. முஸ்லிம் நாடுகளில் நடப்பது உண்மைதான் ஆனாலும் உலக நாடுகளின் முன்னில் இன்று ஐக்கிய அரபு நாடுகள் போன்ற வளைகுடா நாடுகள் கோவில்கள் கட்ட அனுமதி அளித்து கிறிஸ்தவ,இந்து ஆலயங்களில் ஏராளமானோர் தொழுதுகொள்ள அனுமதிக்க படுகிறார்கள் என்பது உண்மை. நாம் நம்முடைய கலாச்சாரத்தை முன்னுக்கு அழைத்து செல்லவேண்டுமே தவிர கீழ்நோக்கி கொண்டுசெல்லகூடாது. நம்முடைய முந்தய தலைமுறையினரை வைத்தது போல் BJP அரசியல் அமைப்பை பயன்படுத்தி மக்களை அடிமையாகும் முயற்சியை தான் செய்யும் என்பது என்னுடைய கருத்து. மற்றபடி சிறுபான்மையர் என்றபேரில் செய்யும் சலுகைகள் தடுக்கப்படவேண்டும் அதுவும் ஒரு நடுநிலையான அரசால் மட்டுமே செய்யப்படவேண்டும்.

 2. நீங்கள் சொல்வதுதான் பேச்சுக்கு அழகாக இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளைப் பார்க்கிற அரசியலும், இஸ்லாம் நாடுகளில் பிரிவினைகளை உண்டுபண்ணி அவைகள் செய்கிற சேட்டையையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையோ என்ற அச்சமுள்ளது. நான் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தவன்தான். அந்த கோவில் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மதவாத அரசியல் உலகம் முழுமைக்கும் உள்ளது. இதில் நீ மட்டும் ஏன் இப்படி மாறப் பார்க்கிறாய் என்ற கேள்விகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. உலகம் முழுவதும் அடுத்தவனை மத மாற்றம் செய்யும் சேவைகளை செய்கிற மதத்தைக் காட்டிலும் மோசமான செயல் என்ன இருக்க முடியும்?

  • நண்பரே அந்த நாட்டில் வேறு மதத்தினர் அதிகமாக வேறு நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.அதனால் அரசியல் ரீதியாக பல நடைமுறைகள் இருக்கலாம் ஆனால் இங்குஅப்படி இல்லை நம்முடைய நாட்டை சேர்ந்தவர்கள் தான் பல மதத்தவராக இருகின்றனர் அவர்களை அரபு நாடுகளோடு ஒப்பிடுவதே தவறு.

   • வெள்ளைகாரன் அதிகமாக எவ்வளவு கொள்ளை அடித்தானோ அவ்வளவு நல்லது அதே நாட்டு மக்களால் இங்கு செய்யபட்டிருகிறது, உதாரணத்துக்கு எங்கள் ஊரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை கலரா நோய் வந்தால் செத்துதான் போகவேண்டி இருந்தது,நெய்யூர் மருத்துவமனை பற்றி தெரிந்தவரிடம் கேட்டுகொள்ளுங்கள் அது அதே கிறிஸ்தவ ஊழியர்களால் இங்கே நிறுவப்பட்டு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்கள். இன்றுகூட நாம் நம்முடைய சகோதரர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்கிறோம் என்று எண்ணி பாருங்கள். கோவில் உண்டியலில் காணிக்கை போடுகிறோம் அதை யார் சாப்பிடுகிறார்கள்?முதலில் நாம் நம்முடைய தவறுகளை திருத்தி நாம் நடந்தால் நம்மை வீழ்த்த யாரால் முடியும்? இப்போது தான் சில குருகுலம் என்று சொல்லி சில நன்மைகள் செய்கிறதை பார்க்க முடிகிறது.நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள் இங்கே உண்முற்றவர்களுக்காக,காது கேளதவர்களுக்காக,மன நிலை சரி இல்லாதவர்களுக்கு என்று எத்தனையோ அன்பு இல்லங்கள் இருக்கிறது. இது அத்தனையும் வெளிநாட்டினரால் துவங்கப்பட்டது. வெள்ளைகாரனுக்கு முன்பும் பின்பும் நாம் நம்முடைய உறவுகளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

 3. உங்களுடைய கட்டுரை மிகத்தெளிவாக எழுதப்பட்ட நல்ல கட்டுரை! இதன் எந்த வரிகளும் என்னுடன் ஒத்துப்போகின்றன! காங்கிரஸ் வேண்டாம்; இருந்தாலும் பி.ஜெ.பி யா? என்பவர்கள் எந்த மாற்றினையும் முன் வைக்கமுடியாதவர்கள்; பின் என்ன காம்ரேடுகளையா நம்புவது; அவர்கள் மீண்டும் குழைந்துகொண்டு காங்கிரஸிடமல்லவா செல்வார்கள்? அவர்கள் செயல்பாட்டுக்கு தொழிற்சங்கமே போதும்; நாட்டையும் நாறடிக்க வேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s