முஸ்லிம் நாடுகள் உலக அதிகாரத்தைப் பிடிக்க இயலுமா?

muslim nation1

21 ஆம் நூற்றாண்டை உலகில் எந்தெந்த நாடுகள் ஆளும் வல்லமைக்குரியன? குறிப்பாக அமெரிக்காவை வெல்லும் சக்திக்குரிய நாடுகளாக அமெரிக்கா பார்க்கும் நாடுகள்
எவை? அவை அந்தத் தகுதியை அடைய வேண்டுமானால் அவற்றுக்கான காரணிகள் என்னவாக இருக்க வேண்டும்?  சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள் மற்றும் முஸ்லிம் நாடுகள் எந்த நிலைமையில் இருக்கலாம்? இதில் முஸ்லிம் நாடுகளின் நிலைமையையும், அமெரிக்காவிற்கு சவால் விடுகிற அளவுக்கு எந்த நாடு உள்ளது என்பதையும், போரென வந்தால் யாருக்கு தலைமை தாங்கும் சக்தியும் உள்ளது என்பதை ஆராய்வதே கட்டுரையின் நோக்கம்.
முஸ்லிம் நாடுகளுக்கும் கிருஸ்தவ நாடுகளுக்கும் இடையே எப்போதுமே ஒரு மறைமுக எதிர்ப்பு உண்டு. சில முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவை ஆதரித்தாலும் கூட அந்நாட்டு மக்கள் அமெரிக்காவை எதிரியாகவேக் காண்பார்கள். மக்களைப் பொருத்தவரையில் தன்  நாட்டு வளங்களை அமெரிக்கா கொள்ளையிட்டு செல்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு.  இம்மாதிரியான அரசியல் சூழ்நிலைகளில் ஒருவேளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எந்த நாடு முன்னெடுத்துச் சொல்லக் கூடிய வல்லமை உண்டு என்பதைக் காணலாம்.
ஒரு நாடு போருக்கான தலைமைப் பொறுப்பை வகிக்க வேண்டுமானால் முதலில் அந்த நாட்டின் மக்கள் தொகை, பொருளாதார வளம், நிலவியல் சார்ந்த அரசியல் சூழல் (geopolitics ), ராணுவ வலிமை மற்றும் அரசியல் கூட்டுத் தன்மை போன்ற காரணிகள் மிக முக்கியமானவையாக உள்ளது. அதைக் கணக்கில் வைத்து, எந்த முஸ்லிம் நாடு அந்த பலத்தைக் கொண்டுள்ளது ? அவைகளால் உலக வல்லரசு நாடுகள் அல்லது கிருஸ்தவ நாடுகளை எதிர்க்கக் கூடிய வலிமை உள்ளதா? என்பதைப் பார்ப்போம்.
முஸ்லிம் நாடுகளின் வரிசையில் இந்தோனேசியா தான்  முஸ்லிம் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. அதன் மக்கள் தொகை 243 மில்லியன் ஆகும். உலக வங்கியின்  ஆய்வறிக்கைப் படி அதன் GDP 6.2 % ஆக உள்ளது.  இந்தோனேசியாவால் தன்னுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதே அதற்கு பெரும் சிரமமாக இருக்கிறது.  இந்தோனேசியா எந்த நாட்டையும் அச்சுறுத்தும் நிலையில் இல்லை என்பது ஒரு புறம் உள்ளது. கிட்டத்திட்ட 32 மில்லியன் மக்கள் ஏழைகளாக உள்ளதாகவும், 50 % மக்களுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்கள் இல்லாத நிலையிலும் அது உள்ளது. ஆகையால் தன்னிறைவில்லாத சூழ்நிலையில், இந்தோனேசியா மிகப் பெரிய முஸ்லிம் நாடாக இருந்தாலும் தலைமைப் பொறுப்பை ஏற்க இயலாத சூழலும், அதனால் எந்த நாட்டையும் அச்சுறுத்தும் சூழலிலும் அது இல்லை என்பதே நிதர்சனம்.
முஸ்லிம் நாடுகளில் பாகிஸ்தானின் மக்கள் தொகை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் மக்கள் தொகை 172 மில்லியனாக உள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுதக் கொள்கைக்கும் ராணுவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் பாகிஸ்தான் முஸ்லிம் நாடுகளுக்குத் தலைமை ஏற்று நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. 1. பொருளாதார ஸ்திரத்தன்மையின்மை. 2. அரசியல் ஸ்திரத்தன்மையின்மை. 3. நிலவியல் சார்ந்த சிக்கல் ஆகியவற்றை  எதிர்கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உள்நாட்டு தீவிர வாத அச்சுறுத்தலை சமாளிப்பதே பெரும்  பணியாக உள்ளது. புவியியல் அமைப்பில் இந்தியா அதன் கிழக்குப் பக்கமும், சீனா மற்றும் ரஷ்யா அதன் வட பக்கமும், ஆப்கானிஸ்தான் கிழக்குப் பக்கமும் அமைந்துள்ளது. இதுபோன்ற நிலவியல் சார்ந்த பிரச்சினைகளையும், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையுள்ள பாகிஸ்தானால் முஸ்லிம் நாடுகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்று எந்த போரையும் எதிர் கொள்ள இயலாது என்பதே உண்மை.
மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் எகிப்து உள்ளது. அதன் மக்கள்தொகை 82.5 மில்லியனாக  உள்ளது. மிகப் பெரிய அரபு நாடு என்ற பெருமையையும், பல பண்பாட்டு அடையாளங்களையும் கொண்ட எகிப்தின் வரலாற்றையும் அதன் தற்போதைய நிலையையும் சுருக்கமாகக் காண்போம்.
கமால் அப்துல் நாசரின் ஆட்சிக் காலத்தில் அரபு நாடுகளின் தலைமை நாடாக இருந்த பெருமையைக் கொண்ட எகிப்து அவரின் காலத்திற்குப் பிறகு தன்னுடை ஆளுமையை நீட்டிக்க இயலவில்லை.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உலக நாடுகளில் ஐம்பத்தி ரெண்டாவது இடத்தில் எகிப்து விளங்குகிறது. மேலும் கடந்த ஆண்டில் அதன் GDP 125 மில்லியன் டாலராக இருந்தது. ஆனாலும் அங்கு ஏற்பட்ட மக்கள் புரட்சிக்குப் பின்னரும், பெரிய அளவில் இன்னமும் மக்கள் பயன் பெறவில்லை. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள்ளாக அரசியல் ஸ்திரத்தன்மையையும், வேலை வாய்ப்பு மற்றும் இதர முஸ்லிம் நாடுகளோடு நட்புறவையும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதால்
எகிப்து தலைமை ஏற்கும் வலிமை அதனிடம் இல்லை என்பதே உண்மை.
muslim nation2
அடுத்து ஈரான். பெரும்பாலும் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவோடு, நல்லுறவு பேணுதல் அல்லது ஒத்தூதுதல் அல்லது பகையையாவது வளர்க்காதிருக்க என்னென்ன அரசியல் சித்தாந்தங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அத்தனையும் செய்து வருகின்றன, ஈரானைத் தவிர. ஈரான் மட்டுமே அமெரிக்காவிற்கு அணு ஆயுதக் கொள்கை, ஆயில் இறக்குமதிக் கொள்கை என ஒவ்வொன்றிலும் தனது வலிமையைக் காட்ட முயலுகிறது.
ஆனால் ஈரானால் முஸ்லிம் நாடுகளின் தலைமையேற்று கிறிஸ்தவத்திற்கு எதிரான போரை முன்னின்று நடத்த இயலுமா? ஈரானின் வலிமை என்ன? ஈரான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈரானின் உள்நாட்டு உற்பத்தி ஸ்திரமாகவே உள்ளது. 6% க்கும் மேலாக GDP, கடந்த சில வருடங்களாக உள்ளது. ஈரான் உலக பொருளாதாரத்தில் 29 ஆவது இடத்திலும், GDP யில் 300 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்தியை ஈட்டியுள்ளது. நிச்சயமாக உற்பத்தியை வைத்தோ, மக்கள் தொகையை மட்டும் வைத்தோ அதன் தலைமையை நிர்ணயித்து விட முடியாது. அதையும் தாண்டி அண்டை நாடுகளுடனான நட்புறவும், ராணுவ வலிமையும் மிக முக்கியப் பங்காற்றுபவை. அவ்வகையில் ஈரான் சில சிக்கலுக்குள் உள்ளது. நமக்குத் தெரிந்தவரையில் அமெரிக்காவிற்கு சவால் விடும் முஸ்லிம் நாடாக  ஈரான் மட்டுமே தெரிகிறது. ஆனால் அது அதற்கான வலிமையோடு சவால் விடுகிறதா என்ற கேள்வி உள்ளது.
முஸ்லிம் நாடுகளில் தற்போது நிலவுகிற சுன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்குமான பிரச்சினைதான் பல உள்நாட்டு புரட்சிகளுக்குக் காரணம். இன்னமும் சொல்லப் போனால் அதுதான் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாமல் இருக்கச் செய்வதற்குப் பிரதான காரணம்.
ஈரானைப் பற்றி பேசுமுன் புரட்சி ஏற்பட்ட சில முஸ்லிம் நாடுகளைப் பற்றி சொல்லி விடலாம். லிபியா, எகிப்தில் மட்டுமே ஆட்சியாளருக்கு எதிரான போராட்டங்கள் அரசியல் உரிமையையும் மக்களின் தேவைகளை அரசு செயல்படுத்தாத தன்மையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. மற்ற நாடுகளில்  சுன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்குமான பிரச்சினையை ஒட்டியதே.
பஹ்ரைனைப் பொருத்தவரையில் சுன்னி இனத்தைச் சேர்ந்த மன்னர் ஆட்சியாளராக உள்ளார். ஆனால், பெரும்பான்மையான மக்கள் ஷியா இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்தான் புரட்சி வெடித்தது. போராட்டத்திற்கு ஷியா மக்கள் அதிகமாக வாழும் நாடான ஈரான்   ஆதரவு தெரிவிக்கிறது. இந்நிலையில் சவூதி மன்னர் அப்துல்லா நிறைய பொருளுதவியும் ராணுவ சலுகையையும் அளித்து பிரச்சினையை அடக்கி வைக்கச் செய்கிறார். காரணம், சவுதியின் மன்னராக இருக்கும் மன்னர் சுன்னி இனத்தைச் சேர்ந்தவராகவும் சவுதியில் பெரும்பான்மை இனமாக சுன்னி முஸ்லிம்களும் இருக்கின்றனர். அங்கும் கூட கிழக்கு சவூதி பகுதியில் (பஹ்ரைன் எல்லைப் பகுதிக்கருகில்) ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். மன்னர் அப்துல்லா வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி பிரச்சினை எழாது பார்த்துக் கொள்கிறார்.
இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு நடத்தும் கூட்டங்களுக்கு ஈரானை அழைப்பதில்லை. இதற்கு பின்னால் இருக்கிற அரசியல், சுன்னி இனத்தவருக்கும் ஷியா இனத்தவருக்குமான பிரச்சினையே!
இன்றளவு நீடிக்கிற சிரியா உள்நாட்டு கலவரங்களுக்குக் காரணமும் அதுவே.
ஈரானை எடுத்துக் கொள்வோமேயானால் சியா இனத்தைச் சேர்ந்த
முஹம்மது  அஹ்மத் நிஜாத் அதிபராக உள்ளார். சுன்னி இனத்தைச்  சேர்ந்தவர்களும் ஈரான் எதிர்ப்பு அரபு நாடுகளும் ஈரானை ஏற்றுக் கொண்டோ அதன் பின்னால் அணிவகுக்கவோ துளியும் விரும்பவில்லை.
ஈரானின் நிலவியலை வைத்துப் பார்க்கையில் ஆப்கானிஸ்தான் கிழக்குப் பக்கத்தில் உள்ளது. அது ஈரானுக்கு சாதகமான அம்சமே. அதன் வட பக்கத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவோடு இணைந்து செயல்படுதல் அதற்கு நலம் வகித்தாலும் ஈரான் தன்னை நிறையவே முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஈராக்கை அடைய அது விரும்பினாலும் ஈராக் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது அதற்கு ஒரு தடையே.
எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது ஈரானை அமெரிக்காவால் எளிதாக நசுக்கி விட முடியும். ஈரான் முதலில் தனது எல்லையில் (வளைகுடா) முதன்மை இடத்தைப் பெறுவதில் அக்கறை செலுத்துவதே அதற்கு நலம் வகிக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவிக்கிறது. ஈரான் எதிர்ப்பதை வெகு காலத்திற்கு அமெரிக்கா சகித்துக் கொண்டிருக்காது என்றே தோன்றுகிறது.
மேற்கூறிய நாடுகளுக்கும் துருக்கிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஐரோப்பிய கலாசார வாழ்வியலை வைத்துக் கொண்டுள்ள நவ நாகரிக முஸ்லிம் நாடுதான் துருக்கி என்பது குறிப்பிடத் தக்கது. துருக்கியின் தற்போதைய வளர்ச்சி என்பது அபரிமிதமான, அதே நேரத்தில் மிகவும் ஸ்திரத்தன்மையுடன் கூடிய வளர்ச்சியும்கூட.
75 மில்லியன் மக்கள் தொகை கொண்ட துருக்கி, உலக பொருளாதாரத்தில் 17 ஆவது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டின் கணக்கின் படி 660 பில்லியன் டாலர் GDP என்ற அளவுக்கு அதன் வளர்ச்சி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக துருக்கியின் பொருளாதார வளர்ச்சி என்பது உலகின் மிகப் பெரிய நாடுகளில் முதன்மையானதாக உள்ளது. அது கடந்த ஐந்து ஆண்டுகளாக 5 டு 8%ஆக நிலைத் தன்மையோடு முன்னேறி  வரும்  நாடாக விளங்குகிறது.
துருக்கியை அவ்வளவு எளிதாக மற்ற முஸ்லிம் நாடுகளைப் போல் கணக்கில் கொள்ளலாகாது. துருக்கியின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே அதற்கு சாதகம் என்றில்லை. புவியியல் சார்ந்தும் அதன் அமைப்பு மிக சாதகமாகவே உள்ளது. அதன் ஒருபுறம் ரஷ்யாவும், இன்னொரு புறம்  மத்திய கிழக்கு நாடுகளும் , மற்றொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளும் அமைந்துள்ளது கூட சாதகமான அம்சமே.
துருக்கியை அவ்வளவு எளிதாக தனிமைப் படுத்தி விடவோ கீழே தள்ளி விடவோ இயலாது. நிலவியல் சார்ந்து அது எந்த திசையிலும் கூட்டு வைத்துக் கொண்டு செயல்பட இயலும். எதிர்காலத்தில் துருக்கியை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதான விடயமும் அல்ல.
துருக்கியின் பொருளாதார வளர்ச்சி, பல ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் வேகமாக முன்னேறி வருகிறது.
அமெரிக்காவை எதிர்த்து தற்காலங்களில் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதாகவே அமெரிக்காவும் கிருஸ்தவ நாடுகளும் பார்க்கின்றன. அதன் வளர்ச்சி இன்னும்  சில ஆண்டுகளில் மிக அதிகமாகவும் வலுவாகவும் இருக்கும் என்பதே பொருளாதார அரசியல் வல்லுனர்களின் பார்வையாக உள்ளது.
துருக்கியின் கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்வது மிக அவசியம். உலக நாடுகளை ஆண்ட நாடு அது.முதல் உலகப் போர் அதாவது 1918 வரையிலும் துருக்கியின் சாம்ராஜ்யம் தளைத்தோங்கி இருந்தது. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் துருக்கியின் கை ரொம்பவே ஓங்கி இருந்தது. துருக்கி மட்டுமே இதுவரையிலும் வரலாற்றில் முஸ்லிம் நாடுகளில் அதிக வலிமையுடன் இருந்த நாடு. ஒட்டாமான் பேரரசின் சாம்ராஜ்யத்தைப் பற்றி யாவரும் அறிந்ததே.16ஆம் நூற்றாண்டில் வட ஆப்பிரிக்கா கிழக்கு ஐரோப்பா மற்றும் அராபிய வளைகுடா நாடுகள் என அதன் சாம்ராஜ்யம் விரிந்திருந்தது.
தற்சமயம் அமெரிக்காவிற்கும் கிறிஸ்தவ நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கும் வல்லமையுடன் முன்னேறி வருகிற நாடாக துருக்கி விளங்குகிறது என்பதே உண்மை. தற்போதைக்கு துருக்கியால் வெல்ல இயலாதெனினும் அமெரிக்காவால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிற நாடாக துருக்கி விளங்குகிறது. துருக்கியும் அமெரிக்காவை எதிர்த்து எந்த செயலையும்
செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியை அமெரிக்கா நட்பு நாடாக வைத்துக் கொள்ளவே விரும்புவதும், அதன் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிக்கின்றன உலகின் வளர்ந்த நாடுகள் என்றால் மிகையாகாது.
குறிப்பு: அடுத்த நூறு ஆண்டுகள்( The Next 100 Years)  என்ற நூலில் எழுதியுள்ள கருத்தையும், சில தகவல்களை நான் சேகரித்தும் எழுதியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s