சவுதி அரேபியாவில் ஒருவர் இன்னொருவரின் தவறால், உதாரணமாக சாலை விபத்துகள் மூலம் இறக்க நேர்ந்தால் , தவறை இழைத்த குற்றவாளி பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஈடு செய்ய வேண்டிய தொகையே ” Blood Money ” என்றழைக்கப்படுகிறது. Diya என அரபில் சொல்கிறார்கள். இது பாதிப்புக்கு உள்ளானவர் என்ன மதத்தைச் சார்ந்தவர் என்பதற்கு ஏற்றாற் போல இழப்பீடு (componsation) வழங்கப்படும்.
மேலும் எந்த அளவுக்கு குற்றம் செய்தவரின் பங்கு மற்றும் பாதிப்புக்குள்ளானவரின் தவறைப் பொறுத்து இழப்பீட்டுத் தொகை நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும். விபத்துகள் மூலம் ஓர் ஆண் இறந்தால் வழங்கப்படும் தொகையில் பாதி தொகை மட்டுமே பெண் பாதிப்புக்கு உள்ளானால் கிடைக்கும் என சட்டம் சொல்கிறது.
உதாரணமாக பாதிப்புக்குள்ளானவர்கள் முஸ்லிம் ஆணாக இருந்தால் 300000 சவுதி ரியாலும், அதே முஸ்லிம் பெண்ணாக இருந்தால் 150000 சவுதி ரியாலும் இழப்பீடாக கிடைக்கும். அதே பாதிப்புக்குள்ளானவர்கள் கிருத்துவராகவோ யூதராகவோ இருந்தால், ஆணுக்கு 150000 சவுதி ரியாலும், பெண்ணுக்கு 75,000 சவுதி ரியாலும் இழப்பீடாக கிடைக்கும். இம்மாதிரியான பாதிப்புக்குள்ளானவர் இந்துவாகவோ மற்ற மதங்களை சார்ந்தவராகவோ இருந்தால் , ஆணுக்கு 6666 சவுதி ரியாலும், பெண்ணாக இருந்தால் 3333 சவுதி ரியாலும் இழப்பீட்டுத் தொகையாக கிடைக்கும்.
ஒருவேளை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் பாதிப்புக்குள்ளானவருக்கு 400000சவுதி ரியால் இழப்பீடாகக் கிடைக்கும்.
இம்மாதிரியான இழப்பீடுகள் வெறும் விபத்தில் பாதிக்கப்பட்டால் மட்டுமல்லாமல் எதிர்பாரா மரணம், திட்டமிட்ட கொலைச் செயல், தீ விபத்தில் மரணம், தொழிற்சாலை விபத்தில் இறந்து போவது போன்ற செயல்களுக்கும் இந்த Blood Money வழங்கப்படும். ஆனால் இவ்விழப்பீடுகள் இன்னொருவர் செய்கிற தவற்றின் மூலம் ஏற்பட்டால் மட்டுமே கிடைக்கப் படும்.
பிப்ரவரியில் (2013) தவறு செய்த இந்தியர் ஒருவருக்காக மன்னர் அப்துல்லாவே blood money யை, பாதிப்புக்குள்ளானவர்களுக்கு செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த பாஷா என்பவர் 2006 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய லாரி விபத்தால் எதிரே வந்த 8 ஆசிரியைகள் உட்பட ஒரு வேன் டிரைவரும் இறந்த காரணத்தால் பாஷா கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார். அவரை விடுவித்து இந்தியா அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி , இந்த இழப்பீட்டுத் தொகையை தாமே செலுத்துவதாக அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய சட்டத்தின் படி, இழப்பிற்குள்ளானவரின் குடும்பத்தினர் பாவ மன்னிப்பு அளித்தால், கொலை செய்தவர் மரண தண்டனையிலிருந்தும் , சிறை வாழ்க்கையிலிருந்தும் எந்த தண்டனையும் பெறாமல் வெளிவர இயலும். அவர் வெறும் Blood Money மட்டும் செலுத்தினாலே போதும். சில உயர் எண்ணம் கொண்டவர்கள் , சாலை விபத்துக்களில் எதிர்பாராவண்ணம் தங்களின் உறவினர் இறந்தால் blood money கூட வேண்டாம் என்று சொல்லியவர்களும் உண்டு. மரணதண்டனையோ கடுங்காவல் தண்டனையோ கொடுத்தே தீர வேண்டும் என சொல்பவர்களும் உண்டு.
திருக் குரான் கோட்பாடுகளின் படி “Qisas”(Retaliation ) என்பது கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது , உயிருக்கு உயிர் என குற்றம் செய்தவர்களுக்கு அதற்கு இணையான தண்டனை தருவதே சரி என சொல்கிறது. அதேவேளையில் Retaliation க்குப் பதிலாக Componsation என்பது எதிர்பாரா இழப்புகளுக்காக வழங்கப் படுவதே blood money ஆகும்.
இந்த சட்டம் பாகிஸ்தான், ஈரான், ஈராக் போன்ற நாடுகளிலும் அமலில் உள்ளது.
சில கேள்விகள்:
1. மதத்தின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்குவது அந்தந்த நாட்டுச் சட்டத்தின் படி சரியா? தவறேனே நினைக்கிறீர்களா? ஏன்?
2. qisas சட்டம் இன்றைய சூழ்நிலைக்குத் தேவை என கருதுகிறீர்களா? அதாவது பாலியல் வன்கொடுமைகள் , கொடூர திட்டமிட்ட கொலைகளுக்கு மரண தண்டனையை ஆதர்க்கிறீர்களா?எதிர்க்கிறீர்களா?
3. சட்டங்களும் தண்டனைகளும் மதத்திர்கேற்றார் போல இருப்பதை சரியென கருதுகிறீர்களா?
4. வெளி நாட்டவருக்குக் கடுமையான தண்டனையும் உள்நாட்டைச் சேர்ந்தவருக்கு வேறு விதமான தண்டனையையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
5. இந்தியாவில் இந்துத்துவா தேவையா?
விவாதம் செய்ய விரும்புபவர்கள் தங்களின் கருத்தை முன் வைக்கலாம். நன்றி.
according to person who is a lady or a man
the punishment differed is a stange one.
if there is an intention to make an accident ,
the debate i.e punishment for the person belongs to interplace or foreigners may be differed.
murugan.