மூடர் கூடம்

moodar koodam

தமிழ் திரை வரலாற்றில் வெளிவந்துள்ள மிக வித்தியாசமான படங்களில் மூடர் கூடத்திற்கும் இடமுண்டு. எப்போதேனும் தான் தமிழ் திரை உலகம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான படைப்புகளை முன் வைக்கும். அதில் மூடர்கூடமும் ஒன்று!

 

ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு சிகரெட்டிலிருந்து எப்படா வாயை எடுப்பிங்க… நம்ம  மூஞ்சுக்குள்ளேயே புகை வர்ற அளவுக்கு ஊதித் தள்ளுறானுகன்னுதான்  தோணுச்சு. நாலுபேர்ல ரெண்டு பேர் கேசுக்காக உள்ளே வந்த பயலுக.

 

 

இயக்குனர் நவீன் தான் நால்வர் கூட்டணியின் தலைவன்! வெள்ளை என்பவன் வசதியா இருக்கிற மாமா வீட்டுல தங்கி முன்னேறலாம்னு வந்தா, எப்படிடா இவனை வெளியே கிளப்பலாம்னு பேசுறவங்க வீட்டிலேயே திருடலாம்னு  ஜெயில் மூலமாக நட்பாகும் மூவரிடமும் சொல்ல, திட்டம் தீட்டி வீட்டுக்குள் நுழைகிறது கும்பல்.

 

செண்ட்ராயன், குபேரன், நவீன், வெள்ளை இவர்களின் முன்கதையை ஆங்காங்கே திரைக்கதையில் சொல்வதும், நாய் மற்றும் அவ்வப்போது இதர கேரக்டர்களுக்கும் முன்கதை இடையிடையே வருவதும் வித்தியாசமான முயற்சி.

 

நடிப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நவீனிடம் காண இயலும். கொஞ்சமும் முக பாவனையில் சலனமில்லாமல் கட்டளையிடும் காட்சிகளாகட்டும், குழந்தைக்கு மூன்று லட்சம் வேண்டுமென ஒரு தாய் அங்கே வந்து கெஞ்ச, கிடைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்கிற காட்சிகள், சாதாரண தமிழ் சினிமாக்களில் காணும் காட்சி என்றாலும், கொள்ளை அடித்தால் கூட கொஞ்சம் செய்யுங்கடா என அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடமாகத் தான் எடுக்க வேண்டியுள்ளது.

 

செண்ட்ராயன் முறைத்துப் பார்க்க வேண்டும். அதுதான் அவரது நடிப்பாக இருக்க வேண்டும். ஆங்கிலம் தெரியாத தன்னிடம் ஆங்கிலத்தில் பேசுகிற IT மாணவனிடம், “ இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்ச தமிழ் தெரியாதவன்கிட்டே தமிழ்ல பேசுவியாடா …ன்னு கேட்க, மாட்டேன்னு IT-யில் பணிபுரியும் ஓவியாவின் காதலன் சொல்ல, அப்புறம் இங்கிலீஷ் தெரியாத தமிழ் மட்டும் தெரிஞ்ச என்கிட்டே என்னத்துக்குடா இங்கிலிஷ்ல பேசுறன்னு கேட்கிற காட்சி நிச்சயம் அப்ளாஸ் பெறும். மளிகைக்கடையில் வந்து நின்னுக்கிட்டு பெப்பர் இருக்கான்னு கேட்டு, வெத்து சீன் போடும் படிச்ச கூமுட்டைகளுக்காக….

 

குபேரன், பெற்றோர், ஆசிரியர், சமூகம் என ஒவ்வொருவரும் தன்னை முட்டாள்… முட்டாள் என ஒதுக்கி ஒரு காசுக்குப் பெராதவனாக்கி விட்டது என்பதை, திருடுற வீட்டில் உள்ள சின்ன பையனிடமே (அவனை முட்டாள்னு சொல்ற parents முன்னாடி), இந்தா இவங்களை பார்த்துக்கோ, உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்ற காட்சி, நம்பிக்கைதான் மூலதனம், முட்டாள்… உன்னால் முடியாது என சொல்வது மூடத்தனம் என சமூகத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் உணர்த்தும் காட்சி அமைப்பு….

 

வெள்ளையின் மாமா பொண்ணு காதலிச்ச பையன் வேறு மதம்னு தெரிஞ்ச உடனே எதிர்க்கிற அப்பா முன்னாடியே அவளைக் காதலனுடன்  சேர்த்து வீட்டை விட்டு வெளியே செல்லச் செய்யும் காட்சி…. படம் முழுக்க சமூகத்தில் உள்ள மூடத்தனத்தை உரித்து வைக்கிறது மூடர்கூடம்.

 

 

இதெல்லாம் இருக்கட்டும். அதே வீட்டுக்குள், திருட வருகிற இன்னொரு இளைஞன் , நடிப்பில் பிச்சி உதறுகிறார். ரௌடி குமார், மும்பைதாதா என அத்தனை பேரும் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

 

 

இடைவேளைக்குப் பிறகு நகைச்சுவைக்கும், செண்டிமெண்ட் காட்சிகளும் இடம்பெறுகிற இடங்கள் பாக்கியராஜ் படத்தைப் பார்க்கிற திருப்தியைத் தரும்.

 

இசை, ஒலி, ஒளி என எதையும் கவனிக்க விடாமல் காட்சிகளோடு பயணம் செய்தாலே போதும் என செய்த இளைய இயக்குனர் நவீன் வளர வாழ்த்துவோம்.

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s