தேவையான பொருட்கள்:
ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ்
காரட் – 1
காப்சிகம் – 1 (குடை மிளகாய்)
கோஸ் – சிறிது
உருளை – 1 (விருப்பபட்டால்)
சீனி – 1 ஸ்பூன்
உப்பு – சிறிது
சோயா சாஸ் – சிறிது
சில்லி சாஸ் – சிறிது
சீட் ஓட்டுவதற்கு
மைதா, தண்ணீர் கலந்து கொள்ளவும்.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காரட் சேர்த்து வதக்கவும்.கோஸ் சேர்க்கவும்.
அதனுடன் சிறிது சீனி சேர்க்கவும். குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
(விருப்பபட்டால் வேக வைத்த உருளை மசித்து சேர்க்கவும்).
நன்கு வதக்கிய பிறகு இறக்கவும்.
ஸ்ப்ரிங் ரோல் சீட்-சில் காய்கறி கலவையை படத்தில் கட்டியது போல் வைத்து மடித்து பிறகு மைதா கலவையால்ஒட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல் ரெடி .
செய்து பார்ப்போம்… செய்முறைக்கு நன்றி…