1. உலகில் மனிதர்களுக்காகத் தயாரிக்கப் பட்ட உணவில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (1.3 பில்லியன் டன் ) இழப்பாகவோ(Lost) கழிவாகவோ (Waste) செல்கிறது.
2. உற்பத்தியாகிற அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் பாதிக்கும் மேலாக உணவு தயாரித்த பிறகு உண்ணாமலே கழிவாக செல்கிறது. 2009/10 ஆம் ஆண்டின் கணக்கின் படி, 2.3 பில்லியன் டன் உற்பத்தியில், 1.3 பில்லியன் டன் யாருக்கும் உபயோகமற்று கழிவாகியது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
3. அமெரிக்காவில் 30 % உணவானது வேஸ்ட் ஆகிறது. சாப்பிடாமல் எரிந்து விடுகிறார்கள். அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? அமெரிக்க டாலரில் 48 பில்லியன் டாலர்கள். விவசாயத்திற்குத் தான் அதிக அளவிற்கு தண்ணீர் தேவைப்படுகிறதாம். இந்த உணவுப் பொருட்கள் வேஸ்ட் என்பதோடு நில்லாது, இதற்கு பாதிக்கும் அதிக அளவிலான தண்ணீர் தேவையும் இழப்பாகி விடுகிறது.
4. U.K. வில், 6.7 மில்லியன் டன் (32%) உணவு இழப்பாகிறது.
5. உணவுப் பொருட்களை தூக்கி எறிவதால் வெறும் பணச் செலவு மட்டுமல்ல. மீத்தேன் அதிக அளவில் சுற்றுப் புறத்தை கெடுக்கிறது. உணவு மூலமாக அதிக (விவசாயம்) அளவில் மீத்தேன் வெளி வருவதால் GHG மட்டுமல்ல, Global Warming கூட அதிகரிக்கிறதாம். Green House Gas உருவாவதில் CO2 வைக் காட்டிலும் 23 மடங்கு வீரியமிக்கதாக இருக்குமாம் மீத்தேன் வெளிவந்தால்.
6. வளரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உணவுப் பொருட்களை முறையாகப் பதப்படுத்த இயலாமலும், போக்குவரத்து மூலமும்தான் அதிக அளவில் உணவு இழப்பாகிறதாம். வளர்ந்த நாடுகளில் இதற்கு பிரச்சினை இல்லை. உணவாகத் தயாரித்த பின்னரே அதிக அளவில் இழப்பாகிறது.
Reference: Global Food Losses and Food Waste – FAO, 2011
The environmental crisis: The environment’s role in averting future food crisis – UNEP, 2009