இந்துத்துவாவை எவ்வாறு பார்க்க வேண்டும்?

முஸ்லிம் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இந்தோனேசியா இன்று விளங்கினாலும், அதனுடைய ஆதி காலக் கலாச்சாரமாக விளங்கியற்கான அடையாளம் தான், இந்தோனேசியாவின் தேசிய விமானத்தின் பெயர் கருடா, அதனுடைய தேசிய வங்கியின் பெயர் என்ன தெரியுமா? குபேரா. இந்தோனேசியாவிலுள்ள ஜகார்தா பல்கலைக் கழகத்தின் பெயர் சாந்தி பணே ( கிருஷ்ணாவின் குரு). இன்றைய இந்தோனேசியாவில் இஸ்லாமிய மக்கள் அதிகமிருந்தாலும்(87%), (Hindu 3% ) அதனுடைய கலாச்சார அடையாளம் தான், ராமாயாணமும் மஹா பாரதமும்.

Cultural tradition is common to all. Your worship may be different. That’s why, இந்திய சுப்ரீம் கோர்ட் இந்துத்துவம் என்பதையும், இந்துயிசம் என்பதையும் எவ்வாறு பார்க்க வேண்டும் என சொன்னது தெரியுமா? இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதற்குப் பொருள் இந்துவாகவும் இருக்கலாம். கடவுளே இல்லை என சொல்பவராகவும் இருக்கலாம். ஆனால் அவரும் இந்துவே! அவ்வாறுதான் இந்தியாவைப் பார்க்க வேண்டும். ஆகையால்தான் வெளிநாடுகள் இந்தியாவை இந்து தேசம் என சொல்கிறது. இதைத்தான் சுப்ரீம் கோர்ட், இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பது ஒரு Common cultural tradition of India என்றது.

இதைப் புரிந்து கொள்ளாமல் இந்துத்துவா , வெறும் வெறுப்பு வார்த்தையாக மாறியது அரசியல் காரணங்களால் தான். என்னைக் கேட்டால் பிஜேபி போல(உடனே அரசியல் காரணங்களோடு பொங்கி எழத் தோன்றும். அதை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள்) ஒவ்வொரு இந்தியனும் இந்துத்துவா என்ற வார்த்தையைக் கொண்டாடி இருக்க வேண்டும்.

தேசியம் பற்றி நமது அரசியல் கட்சிகள் பேசாமல், செக்குலாரிசம்( போலி மதச் சார்பின்மை பேசுதல் என்ற பெயரில் வேடம் போட இது நிறைய பேருக்கு உதவுகிறது என்பது தனி விடயம். அதை இங்கே குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.) பேசினால்தான் வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியும் என கருத்துரைகளைப் பரப்பின.

குறிப்பாக காங்கிரசின் அரசியல் சூழ்ச்சிகளில், ஓட்டு வங்கி அரசியலால் இந்துத்துவாவை வெறுப்பு வார்த்தையாக சிறுபான்மையினரின் மனதில் தோன்றச் செய்து கசப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசோடு இதர மாநில கட்சிகளும் சேர்ந்து, இன்று மதச் சார்பற்ற என்ற புதிய தத்துவத்தைக் கையில் எடுத்துள்ளன. என்னைக் கேட்டால், பிஜேபியே தனிக் கட்சியாக வெற்றி பெற்றால் கூட , இதை வெறும் ஒரு மதத்தின் நாடாக சொல்ல இயலாது. ஏனெனில் இந்து என்பது வெறும் மதம்
மட்டுமல்ல. அதுதான் இந்தியாவின் Tradition என்பதை கடவுளை நம்பாதவனும் ஏற்றுக் கொள்ள வேண்டியது!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s