சார்லி ஹெப்டோவும் தமிழ் சேனல்களும்:

பகுதி 1:

குறிப்பு: வன்முறையை அனைவரும் எதிர்ப்பார்கள். ஆகையால் அந்தப் பகுதியை மட்டும் சொல்லி சல்லியடிக்க வேண்டாம். இது வன்முறைத் தாக்குதலை நியாயப்படுத்தும் பதிவுமல்ல என்று சொல்லிக் கொண்டு சில ஐயங்களை எழுப்புகிறேன்.

சார்லி ஹெப்டோவுக்கும் தமிழ் சேனல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தமிழ் சேனல்கள் இது போன்ற மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தும் முன்பாக promotion போல trailer ஓட்டிக் காண்பித்து முதலில் நூல் பார்ப்பார்கள். கூர்ந்து கவனியுங்கள், விஜய் டிவியிலும் பர்தா பற்றிய ப்ரோமோ வந்தது. பின்னர் இஸ்லாமியவாதிகளால் கடும் எதிர்ப்புக் கிளம்பவும் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படாமல் விஜய் டிவி அமைதியாகிக் கொண்டது. புதிய தலைமுறையைக் காட்டிலும் விஜய் டிவி ஒருபடி மேல். விஜய் பற்றி சொன்னதற்கே மன்னிப்பைக் கேட்டுவிட்டு வணிக நோக்கத்தில் வீறுநடை போட்டுக்கொண்டு சென்றது.

புதிய தலைமுறையிலும் promo போலக் காண்பித்து விட்டு, எதிர்ப்பு வருகிறதா என்று பார்த்தது. ஆரம்பத்தில் கமலஹாசனைப் போல முறுக்கிக் கொண்டாலும் டிவி சேனலை வணிக ரீதியாக நடத்த வேண்டியது, அரசியல் ரீதியான சிக்கலையும் நாளை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற எண்ணத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்தது. இதில் என்ன நடந்தது என்றால், செய்தியாளர் தாக்கப்பட்டது, வன்முறைத்தாக்குதல் என அடுத்து நடந்த இரு நிகழ்வுகளை விவாதத் தளமாக்கி தைரியமாக நிகழ்ச்சி நடத்துவது போலக் காண்பித்தது. புதிய தலைமுறைக்கு உள்ள சிக்கல் விஜய் டிவி போல அது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் அல்ல. செய்தி ஊடகம். ஆகையால் முற்றிலுமாக பம்ம முடியாது. அதற்கேற்றார்போல அடுத்து நடந்த இரு அசிங்கமான வன்முறைகள் அவர்களை செய்தி ஊடகமாக விவாதிப்பது போலக் காட்டிக் கொண்டது.

தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடி கதையாக வன்முறைத் தாக்குதலை வைத்து தன்னை தைரியமாக விவாதங்கள் நடத்தும் ஊடகமாகக் காண்பிக்க பிரயத்தனத்தை மேற்கொண்டு விட்டது. இதற்கெல்லாம் அஞ்சாது என்று சொல்லிக் கொண்டே தாலி விவாத நிகழ்ச்சியை மட்டும் ஒளிபரப்பவில்லை என்பதையும் கருத்துரிமைப் போராளிகள் கேள்வி எழுப்பாமல் வன்முறைத் தாக்குதல் பற்றி மட்டும் கருத்துரைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தனி நபர் என்றால் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஆனால் ஒரு ஊடகமே நிகழ்ச்சியை நடத்த அஞ்சுவது ஏன் என்று எந்தக் கருத்து சுதந்திர வாதியும் கேள்வி எழுப்ப மாட்டார். ஏனெனில் டிசைன் அப்படி. அவரவர்க்கு அவரவர் TRP முக்கியம்.

இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் ஊடகம் நேரடி ஒளிபரப்பாகவே மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி விட வேண்டியதுதானே! அங்குதான் சூட்சமம் உள்ளது. சார்லி ஹெப்டோ, தமது அலுவலகம் தாக்குதலுக்குப் பிறகும், கொலைகளுக்குப் பிறகும் கார்ட்டூன்களையும் செய்திகளையும் வெளியிட்டுக் கொண்டு இருந்தது என்பதையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊடகங்களைப் பொறுத்தவரையில் வணிகம் என்று வந்துவிட்டால் கருத்துச் சுதந்திரத்திற்காக ரஸ்க் கூட சாப்பிடாமல், தைரியமாக நேரடி நிகழ்ச்சியாக நடத்தாமல் அதே வேலையில் ஊடகத்திற்கான TRPயை ஏற்ற வழிகளையும் மேற்கொள்ளும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

பகுதி 2:

அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் ஊடகங்கள் நடத்துகின்றன என்று புதிய தலைமுறையில் தாலி விவாத நேர்படப்பேசுவில் உதாரணங்களுடன் மேற்கோள் காட்டப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் ஊடகங்களின் செயல்பாடுகளைப் பற்றி விளக்குவதானால் , அவை அனைத்துச் செய்திகளையும் வெளியிடும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் ஒவ்வொரு பத்திரிக்கையும், ஊடகமும் தமது பார்வையை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதுகிறதோ அதற்கேற்றார்போலவே தலையங்கத்தையும், சிறப்புக் கட்டுரைகளையும், விவாத நிகழ்ச்சிகளையும் வெளியிடும்.

புதிய தலைமுறையில் தாலி பற்றிய நேர்படப்பேசுவில் தாலி பற்றிய விவாத நிகழ்ச்சி ஏன் நடத்தக்கூடாது என்று ஆதரிக்கும் நபர்களை சம அளவில் பங்கெடுக்கச் செய்யாமல், அங்கு நடந்த வன்முறையைக் கண்டிக்கும் ஒரே குரலில் மட்டும் பேச ஐந்து விருந்தினர்களை வைத்து பேச வைத்தது எம்மாதிரியான நடுநிலைமை என்பதை யோசித்துப் பாருங்கள். எம்மாதிரியாகக் கருத்து சுதந்திரம் பற்றி பேச விரும்புகிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். கருத்து சுதந்திரம் பேச உண்மையிலேயே விரும்பினால், முதலில் இந்நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று ஆதரிப்பவர்களில் யாரையாவது வைத்தே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கும். மாறாக எதை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பியதோ அவ்வகையிலேயே நிகழ்ச்சி சுபமாக நடத்தி முடிக்கப்பட்டது.புதிய தலைமுறை தவிர்த்து எத்தனை ஊடகங்கள் இதை வைத்து விவாதம் நடத்தியதா என்றும் பார்க்க வேண்டும். மற்ற ஊடகங்கள் விவாதம் இது பற்றி செய்தால் அது புதிய தலைமுறைக்கு தேவையற்ற மார்க்கெட்டிங் என கருதுவதால் தான் மற்ற ஊடகங்கள் இந்தத் தாக்குதலைக் கண்டும் காணாமல் அமைதியாக இருக்கின்றன.

இதை எப்படி பார்க்க வேண்டுமானால், இத்தாக்குதலை எதிர்த்தது கையெழுத்து இட்டோம், செய்தியாக சொன்னோம் என்று மற்ற ஊடகங்கள் விளக்கம் தரும். ஆனால் ஒருமணி நேரம் ஒதுக்கி விவாதம் செய்யாது என்பதே ஊடகங்கள் செய்யும் நரித் தந்திரம். மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சியைத் தாக்கியதை எதிர்த்து எத்தனை ஊடகங்கள் கம்யுனிசத்தின் உண்மை முகம் இதுதானா என்று விவாதிக்குமா என்று பாருங்கள். அப்படி நடப்பது ரொம்பக் கடினம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s