சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்?

சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்?

 

தன்னோட கட்சி வேட்பாளரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இயலாத தமிழக பாஜக , அதிமுகவோடு செல்வதே இருப்பை உறுதி செய்ய உதவும் & எதிர்காலத்தில் கட்சி வளரவும் உதவும். அதிமுக கூட்டணியில் இருந்தால் ஒருவேளை தேமுதிக கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது போல அதிக இடங்கள் வெற்றி பெற்ற(பெற்றால்) கட்சி என்ற அடிப்படையில் எதிர்க்கட்சியாக பாஜக உறுதியோடு செயல்படவாவது உதவும். அதுவே எதிர்காலத்தில் இரண்டாம் கட்சியாக வளர்க்கவாவது உதவும். [! ? ]

இதில் அரசியல் ரீதியாகவும் பாஜகவிற்கு லாபமுண்டு. பாராளுமன்றம் மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் அதிமுகவின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். தேமுதிகவுடன் சட்டசபைத் தேர்தலில் சேர்வதால், அதுவும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு செயல்பட முனைந்தால் பாஜக வளரவும் வாய்ப்பில்லை. மேலும் இந்தக் கூட்டணியை நம்பி மக்கள் வாக்களிக்கவும் மாட்டார்கள். பாஜக MLA க்களே இல்லாத கட்சியாக வரவேண்டுமானால் விஜயகாந்த் பின்னால் போகலாம். விஜயகாந்தால் ஒரு அரசியல் லாபமும் பாஜகவிற்கு LS/RS ல் கிடையாது.

இதெல்லாம் நடக்க வேண்டுமானால் திமுக தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி வரவேண்டும். இல்லையேல் அம்மா பாஜகவை சீண்டகூட மாட்டார் என்றே நினைக்கிறேன். எனினும் அதிமுகவிற்கு தேர்தல் நெருங்க நெருங்க கிளம்புகிற எதிர்ப்பே அக்கட்சியைக் கூட்டணி நோக்கி நகர்த்தும். எனவே அதிமுகவை சரமாரியாக எதிர்த்து எழுதுங்கள் நடுநிலையாளர்கள் மற்றும் என் அன்புக்குரிய கம்யுனிஸ்ட் நண்பர்களே ! smile emoticon உங்கள் கையில் தான் அம்மா பாஜகவை consider பண்ணுவது உள்ளது. பாஜகவினரோ ஆதரவாளர்களோ மீசையை முறுக்க வேண்டிய அவசியமில்லை. என்னைத் திட்டவும் வேண்டாம். பாஜகவின் நிலைமை ICU வில் சேர்க்க வேண்டிய நிலையில்தான் தமிழகத்தில் உள்ளது. நான் சொல்வது பாஜகவின் இருப்பை உறுதி செய்யவும், வளமான எதிர்க்கட்சியாக வளர்வதற்கான யோசனைகள் மட்டுமே. smile emoticon

பி.கு: உண்மையைச் சொல்லப்போனால் விஜயகாந்துக்குப் பேசத் தெரியாது. ஆனால் ஏழைகளுக்கு உதவுவதில் அவர் ஒரு கறுப்பு எம்ஜிஆர் தான். அந்தவகையில் ஜெ, கருணாவைக் காட்டிலும் விஜயகாந்தை வரவேற்பேன்.smile emoticon

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s