பெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்

#‎PROUD_OF_MY_NATION_INDIA‬

2013 ஆம் ஆண்டில் Readers Digest ஒரு விநோதமான செயலைச் செய்தது. எந்த நாட்டு மக்கள் நேர்மையாக செயல்படுகிறார்கள்?. பணக்கார நாடுகள், ஏழை மக்கள் உள்ள நாடுகள், மனிதர்களின் குண நலன்களை அதாவது பண்பாட்டு ரீதியிலான செயல்பாடுகளை அறிய பணத்தையும்(Equal to 3000 Rs), மணிபர்சுக்குச் சொந்தக்காரரரின் முகவரியையும் எழுதி வைத்து, நகரின் முக்கியமான 12 இடங்களில் போட்டு விட்டார்கள். Readers Digest இந்தச் செயலுக்காக 16 நாடுகளின் மிக முக்கியமான நகரங்களைத் தேர்ந்தெடுத்து 192 மணிபர்சை போட்டு விட்டது.

முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தமைக்கு நேரெதிராக மிக அதிர்ச்சிகரமானதாகவும் ஆச்சர்யமாகவும் அமைந்திருந்ததாம். மக்கள் நெருக்கமுள்ள, அதிக மக்கள் தொகை கொண்ட, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஏழை நாடாக வர்ணிக்கப்பட்ட/ வர்ணிக்கப்படுகிற இந்தியா 9/12 Wallet ஐ உரிய நபர்களுக்குத் திருப்பித் தந்துள்ளார்கள். முதலிடத்தில் பின்லாந்தும், இரண்டாமிடத்தில் இந்தியாவும் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரேயொரு wallet மட்டுமே திருப்பித் தரப்பட்டதாம். Socalled இங்கிலாந்தில் 5/12, சுவிட்சர்லாந்தில் 4/12 மணிபர்சுகள் மட்டுமே உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்களாம்.

பண்பாட்டைக் கைவிடாத, குடும்ப அமைப்பு முறையைக் கைவிடாத மக்கள் தொகை அதிகமிக்க தேசமான இந்தியா குழந்தைகள் வளர்ப்பில் சிறப்பாகச் செயல்படுவதன் ஒரு அங்கமாகவே இதைப்பார்க்க வேண்டும். குடும்ப அமைப்பு முறையைத் தொலைக்கும் ஒரு சமூகம் எதை இழக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. ஆனால் இங்கு ஒரு கூட்டம் தனி நபர் சுதந்திரம் என்ற பெயரில், பண்பாட்டை உடைக்கும் செயல்களை நாகரிகம் என்ற போர்வையில் மூடப்பார்க்கிறது. அவர்கள் இந்தியாவைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிக்காமல் போலி முற்போக்கு சிந்தனைகளைப் பரப்புவதை உணரவேண்டும். இப்பதிவு அவர்களுக்கே சமர்ப்பணம். நேர்மறையான இந்தியா பற்றிய பார்வை இன்னும் வரும்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s