அறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது?

பெரியாரியவாதிகள் உண்மையென அவர்கள் நம்புவதிலிருந்தே வாழ்க்கையை அணுக விரும்புகிறார்கள். உண்மை என்பதென அவர்கள் விளக்க முயல்வதெல்லாம் அறிவியல் சொல்லும் விஷயத்தை முன் வைப்பதே! அதாவது அறிவியல் நிரூபணத்தின் அடிப்படையிலானது. ஆனால் வாழ்க்கை என்பது வெறும் அறிவியலின் அடிப்படையிலாக எவ்வாறு இருக்க முடியும் என்பதே கேள்வி. அதற்கான விடையைக் காணுமுன் சில விஷயங்களைப் பற்றி விளக்க வேண்டும்.

அறிவியல் அளவீடுகளாலானது(Measurements). அறிவியல் என்பது தரவுகளின் அடிப்படையில்(facts and datas) பேசக்கூடியது. உளவியல்(Psychology) என்பது அறிவியலா? அறிவியல் இல்லை என்று சொன்னால் மனவியல் அல்லது உளவியல் மருத்துவர்கள் கோபித்துக் கொள்வார்கள். உண்மையிலேயே உளவியல் என்பது அறிவியல்(Science) கிடையாது என்பதே எனது கருத்து.

ஒரு சமன்பாட்டை(Equation) அல்லது நிரூபிக்கப்பட்ட என்ற விதியை வகித்ததன் அடிப்படையில் செயல்படுதலே அறிவியல். உதாரணமாக இந்த நோய்க்கு இந்த மருந்தென என்ற அடிப்படையில் செயல்படுவது என சொல்லலாம். Input = output என்ற அடிப்படையிலானது. இப்படியும் சொல்லலாம். ஏற்கனவே அனுபவத்தின் வாயிலாக அறிந்ததையும், சில சமன்பாடுகளை கண்டுபிடித்ததை வைத்தும் அதனடிப்படையில் இயங்குவதை வைத்தும் இயங்குவதே அறிவியலாக மருத்துவமாக பொறியியலாக இன்னபிறவாகச் செயல்படுகிறது.

ஆனால் உளவியலை அவ்வாறு சொல்லி விட முடியாது. எங்கெல்லாம் யோசனைகளைக் கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு என சொல்ல முனைகிறோமோ அப்போதே அதை அறிவியல் என்று சொல்ல இயலாது. உளவியலை எப்படி அளவீடுகளின் அடிப்படையில் எடுத்துக்கொள்ள இயலும் ? உளவியல் அறிவியலெனில் ஜோதிடமும் அறிவியல் என்ற வாதத்தை ஏற்க வேண்டும்.

வாழ்க்கையை அறிவியலின் அடிப்படையில் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ளுதல் என்பதைத் தான் பெரியாரிய வாதிகள் சொல்லித் தர முனைகிறார்கள். ஆனால் வாழ்க்கை வெறும் அளவீடுகளாலானதல்ல. அது உணர்வுகளால் ஆனது. அழகான கற்பனைகளால் ஆனது. நம்பிக்கைகளால் ஆனது.

இதைத் தான் மதங்கள் போதித்தன. கற்பனைக்கு அளவீடுகள் பொருட்டல்ல. அறிவியல் இன்னும் சொல்லப்போனால் வெறும் இயக்கத்திற்கு மட்டுமே உதவக் கூடியது. Science is just based on measurements என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்கள் truth பற்றி பேசுகிறது. மதங்கள் பேசுகிற truth வெறும் கணக்கீடுகளால் ஆனதல்ல. அது வெறும் ஆதாரங்களின் அடிப்படை சார்ந்ததல்ல. மனித மூளையிலிருந்து உருவான கற்பனைகளின் அடிப்படையிலிருந்தும், இதயத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளின் அடிப்படையிலும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும்  தான் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. வாழ்க்கையை அறிவு,  உணர்வு ஆகிய இரண்டின் அடிப்படையிலுமானது என்கிற விஷயங்களை சொல்லித் தந்தது மதம். குறிப்பாக இந்து மதம்.

அடுத்தவர்களின் நம்பிக்கைகளைக் கற்பனைகளைக் கொலை செய்வதென்பது கலைகளைக் கொலை செய்வதற்குச் சமம். அதைத் தான் பெரியாரியவாதிகள் நிறுவ முயல்கிறார்கள்.

இந்து மதத்தின் கதையிலிருந்தே அறிவியலையும், மதத்தின் பார்வையையும் முன்வைக்க முடியும். அது Truth என்ன என்பதற்கும், Fact என்ன என்பதற்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள மட்டுமே! உங்களுக்கு உலகைசுற்றி வந்தால் மட்டுமே ஞானப்பழம் கிடைக்கும்என்ற கதை தெரியுமல்லவா? அது சொல்ல வரும் விஷயம் இதுதான். அம்மா அப்பாவைச் சுற்றிவந்தால் அதுவே உலகைச் சுற்றி வந்தமைக்குச் சமம் என விளக்கி ஞானப்பழம் பிள்ளையாருக்குக் கிடைக்கும். முருகன் அறிவியல் முன் வைக்கும் உலகைச் சுற்றி வருகிறார். இங்கு எது உலகம் என்கிற உண்மையை எப்படி உணர்வது. அதனால்தான் சொல்கிறேன். 

The moment one is able to prove something based on datas, that became Fact. Lord Muruga followed as per the Science method. Lord Muruga is trying to convince his parents based on the facts. He has roam around the world, but it was seen by Siva & parvathy as Muruga’s way of approach as quantitative. But according to pillaiyaar he has connected with emotional, personal way of approach. Lord Ganesha’s act was seen by Siva & Parvathy as a Qualitative performance.  Lord muruga did on Objective based facts, science, Logical, Universal etc., Because Muruga is talking here about ” THE WORLD “.  Lord Ganesha did on the Subjective which is based on belief, emotional, personal . Logically Muruga should be announce as a winner of the game. But Lord Ganesha explained in a way that I do not bother about “THE WORLD”  and I see my parents are the creature of me and I consider that you are “MY WORLD”. You are my first world. So I complete my three rounds roaming around you. That is where Ganesha was satisfied, the way of qualitative approach and got the Gnanap Pazham. One can not argue with Ganesha for his statements made are false and convinced everyone that his argument is also True.  That is what i tried to mean. Religious talked about every kind of things. Life is not only based on facts. It is almost based on a mixture of everything. Religious used to speak in all side of coins.

Science is an Objective one. Science is based on facts. Facts are based on Datas. Datas are just measurable. This is what Science. Science is always ask the Question How? (Ex: How the sun Rises, How I was born) . Religious is based on Subjective one. Religious is always ask the question Why? (Ex: Why the Sun Rises, Why I was born, Why i will not have next life ) . Science is Quantitative. Religious is Qualitative. Religious is based on truth. Truth is never based on Datas.  Religious is based on Truth. Truth is based on belief, imagination, Emotional, Experience,  Thoughts, Perceptions etc., என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இறுதியாக Truth க்கும் Fact க்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம். Truth is the general one which we are following. It does not need any proof. It is decided based on belief.  இதை எப்படி சொல்வதென்றால் , பணியில்  இருக்கும் ஒரு நண்பரிடம் , நீ site க்குள் சென்று விட்டாயா என்று கேட்கும் போது , தூரத்தில் இருக்கிற நீங்கள் உங்கள் தொழிலாளி கொடுக்கிற வாக்குமூலத்தை அப்படியே நம்புவது. அவர் site ல் தான் இருக்கிறேன் என்று சொல்வதை நம்புவது. அவர் சொன்னதை நான்  True என அப்படியே  எடுத்துக் கொள்வது. ஆனால் அடுத்த நிமிடமே அவர் site ல் தான் இருக்கிறாரா என்பதை சக  தொழிலாளியிடமும், கஸ்டமரிடமும் விவரங்களை சேகரித்து விட்டு, தொழிலாளியிடம் நீ site ல் இருக்கிறாய் என்றாயே, நீ இல்லை என்பதற்கான ஆதாரம் இதோ என்று நீங்கள் proof பண்ணுவதுதான் FACT.

தொழில் நுட்பத்துடன் பயணிக்கும் இந்து மதம்

இந்து மதம் உருவ வழிபாட்டையும் பல தெய்வ வழிபாட்டையும் கொண்டிருப்பது அதன் மிகப் பெரிய பலம். மற்ற மதங்களைப் பற்றி அதிகம் தெரியாதாகையால் ஒப்பிட்டு எதையும் எழுதப் போவதில்லை. தமது இஷ்ட தெய்வத்திற்குப் பல உருவங்களைக் கொடுத்தும், ஒரே தெய்வத்திற்குப் பல பெயர்களைக் கொடுத்தும் இந்து மதம் தன்னை விஸ்தரித்துக் கொண்டே செல்கிறது. அழிவில்லாமல் விஸ்தரித்துக் கொண்டே செல்லும். அது எவ்வாறு என்பதை எனது சிறிய புரிதலிலிருந்து வெளிப்படுத்துகிறேன்.

பல புராண கதைகளாக, நடந்த விஷயங்களாக ஒவ்வொரு பகுதி மக்களும், ஒவ்வொரு சாதி மக்களும் தமது இஷ்ட தெய்வத்தை வழிபட சொல்கிற காரணங்கள், கதைகளின் மூலமாக அது மேல் எழுந்து கொண்டே செல்கிறது. உதாரணமாக சிவன் தன்னை ஈஸ்வரனாக , சுடலை மாடனாக, இடுகாட்டுப் பிரியனாக, நடராஜராக, அர்த்தநாரிஸ்வரராக, ஹரனாக ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு உருவத்திலும் ஒவ்வொரு போஸிலும் (தமிழ் வார்த்தையென்ன) காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கதை.

இந்து மதத்தில் பிள்ளையாரின் உருவம் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களில் மக்கள் நம்பும் சக்தி வாய்ந்தவராக ஆனால் அதே வேளையில் அவர் எந்த பெயரிலும் இருப்பார் என்பதைப் பார்த்து பலமுறை ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது. சுந்தர விநாயகர், கண்திருஷ்டி கணபதி, குளத்தடி பிள்ளையார், விக்ன விநாயகர், வெற்றி விநாயகர் என எந்தப் பெயரிலும் பெயர்க்காரணத்தோடு வலம் வரும் கடவுள் பிள்ளையாராகத் தான் இருக்க முடியும்.

இந்து மதத்தில் மக்கள் தொகையைக் காட்டிலும் கடவுள்களின் மக்கள்தொகை அதிகம். அத்தனை கடவுள்களையும் நேசிக்கும் தன்மையை கால மாற்றத்தில் மக்கள் புரிந்து கொண்டதும், அதன் வளர்ச்சி மேன்மேலும் பெருகுமேயன்றி இந்து மதம் அழியவே வாய்ப்பில்லை.

உருவ வழிபாட்டைத் தன்னகத்தே வைத்துள்ள இந்து மதம் அதை மக்கள் மனதில் நிலைக்கச் செய்ய தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கமுடிகிறது. அதன் மூலமாக சிறுவர்களைக் கவரச் செய்யும் நிகழ்வுகள் இயல்பாகவே இந்து மதத்தில் நடக்கிறது. சிறுவர்களைக் கவர பாலகனாக ஐயப்பன் கதைகள், கிருஷணர் கதைகள், முருகன் கதைகள், பிள்ளையார் கதைகளில் ஆரம்பித்து குடும்பப் பெண்களுக்கான துர்க்கை, காளி, லக்ஷ்மி கதைகள் என பல கடவுள்களைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்கள் காட்சிகளாக மக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. காட்சிகள் மக்கள் மனதில் எந்த விஷயத்தையும் எளிதாகப் பதிவு செய்யும். அவ்வகையில் உருவ வழிபாட்டை தனது வழிபாட்டில் ஒரு முறையாகக் கொண்டுள்ள இந்துமதம் தனது மக்களிடம் எளிதாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரேயொரு பெயரில் கடவுள் பற்றிய கதைகள் சொல்லுதல் மற்ற மதங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஆண்டுகள் கணக்கில் சொல்லப்பட ஆயிரம் கதைகளை இம்மதம் வைத்துள்ளது.

நான் சிறுவனாக இருந்தபோது கடவுள், நார்மல் மனிதராக நடித்துக் கொண்டிருப்பார். தனது அடியாருக்கு காட்சியளிக்க (வேறு போஸுக்கு மாற) புகைமூட்டம் வரும். புகை தெளியும்போது சிவன் வேறொரு சொருபத்தைக் காண்பிப்பார். ஒவ்வொரு கடவுளின் பெயரிலும் தனித் தனியாக படங்கள் வந்துள்ளன. இப்போது பெரியவர்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில் கிராபிக்சுடன் வலம் வரும் இந்து கடவுள்கள், சிறுவர்கள் பார்க்கும் சுட்டி, போகோவில் அனிமேஷனுடன் அதிசயங்களை நிகழ்த்துகிறார்.

பல கடவுள், பல வழிபாட்டு முறைகள், பல சடங்கு முறைகள், பல வகைகளில் உருவங்களைக் கொடுக்க அனுமதித்தல் என இந்து மதம் தன்னை எளிதாக இயல்பாக மக்களுடைய வாழ்வோடு ஒன்றிப் போய் விடுகிறது. ஆகவே தொழில் நுட்பம் வளர வளர இன்னும் பல அதிசயங்களுடன் மக்கள் நம்பும் அதிசய சக்தியாக அத்தனை கடவுள்களும் வலம் வருவார்கள். இது இந்து மதத்தை மேலும் மேலும் வளர்க்க வழி செய்யும்.

இன்று சுட்டி டிவியில் பிள்ளையார் எப்படி ஆனை முகத்தான் ஆனான் என்பதில் ஆரம்பித்து, சுண்டு எலியுடன் அவர் வலம் வருதல் என அனைத்தையும் அனிமேஷனில் காண்பிக்கிறார்கள்.

தாய்லாந்திற்கு தெரிகிற கலாச்சார அடையாளம் இந்தியாவிற்குத் தெரியாமல் போனதேன்?

thailand manthan photo 4

ஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளங்கள் (Cultural Identity) என்பது வேறு. வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவதும், கடவுளை வழிபடும் (Worshiping God) தன்மையும் வேறாக இருக்கலாம். ஆனால் அந்த நாடு தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதில்தான் கலாச்சாரப் பெருமை அடங்கியுள்ளது.

இந்தோனேசியா பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இப்போது இன்னொரு உதாரணம் தாய்லாந்து. தாய்லாந்து நாட்டில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 94 %. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 5%. இந்து மதம் 0.09%. ( கவனியுங்கள் 0.1 % க்கும் குறைவு). ஆனால் தாய்லாந்திற்குத் தமது கலாச்சார அடையாளம் எது என்பதைப் பெருமையாக சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை. அதற்கு அடையாளமாக தாய்லாந்தின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அரசு சூட்டியுள்ள பெயர் “சுவர்ண பூமி ” ( சோழர்கள் ஆண்ட பூமி), தமிழில் இதன் பொருள் தங்க பூமி. விமான நிலையத்தில் ஆமையின் மீது வீற்று இருக்கும் “சமுத்ரா மந்தன் (விஷ்ணு)” சிலையையும் சுற்றிலும் தேவர்கள் சிலையையும் அமைக்கவே பல ஆண்டுகள் ஆகியுள்ளது. தாய்லாந்தின் தேசிய அடையாளமாக இன்று வரையிலும் “கருடா” உள்ளது.

இந்தியாவில்தான் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவிற்குப் போலி அடையாளங்களுடன் வெளிவருவதற்குப் பகிரதப்பிரயத்தனங்களை முற்போக்கு, போலி செக்குலரிய வாதிகள் மூச்சிரைக்க பதைக்கிறார்கள். இவர்களைக் கண்டு அஞ்சாது இந்திய அரசு தமது கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்கவும் முன்னெடுத்தும் செல்வதில் எந்தத் தயக்கமும் காட்டக்கூடாது.

ஆகையால்தான் இந்தியாவைக் கலாச்சாரத்தில் இந்து என்றும், வழிபாட்டில் மற்ற மதங்களைப் பின்பற்றுகிறார்கள் என்றும் இந்துத்துவா சொல்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கலாச்சராத்தை விட்டுத் தராத இன்னும் சில நாடுகள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னொரு நாளில் பேசுவோம்.thailand manthan photo 2

மறுபிறப்பும் கர்மாவும் – ஓர் பார்வை

இந்து புராணக் கதைகளை படித்திருப்போம். ஆனால் இப்போது சொல்லப் போகும் கதை வித்தியாசமானது. இந்து மதம் கர்மா பற்றியும் cycle of life பற்றியும் பேசக்கூடியது.

உலகில் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் இன்னொன்றை கொன்று தின்று வாழும் மிருகங்கள்தான். இயற்கை மற்ற உயிரினங்கள் உண்டு வாழ எல்லாவற்றையும் கொடுக்கும். ஒரு நாள் இயற்கை தன்னிடமிருந்து பெற்று வாழ்ந்த அத்தனை உயிர்களையும் அழிக்கவும் செய்யும். மீண்டும் இதே cycle of life தொடரும் என்பதே இந்து மதம் சொல்ல வரும் விஷயம். ஆகையால் தான் மறுபிறப்பு பற்றியும் கர்மா பற்றியும் இந்துமதம் பேசுகிறது. படைக்கப்பட்ட உயிரனங்கள் அனைத்துக்குமே பசி இருக்கவே செய்யும். இன்னொரு உயிரிடத்திருந்து தன்னைக் காக்க வேண்டிய பயமும் இருக்கும்.

இந்து மதத்தில் மிருகங்கள், பறவைகள் ஆகியவை பல கடவுள்களின் வாகனமாக இருப்பது என்பது நாமறிந்த ஒன்றே. இப்போது கதைக்குச் செல்வோம்.

சிவன் கைலாயத்தில் இருக்கிறார். பனியால் மூடப்பட்டு புல் கூட முளைக்காத இடமாக காட்சியளிக்கிறது. சிவன் தமது குடும்ப சகிதம் காட்சி அளிக்கிறார். அங்கு அனைவரின் முகத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் தவழ்கிறது. ஒவ்வொருவரும் தமது வாகனத்தோடு சந்தோஷமாகக் காட்சி அளிக்கிறார்கள்.

“பிள்ளையாரின் வாகனம் என்ன?”

“எலி”

நல்லது.

“சிவனின் வாகனம் என்ன?”

“பாம்பு, நந்தி(காளை) ஆகியவை”

அப்படியா ரொம்ப நல்லது.

“முருகனின் வாகனம் என்ன?”

“மயில்”

“சக்தியின் வாகனமென்ன?”

” புலி”

இப்ப சில கேள்விகள். பாம்பு எதைத் தின்னும்? எலியைத் தின்னும். சிவனின் வாகனம் பிள்ளையாரின் வாகனமான எலியைத் தின்னும்.

மயில் எதை உண்ணும்? பாம்பை உண்ணும். அதாவது சிவனின் வாகனத்தை உண்ணும். சிவனின் இன்னொரு வாகனமான காளையை சக்தியின் வாகனமான புலி தின்னும். சரியா?

சிவனின் கைலாயத்தில் காளை தின்னுவதற்கு மட்டும் புல் கூட இல்லை அல்லவா? ஆனால் இவையாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு எந்தப் பயமும் முகத்தில் காட்டாமல் குடும்ப போட்டோவில் போஸ் (காட்சி) கொடுப்பதன் ரகசியமென்ன?இது மிகப்பெரிய குடும்ப நாடகமாகத் தோன்றுகிறதல்லவா? smile emoticon

இந்தக் கதை சொல்ல வரும் விஷயம் இதுதான். பசியற்ற உலகில் பயமிருக்காது. பசியற்ற நிலையில் மனம் சாந்தி கொள்ளும். In the place of Greater Kailash, Siva is outgrown the hunger என்பதே.

அப்படிப்பட்ட ஒரு நிலை நடைமுறையில் வருமா? வராது. ஆனால் அப்படிப்பட்ட பசி போக்கிய (பசி நீங்கிய) உலகை அமைத்தலே கதை சொல்ல வரும் விஷயமாக நான் புரிந்து கொள்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்கள் இன்னொருவரை வதைக்காதே! வன்முறையற்ற வாழ்க்கையே சிறந்தது என்று அன்றாடம் பாடம் எடுக்கிறோம் அல்லவா? மேற்கூறிய கதையைக் குண்டக்க மண்டக்க எடுத்து என்னிடம் கேள்வி எழுப்ப நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான். அதற்குப் பதில் சொல்ல முடியுமானால் , உங்கள் கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கும்.

“வன்முறையற்ற ” வாழ்க்கை வாழ்தலே சிறந்தது என்பதே அன்றாடம் நாம் கற்றுத்தரும் விஷயம். அவ்வாறானால் உங்களுடைய பசியை எவ்வாறு போக்குவீர்கள்? ” The idea of eating itself is violence” You want to stop violence. Then Stop Eating. எதையாவது கொன்று தின்பதே வாழ்க்கையின் அம்சம். ஆகையால் கதையைத் தவறாகப் புரிந்துகொண்டால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

இயற்கையிலிருந்து நாம் தினமும் பெற்றுக் கொள்கிறோம். ஒருநாள் இயற்கையும் நீ எனக்கு என்ன தரப்போகிறாய் என்று கேட்காமலே உங்களின் உயிரைப் பறிக்கிறது. மீண்டும் ஒரு உலகை இறைவன் படைக்கிறார். இதைத் தான் இந்து மதம் கர்மா என்கிறது. cycle of life என்கிறது.

பி.கு: தேவ் தத் எழுதிய நூல்களைப் படியுங்கள். பேச்சுகளைப் பாருங்கள். பல விஷயங்கள் கிடைக்கும்.

கடலில் ஓர் இந்து ஆலயம் -Trinidad

shiv temple

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் trinidad என்ற இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு நடக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்த விஷயம். நமக்கு மேற்கிந்திய தீவுகளின் அணியில் சந்தர்பால், நரேன், சர்வான், ராம்பால் போன்ற பெயர்களை அறியும்போதெல்லாம் இந்திய வம்சாவழியினர் என அறிந்து கொண்டதைத் தவிர வேறெதுவும் தெரியாதல்லவா?

இதைத்தாண்டி அங்கு இந்து ஆலயம் எழுப்ப சிவ்தாஸ் சாது (Sewdass Sadhu )என்பவர் பல இன்னல்களுக்கு இடையேயும் அங்கு சிவன் ஆலயம் எழுப்ப அவர்பட்ட கஷ்டங்களுக்கான வரலாறை நாமறிய வேண்டும்.

இந்து மதத்தில் மூத்தாரை வழிபடும் விஷயங்கள் மத வழிபாட்டு முறைகளில் ஒன்று. இன்று tininidad ல் sewdas sadhu வால் சிவன் கோவில் கட்டப்பட்டதால் அக்கோவிலுக்கு அவரையும் நினைவிற்கொண்டு ஆலயத்திற்கு வைக்கப்பட்ட பெயரே Sewdass Sadhu Shiv Temple என்பதாகும். இதைப் போல சில உதாரணங்களை நம்மூரில் கூட நாம் காண இயலும். ஏரல் அருணாச்சல நாடாரின் நற்செயலை நினைவு கூறும் விதமாக அவரின் பெயரிலேயே வணங்கும் வழிபாடுகள் இந்து மதத்தில் மூத்தாரையும், நீத்தாரையும் அவர்தம் பெருமைக்காக வணங்கும் வழிபாடுகள் இயல்பானதாகவே உள்ளது.

இனி trinidad ல் எவ்வாறு சிவ ஆலயம் அமைக்கப்பெற்றது என்ற வரலாற்றை அறிவோம். 1800 களில் கூலி வேலைக்காக இந்திய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஏழை மக்களைக் கடத்திக் கொண்டு சென்று வேலை வாங்குவது தான் ஆங்கிலேயர்கள் தங்கள் நிறுவனங்களை வளர்க்கச் செய்யும் யுக்தி. மனித வளமிகுந்த இந்தியாவில் வேண்டுமென்றே பஞ்சத்தை உருவாக்கி அதிலிருந்து விடுபட வேலைக்கு ஆள் எடுத்துச் செல்வதைப் போல மக்களை உலகின் பிற பிரதேசங்களுக்குக் கொண்டு சென்று இந்தியர்களின் உழைப்பை உறிஞ்சும் வரலாறு நாமறிந்ததே.

ஸ்பெயின்,டச்சு, பிரான்ஸ் போன்ற நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு இத்தீவுகள் இங்கிலாந்தின் கைக்குள் வந்தது. அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யவே இந்தியாவிலிருந்து இந்து ஏழைகள் கொண்டுவரப்பட்டனர். தீவுகளிலுள்ள பல கோவில்களை அங்குள்ள கிருத்துவ அமைப்புகள் பல இந்து ஆலயங்களை இடித்துத் தள்ளின.

வாரணாசி சிவன் ஆலயத்தை வணங்க சில ஆண்டுகளுக்கொருமுறை வந்து சென்ற சிவ்தாஸ் சாது , நாமே ஒரு சிவன் ஆலயத்தைக் கட்டலாம் என முடிவு செய்தார்.

கடற்கரையின் ஓரத்தில் சற்றுதள்ளி சிவன் ஆலயம் எழுப்பும் முயற்சிகளை ஆரம்பித்தார். தனியொருவராக தினமும் செங்கலை சைக்கிளில் கொண்டு சென்று ஆலயம் கட்ட ஆரம்பித்தார்.கரும்புத் தோட்ட முதலாளி தமது நிலத்தில் கோவிலைக் கட்டுகிறார் என சொல்லி அவ்வாலயத்தை இடிக்கச் செய்தார். இது விஷயமாகக் கோர்ட்டிலும் வழக்குப் பதிவு செய்தார் நில முதலாளி. கோவிலைத் தம்மால் இடிக்க இயலாது எனச் சொல்ல சிறைத்தண்டனையை அனுபவிக்கிறார். அதற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனையையும் , 400 Dollar அபராதமும் விதிக்கப்படுகிறது. மறுபுறம் அவர் எழுப்பிக் கொண்டிருந்த ஆலயமும் நில உடமையாளரால் இடிக்கப்படுகிறது.

சிறையிலிருந்து வெளிவந்த சாது உங்கள் நிலப்பகுதி என்பதால்தானே இடிக்கிறீர்கள். என் சிவனுக்கு ஆலயத்தைக் கடலில் கட்டினால் யார் உரிமை கொண்டாட முடியும் என்றுரைத்து விட்டு, இம்முறை கோவிலைக் கடலிலேயே எழுப்பி விடுவோம் என முடிவெடுக்கிறார். அலைகள் குறைவாக அடிக்கும் இடத்தில் கோவிலைத் தனியாளாக கட்டுகிறார்.

அதுபற்றிய செய்தி: His tools were simple – two buckets and a bicycle with a carrier at the back. In the buckets, he placed rocks, sand and cement. Balancing the buckets on the two handles of the bicycle, Sewdass Sadhu would push the bicycle out to the mandir site located some 500 feet off the shore into the sea at Waterloo Bay. Sometimes family and villagers assisted him, but largely, it was an almost single handed “Hanumanian” effort. இதை அப்படியே சொல்வதே உத்தமம்.

கோவிலின் பணி முடிவடையும் முன்பாக 1970 ல் வயது முதுமையால் இறந்து விடுகிறார். சில ஆண்டுகளுக்கு அக்கோவில் அப்படியே இருக்கிறது. பின்னர் 1985 ஆம் ஆண்டில் கோவிலை முடிக்கும் பணியை அங்குள்ள இந்து சமுதாயக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. அரசும் கோவில் எழுப்ப அனுமதி அளிக்கிறது. 1995 ஆம் ஆண்டு கோவிலும் கடலில் கட்டி முடிக்கப்படுகிறது. சாது நினைவாக ஆலயத்திற்கு Sewdas Sadhu Shiv Temple என்ற பெயரில் இந்து பக்தர்களால் வழிபடப்படுகிறது.

கூடுதல் தகவல், இன்று Trinidad, Tobogo வில் 18.3% மும், Guyanaவில் 22% இந்துக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் போட்டோவே நீங்கள் பார்ப்பது.

திருக்கார்த்திகையும் நானும்:

This gallery contains 2 photos.

    தீபாவளி நகரங்களின் திருவிழா என்றால், திருக்கார்த்திகையும் பொங்கலும் கிராமங்களின் திருவிழா. திருக்கார்த்திகையை அதிக மகிழ்வுடன் கொண்டாடுவது, சின்னஞ் சிறார்களும் பள்ளி மாணவப் பருவத்தினரும்தான். திருக்கார்த்திகை வரலாற்றை அறிஞர்கள் சொல்லட்டும். நான் என்னுடைய அனுபவத்தையும் எங்கள் கிராமம் கொண்டாடுகிற விதத்தை மட்டும் சொல்கிறேன்.   எங்கள் வீட்டில் திருக் கார்த்திகையையும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகையன்று அரிசிமாவும், மஞ்சள் தூளும் கலந்து மாக்கோலம் இடுவார்கள். வீட்டின் நிலைகளில், கதவுகளில் பட்டை போட்டு (சிலர் வட்டமாக) குங்குமமும் வைப்பார்கள். … Continue reading

நன்மக்கட்பேறு

This gallery contains 1 photo.

நன்மக்கட்பேறு: செல்வங்கள் பல . பொன்னும் பொருளும் மட்டும் செல்வமல்ல;  மாடுமனை மட்டுமே செல்வமல்ல ; அறியாமையால் மக்கள் பலர் இவற்றையும், இவற்றைப் போன்றவற்றையும் மட்டுமே செல்வமென்று  எண்ணுகின்றனர். ஆனால் , உண்மை அதுவன்று . நன்மக்களைப் பெறுவதும் உயர்ந்த செல்வமே. நல்ல பிள்ளை குடும்பத்தைத் துலக்குவான் . குலத்தை விளக்குவான். இதைப்போல் வேறு செல்வங்கள் செய்யுமா?! பிள்ளைச் செல்வம்,  புத்திர பாக்கியம் , மக்கட்பேறு  என இச்செல்வம் பலவாறு குறிப்பிடப்படுகிறது. மக்கட்பேறின்றி  மனவருத்தமுற்ற தசரதன் அதனைப் … Continue reading

கடவுளும், இயற்கையும்

This gallery contains 2 photos.

  உடலை விடுத்து உயிரை உணர்தல் இயலாது. அதனைப் போல, இயற்கையானது உடல் போன்றது. இறைவன் அதற்கு உயிரைப் போன்றவர்.  உலகேங்கிலும் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன.  தாவரங்கள் குறிப்பாக, மரங்கள் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு எதுவாக உள்ளது. இறைமையை உணரவைக்கும் ஆற்றல் இயற்கைக்கு உள்ளது.  உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய இறைவனை நாம் உணர்தல் வேண்டும்.  கோயிலில் எல்லா உயிரனங்களும் பேணப்பட வேண்டியவை என்பதைக் நடைமுறைப் பழக்கத்தாலும், ஆகமங்கள் மூலமும்உணர்த்தியிருக்கின்றனர் நம் முன்னோர்.   அவர்கள் அதிகம் விளக்கம் … Continue reading

கற்குவேல் அய்யனார் கோவில் வரலாறு பகுதி 1

karku vel 1
கற்குவேல் அய்யனார் கோவிலின் வரலாற்றையும் , கோவில் குறித்த தகவலையும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகப் பெரிய உள்ளார்ந்த திருப்தி.
கற்குவேல் அய்யனார் நீதி கூறி மக்களை நல்வழிப்படுத்தி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச் செய்து அருள் பாவித்து வருகிறார். இங்கு எழுந்தருளியிருக்கும் கற்குவேல் அய்யனார், பொற்கலை , பூர்ணம், பேச்சியம்மன், பெரியாண்டவர், சுடலை மாடன், கருப்பன், பட்டவராயன், வன்னிய ராஜா, பலவேஷக்காரன், முன்னடியான், பின்னடியான், தளவை நல்ல மாடசாமி, உதிர மாடன், ஐவர் ராஜா, பிரம்ம சக்தி, இசக்கியம்மன், சங்கிலி மாடன், பகைடைச் சாமி, சொல்கேளா வீரன், சிவனனைந்த பெருமாள், நாகரிக சிவனனைந்த பெருமாள், செருக்கன், சூர்யர் பீடம், இலாட சன்னியாசி,ஆளியப்பர், பொங்கத்த அய்யனார் முதலிய பரிவாரத் தெய்வங்களும் எழுந்தருளி மக்களுக்கு அருள்மழை பொழிந்து வருகின்றனர்.
கற்குவேல் அய்யனார் கோவில் வரலாற்றை யாரிடம் எழுத ஒப்படைக்கலாம் என்று எண்ணிய பொழுது, சிறுதெய்வ வழிபாடு என்ற நூலை எழுதிய முனைவர் பேராசிரியர் கணபதி ராமன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
karku vel 2
கோவில் வரலாறு:
குதிரை மொழி:
ஆதித்த மன்னர்கள் குதிரை மொழி பகுதியை ஆட்சி புரிந்து வந்தனர். மானவீர வளநாடு, வடபத்து தென்பத்து மன்னர்களும் குதிரை மொழியில் உள்ள சுந்தர நாச்சியம்மன் கோவிலுக்கும் வெளிநின்ற பத்ர காளியம்மன் கோவிலுக்கும், கலியுகவரத அய்யனார் கோவிலுக்கும் நிலங்கள் வழங்கி  பூஜை நடைமுறைக்கு வழிவகை செய்தனர். இக்கோவில் கிபி 1639 லேயே அமைந்துள்ளது. கடந்த 500 வருடங்களுக்கும் முந்தைய வரலாறுடையது.
அய்யனார் அருள் காட்சி:
அரக்கர் வம்சத்தில் வல்லரக்கன் என்ற அரக்கன் பிறந்தான். சிறுவயது முதல் சிவனை நினைந்து வழிபட்டு வந்தான். வல்லரக்கன் ஒற்றைக்காலை ஊன்றி மறுகாலை ஊன்றிய காலின் மீது வைத்து நீண்ட தவம் புரிந்தான். ஆண்டுகள் பல ஓடின. சிவன் அறிந்தும் அறியாமலும் இருப்பதைக் கண்ட பார்வதி, பெருமானே அவன் தவத்திற்கு செவி சாய்க்கக் கூடாதா என்றார்.
பார்வதியின் விருப்பத்திற்கேற்ப வல்லரக்கனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு வல்லரக்கன் நான் யார் தலையில் கை வைக்கிறேனோ அவன் உடனே மரணமடைந்து விட வேண்டும் என்றானாம். சிவனும், தந்தேன்  என்றாராம். வரம் கிடைத்த மகிழ்ச்சியிலும் அகங்காரத்திலும் சிவன் தலையில் கை வைக்க நினைத்தானாம். இதையறிந்த விஷ்ணு வல்லரக்கனை மயக்க மோகினி வடிவமெடுத்து சென்றாராம். மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணுவின் அழகில் மயங்கி  , நான் உன்னைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று மோகினியிடம் முறையிட்டானாம்.
உன்னை மணக்கிறேன். ஆனால் நான் செய்வதை நீயும் செய்தால் மணம் புரிகிறேன் என மோகினி வடிவில் இருந்த விஷ்ணு சொல்ல வல்லரக்கன் தலையாட்டினான். உடனே விஷ்ணு தன் தலையில் கைவைக்க, தான் வாங்கிய வரத்தை மறந்து தன் தலையிலேயே கைவைத்தான் வல்லரக்கன். அவன் வாங்கிய வரமே அவனுக்கு சாபமாய் மரணத்தைக் கொடுத்தது. சிவ விஷ்ணுவின் திருவிடையாடளுக்குப் பின் மோகினிக்கும், சிவனுக்கும் பிறந்த குழந்தைதான் ஹரிஹரன் என்ற அய்யனார் பிறந்தார்.
இந்தக் கதையை கோவிலுக்கு வில்லுப் பாட்டு பாட வருபவர்கள் சொல்வதுண்டு. கற்கை என்பதற்கு யானை மீது போடும் பலகை என்றும், வேலிப் பருத்திச் செடி என்றும் அகராதிகள் கூறுகின்றன. கற்கி என்பதற்கு கோவில் என்றும் பொருள் உண்டு. யானை மீது வைக்கப்படும் ஆசனத்தில் அய்யனார் அமர்ந்தருள்வதால் கற்கை அய்யனார் என்று சொல்லப் பெற்று பிற்காலத்தில் கற்குவேலை அய்யனார் என்று சொல்லப் பட்டிருக்கலாம். கற்கு என்பதற்கு கூர்மை என்ற பொருளும் உண்டு. சிலர் கூர்மையான வேல் – ஐக் கொண்ட என்பதைக் குறிப்பதானால் கற்குவேல் அய்யனார் என்று
அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
karku vel 3
வேறு சிலர் கருவேல மரத்தில் எழுந்தருளி காட்சி தந்ததால் கருக்கோ அய்யனார் அன்று சொல்லப் பெற்றார். ” கற்கு வா” என்ற மரத்தின் மீதிருந்து
அருள் பாலித்ததால் “கற்குவா அய்யனார் ” என்றழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே கற்குவேல் அய்யனார் என மருவி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கற்கு என்றால் கூர்மையான பகுதி என்ற பொருளும், மேலும் இப்பகுதி பனை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் அதன் பொருட்கொண்டும் இப்பெயர் அமையப் பெற்று இருக்கலாம் .
karku vel 4
அய்யனார் சன்னதியின் மகா மண்டபத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்தருளியுள்ளார். இலாட சன்னியாசி விநாயகருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். முனிவர் கோலம் முனீஸ்வரர், அய்யனாருக்கு ஆலோசனை கூறும் அமைச்சர் போன்றோர் வலது பக்கத்தில் உள்ளனர். மேலும் வலது பக்கத்தில் பரந்தாமனே ஆளியப்பராக அமர்ந்துள்ளார்.
அய்யனாரின் வாகனமாக குதிரை ஏன், மேலும் எவ்வாறு அய்யனார் அப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்தார் என்பது பற்றிய வரலாற்றை அடுத்த பகுதியில் காண்போம்.

கற்குவேல் அய்யனார் கோவில்

This gallery contains 6 photos.

கோவில் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களைப் பகிருமுன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குல தெய்வமான கற்குவேல் அய்யனார் கோவில் பற்றி எழுதுவதில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. யாரும் நம்புவீர்களா என்று தெரியவில்லை. எனக்கு விபரம் தெரிந்து 6 வயதிலிருந்தே வருடந்தோறும் பொங்கலுக்கு அடுத்த நாளான கரிநாளன்று கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சென்று வருகிறோம். 1980களில் கோவிலுக்குப் பேருந்து வசதி எல்லாம் கிடையாது. எங்கள் ஊரான சாத்தான் குளத்திலிருந்து திருச்செந்தூருக்கு காலையில் 7:30க்கு ஒரு பேருந்து … Continue reading