தாத்தா முதல்ல சாப்பிடட்டும் – ஒரு பக்கக் கதை

This gallery contains 1 photo.

“அழகா , படையலை எச்சில் பண்ணாதே ! நம்ம தாத்தா அதை சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடலாம் ! “அம்மா இலையில் இருந்த வடைபாயாசத்தை சாப்பிடப் போன தனது குழந்தையைத்  தடுத்து நிறுத்தினாள் . அமாம், அன்று தனது மாமனாரின் நினைவுநாள் .  அதற்காக அவள் சமயலறைக்கும் , தனது மாமனாரின் புகைப்படத்தை இறக்கி வைத்து  படையல் ஏற்பாடுகளைச் செய்து  கொண்டிருந்தாள் ..  அழகனின் அப்பா வீடு வந்து சேரவில்லை.  அழகன் மீண்டும் மீண்டும் அதனைச்  சாப்பிட … Continue reading

பச்சோந்தி – சிறுகதை

This gallery contains 1 photo.

    துரைப் பாண்டியன். நல்ல உயரம். முறுக்கிய மீசை. நீண்ட கேரா. முத்துப் பற்கள். உடம்பெல்லாம் முடி. ஆள் பார்ப்பதற்கு நடிகர் விஜய குமார் மாதிரி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்களேன். பிறகென்ன, அவர் தான் ஊர் நாட்டாமை. ஊர் பணக்காரரும் கூட.     ஊரில் எந்தப் பஞ்சாயத்து என்றாலும் துரைப்பாண்டியன் தான் தீர்த்து வைப்பார்.     ஊரில் மொத்தமே இரண்டு சாதிதான். அவர்கள் வாழும் பகுதிக்குள் துரைப் பாண்டியனின் சாதியினர் … Continue reading

தாராள மனசு – ஒரு பக்கக் கதை

This gallery contains 1 photo.

  யம்மா…ஏந்தான் இந்த அப்பா இப்படி இருக்காளோ …. சாப்பாட்டுத் தட்டுல மிச்சம் வைக்கக் கூடாதுன்னு வீட்டுல ரவுசு பண்ணுறார்னு பார்த்தா ஹோட்டல்ல வந்தும், பார்த்து ஆர்டர் பண்ணுங்க. மிச்சம் ஏதும் வச்சுறக் கூடாதுன்னு ஒரே அட்வைஸ். பத்தாக்குறைக்கு சாப்பாடோ, சப்ஜியோ மிஞ்சுச்சுனா பார்சல் போடுங்கன்னு வேற… ஏம்மா, அப்பா இப்படி பிச்சைகாரரா இருக்கார். தினம் தினம் ஏதும் மிஞ்சுதுன்னா பிரிட்ஜ்ல வச்சு காலையில் திண்கலாம்கிறார்.   போடி…. உங்க அப்பா எப்பவுமே இப்படித்தான். அவுக வீட்டுல … Continue reading

கவரி மான் – சிறுகதை :

This gallery contains 1 photo.

சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான். அவனைப் பொறுத்த வரையில் மெசேஜை பாஸ் பண்ணனும். அவ்வளவு தான். என்ன மனுசன்டா இவன்னு நினைச்சுக்கிட்டே பாஸ் அறைக்குள் சென்றேன். சார்….. கூப்பிட்டீங்களா? யெஸ் … சிவா , ப்ளீஸ் உட்காருங்க. எப்படி இருக்கீங்கன்னு சகல உபசரிப்புடன் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.   எல்லா கம்பெனியிலும் ஏன் தனி நபர் மீதான அக்கறையைக் … Continue reading

தவிப்பு – சிறுகதை

This gallery contains 1 photo.

  மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் சைக்கிளின் டைனமோ வெளிச்சம். மரத்திலிருந்து வரும் பறவையின் மெல்லிய முனங்கல். எதையும் ரசிக்க இயலாதவனாய் நான். இயலாதவன் என்பதைக் காட்டிலும் ரசிக்க விரும்பாதவனாய் நான்!. ஒன்பது முப்பதுக்கெல்லாம் வந்து விடுவேன் என்றாள். இன்னும் வரவில்லை. நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் நான். வருகிறேன் என்று அவளே ஒத்துக் கொண்டாள். ஆனாலும் … Continue reading

ஆசிரியர்- சிறுகதை

பிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அவரின் பார்வைக்கும், பேச்சுக்கும் கட்டுப்பாடாத மாணவர்கள் உண்டெனில் அது ஆச்சர்யம்தான்!. இறை வழிபாட்டில் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் அவர் பேசுகிற போது, இவர் தமிழாசிரியர் தானா என்ற சந்தேகம் ஒருவர் மிஞ்சாமல் ஏற்படும் என்றால் மிகையாகாது. பிரம்மநாயகம் பணியாற்றிய ஊர் தளபதி சமுத்திரம். பெயரில் சமுத்திரம் இருந்ததே … Continue reading

பெருமை – ஒரு பக்கக் கதை

This gallery contains 1 photo.

ஏட்டி சகானா….. டிபன் பாக்ஸ்ல நாலு கட்லெட் செஞ்சு வச்சிருக்கேன். பள்ளிக் கூடத்தில அவளுக்குக் கொடுத்தேன்… இவளுக்குக் கொடுத்தேன்னு கொடுத்த… பார்த்துக்க. ஒழுங்காக் கட்டா நீ மட்டும் சாப்பிட்டிட்டு வரணும். புரிஞ்சுதா…. எட்டாம் வகுப்பு படிக்கிற சகானா டிபன் பாச்சை வைக்கிற வரைக்கும் அமைதியாய் இருந்தவளுக்கு, என்ன தோன்றியதோ அம்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். அம்மா, நேத்து நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தப்போ “பகிர்ந்து உண்ணுதலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலும் தான் என்னை சிறந்த குடிமகளாக அடையாளம் … Continue reading

ஜிக்கி

This gallery contains 2 photos.

ஜூலை 29 ,2012 அன்று வெளியாகியுள்ள திண்ணை இணையதள வார இதழில், நான் எழுதிய “ஜிக்கி” என்ற சிறுகதை வெளியிடப்பட்டுள்ளது. எனது கதையைப் பிரசுரித்தமைக்காக திண்ணை ஆசிரியர் குழுவிற்கும், திண்ணை இதழுக்கும், திண்ணையின் வாசகர்களுக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்கான பிணையை இதனோடு இணைத்துள்ளேன். http://puthu.thinnai.com/?p=13576   .

காக்க … காக்க….

இன்று நான் எழுதிய “காக்க … காக்க…. ” என்ற சிறுகதை திண்ணையில் இந்தவார ( ஜூலை 09 ,2012 ) இதழில் வெளிவந்துள்ளது. எனது சிறுகதையை வெளியிட்டமைக்காக திண்ணை இதழுக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்கான பிணையை இதனோடு இணைத்துள்ளேன். திண்ணைக்கும் நன்றி, திண்ணையின் வாசகர்களுக்கும் நன்றி. http://puthu.thinnai.com/?p=12912

குழந்தை மனசு – சிறுகதை

This gallery contains 1 photo.

அக்சயா என்னடி பண்றே… அம்மா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், கதவுல சுவத்துல கிறுக்காதன்னு… சொல்லிக் கொண்டே வந்த செல்வி அன்று என்ன நினைத்தாலோ தெரியவில்லை, அக்சயாவைப் போட்டு அடி… அடின்னு அடிச்சுத் தொலைத்து விட்டாள். தொலைத்தவளின் கோபம் புருஷன் பக்கமாகத் திரும்பியது. கொஞ்சமாவது பிள்ளைகளைப் பார்க்கீங்களா… என்ன பண்ணுதுன்னு? ஆபீஸ்க்கு போயிட்டு வந்தா போதும், எப்ப பார்த்தாலும் டிவி இல்லன்னா, லேப்டாப் என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பொதுவாகவே அவளது கணவன் அவள் புலம்புவதைப் பொருட்படுத்துவதில்லை. ஒருவேளை … Continue reading