உளறல்கள் 1

உளறல்கள் 1
காதலிக்கும் போது  தனக்கானவரிடம் தனது பாசிட்டிவிட்டியை மட்டும் காண்பிப்பவர்களின் சுயரூபம் கல்யாணத்திற்குப் பிறகு  தெரியும் போது தான் காதலும் கசக்கிறது.
அறிவாளிகள் எல்லோரும்  நாகரிகமாகத்தான்  மறுமொழி செய்வார்கள் என எதிர்பார்த்தால் அதுவும்  உன் பிழை தான்.
காமம் மட்டுமே நீடிக்கும் போதுதான் காதலும் செத்துப் போகிறது, கற்பிற்கும் பாதுகாப்பில்லாமல் போகிறது.
நீ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. என்னைப் பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லிவிடாதே.
என்னை விட்டு விலகி விடு என்று கூட சொல்லிடு. அண்ணனாகத் தான் பழகினேன் என்று மட்டும் சொல்லிடாதே.
ஒருதலைக் காதலில் உள்ள சுகமும் திரில்லும் ஏற்றுக் கொண்ட காதலில் கிடைப்பதில்லை.
காலில்லா மனிதனைக் காட்டிலும் காதலில்லா இளைஞன்தான் ஊனமாகிக் கிடக்கிறான்.
என் காதலை மறுக்க மட்டுமே உனக்கு உரிமை இருக்கிறது. மறந்து விடு என்று சொல்வதற்குக் கிடையாது.
என்னை வேண்டுமானால் நீ மறுத்து விட இயலும்.
நான் சொன்ன காதலை ஒருக்காலும் உன்னால் மறந்து விட இயலாது.
மகிழ்ச்சிக்கு வயது ஒரு பொருட்டல்ல.
வியாதிக்கு வயதும் ஒரு பொருட்டுதான்.
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது- வைரமுத்து.
சொல்லாத காதல் எல்லாம் சொப்பனத்தில் சேரும். – இலட்சுமணப் பெருமாள்
காதலைச் சொல்லாமலேயே காதலை வாழ வைப்பவர்கள் காதலில் வெற்றி பெற்று காதலைச் சாகடிப்பவர்களைக் காட்டிலும் மேன்மையானவர்களே!

இது பெண்களின் நூற்றாண்டு பாகம் 2

This gallery contains 1 photo.

நான் எழுதிய ” இது பெண்களின் நூற்றாண்டு” என்ற கட்டுரை கிழக்குப் பதிப்பகத்தின் பிப்ரவரி மாத ஆழம் இதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை வெளி வர பேருதவியும் ஊக்கமும் அளித்து வருகின்ற ஆழம் ஆசிரியர் திரு மருதன் அவர்களுக்கும் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் கீழே. முதல் பாகம் படிக்க விரும்புபவர்கள் இதை அழுத்தவும். தெளிவான தேவையான கருத்துகளுடன் கூடிய கட்டுரை ஆழம் இதழில். 21 ஆம் நூற்றாண்டின் முடிவில்  மக்கள் … Continue reading

இது பெண்களின் நூற்றாண்டு பாகம் 1

This gallery contains 1 photo.

நான் எழுதிய ” இது பெண்களின் நூற்றாண்டு” என்ற கட்டுரை கிழக்குப் பதிப்பகத்தின் பிப்ரவரி மாத ஆழம் இதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை வெளி வர பேருதவியும் ஊக்கமும் அளித்து வருகின்ற ஆழம் ஆசிரியர் திரு மருதன் அவர்களுக்கும் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் கீழே. தெளிவான தேவையான கருத்துகளுடன் கூடிய கட்டுரை ஆழம் இதழில். ஒசாமா பின் லாடன் 2002 ல் அமெரிக்காவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ” உங்களின் … Continue reading

பிள்ளையார் சுழி

This gallery contains 1 photo.

எனது வேண்டுகோளுக்கினங்க நண்பர் முருகன் எழுதித் தந்த பிள்ளையார் சுழி என்ற இக்கட்டுரை,  இவ்வுலகம் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வையையும் அதை ஆன்மிகத்தின் துணை கொண்டும், அவரின் அணுகுதலைப் பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறார். பிள்ளையார் சுழி என்பதற்கு என்ன பொருள்? உலகம் சிவமயம் என்பதே பிள்ளையார் சுழி என்பதற்கான பொருள். “உ” என்ற வார்த்தையிட்டு எழுதுவதன் நோக்கம் என்ன? ” லாபம் ” என்பதே அதன் பொருள். அது வெறும் தொழில் … Continue reading

துபாய் ஒரு பார்வை

This gallery contains 10 photos.

Burj Khalifa இந்தியர்களின் நெஞ்சத்தில் வெளிநாடுகளைப் பற்றி பல கனவுகள் இருக்கும். அதிலும் அமெரிக்காவைப் பற்றியும், ஐரோப்பாவைப் பற்றியும் இன்னும் கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் அனைத்துத் தரப்பு மக்களும், வேலை நிமித்தமாக மேற்கூறிய நாடுகளில் சென்று பணி புரிவதும், அங்கு பணியாற்ற வாய்ப்புக் கிடைப்பதும் அரிது. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களும், மருத்துவர்களும், பொறியாளர்களுமே அந்நாடுகளில் பணிபுரிகிறார்கள். ஆனால் வளைகுடா நாடுகளில் அவ்வாறல்ல. வளைகுடா நாடுகளில் தொழிலாளிகள் முதல் தனி நிறுவனங்கள் வைத்து நடத்தும் அளவுக்கு, எல்லா தரப்பு … Continue reading

சரியும் ரூபாய்: பாதிப்புகளும் நன்மைகளும்

This gallery contains 1 photo.

ஆழம் ஜூன் மாத இதழில் நான் எழுதிய “சரியும் ரூபாயும்: பாதிப்புகளும் நன்மைகளும்” கட்டுரையின் முழுவடிவம் அனைவரின் பார்வைக்காகவும் படைக்கப்படுகிறது.     ஆழம் இதழில் வெளிவர பேருதவி புரிந்த பொறுப்பாசிரியர் திரு. மருதன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் திரு பத்ரிநாத் அவர்களுக்கும், மற்றும்  ஆழம் இதழின் ஆசிரியர் குழுவிற்கும், ஏனையோருக்கும் எனது நன்றிகள் பல……       ஆழம் இதழில் சுருக்கப்பட்ட வடிவத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதன் முழு வடிவம் இதோ:     இக்கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில் ஒரு டாலரின் மதிப்பு  Rs … Continue reading

அனுபவங்கள் தந்த தத்துவங்கள்

This gallery contains 1 photo.

உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டுதலைக் காட்டிலும் பெரிய பழி தீர்த்தல் வேறொன்றுமில்லை.   சில நேரங்களில் புரிதல்கள் கூட தவறாகவேப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.   மனம் கெட்டதையும் செய்யச் சொல்கிறது. மனட்சாட்சி நல்லதை மட்டுமே செய்யச் சொல்கிறது.   கோபம் பழி வாங்கத் துடிக்கிறது. வருத்தம் அனுதாபம் கொள்கிறது.   எந்த ஒரு விடயமும் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடியதல்ல. கவிஞர்களின் கவிதையைப் போலவே!   உங்கள் மீது கோபப்படுபவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் … Continue reading

சவுதி அரேபியா சில தகவல்கள்

This gallery contains 1 photo.

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது. அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும். சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். உலக மனிதர்களில் ஒருவனாக எனக்கும் பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற … Continue reading

பரத்தை – கவிதை

This gallery contains 1 photo.

நித்தம் நித்தம் வயிறு கழுவ  சித்தம் விற்கிறாள்!   எச்சம்தான்! –  இருந்தாலும் இனிக்கிறாள்   இருட்டில்தான்- இவள் வாழ்க்கை வெளிச்சம்   கட்டழகு உள்ளவரை களப்பணியில் குறையில்லை வருபவர்களின் எண்ணிக்கையிலும் குறையில்லை வரவிலும் குறையில்லை   வாடிக்கையாளர்களுக்கு தகுதி தேவையில்லை பரத்தையின் உடல் வாலிபத்திற்கே – தேவை தகுதி   உழைப்பு அவளது.. சுரண்டல்கள் காவலர்களது   வேசி, தேசி பிராத்தல், தேவடியாள் பட்டப்பெயர்களுக்குப் பஞ்சமில்லை   படுக்கைப் பகிர்வுகளுக்கும் பஞ்சமில்லை எழில் உள்ளவரை தொழில் பஞ்சமில்லை!   சீண்டல்களினால் … Continue reading

ரயில் பயணம் பாகம் 1

This gallery contains 4 photos.

            ″A traveler without observation is a bird without wings.” – Moslih Eddin Saadi. சற்றே தொலைவில் உள்ள இடங்களுக்கு பயணப்படுவதில் யாருக்கும் சலிப்பில்லை. நெடுந்தூரப் பயணங்களில் சிலருக்கு மட்டுமே விருப்பம் உள்ளது. பலரும் போய் சேருகிற இடம் எப்போது வந்து சேரும் என்றே நினைக்கிறார்கள். பேருந்து பயணம், விமான பயணம், ரயில் பயணம், ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் இருக்கிறது. பேருந்து பயணத்திலும், விமான பயணத்திலும் ஏதோ சுதந்திரமில்லா தன்மை … Continue reading