நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாகம் 2

This gallery contains 1 photo.

‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி’. பாகம் 1 ல், நேதாஜியின் இளமைக் காலத்தையும், ஆன்மிகத்தில் அவருக்கு இருந்த நாட்டத்தையும் கண்டோம். இந்த வாரம், அவர் காங்கிரசில் இணைந்து பணியாற்றியதையும், காங்கிரசில் அவர் வகித்த பதவிகளையும், காந்தியுடன் அவருக்கு ஏற்பட்ட முரண்களையும் கற்போம்.    ஐ.சி.எஸ். முடித்து 1921 ஆம் ஆண்டு, தனது 23 வது வயதில் மீண்டும் இந்தியா வந்த சுபாஷ் சந்திர போஸ், ஐ.சி.எஸ். அதிகாரியாக பணியில் சேரவில்லை. ஆனால் … Continue reading

இட ஒதுக்கீடும் ஜாதிய ஒழிப்பும்

This gallery contains 1 photo.

தமிழகத்தில் இன்றைய இட ஒதுக்கீட்டு நிலை பின்வருமாறு உள்ளது: 1. அட்டவணை சாதிகள்: 18%. அதில் 3% அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு (Scheduled caste) 2. பழங்குடியினருக்கு: 1% (ST) 3. பிற்படுத்தப்பட்டோருக்கு: 30%. அதில் 3.5% முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு (BC) 4. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு: 20% (MBC) 5. பொதுப் பிரிவு 31% (OC) மேற்கூறிய பட்டியல் விக்கிபிடியா மற்றும்  திரு பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையிலிருந்தும் குறிப்பெடுத்தேன். இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி நிலைநாட்டவும் , பொருளாதார வளர்ச்சியை  எல்லா சமூகத்தினரும் அடைய வேண்டும் என்ற  நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதே. தற்போது, இட ஒதுக்கீடு ஜாதிய பலத்தின்(சதவிகித) அடிப்படையில்  கொண்டுவரவேண்டும் என்ற கருத்து  வலுப் பெற்று வருகிறது. அதாவது பொதுப் பிரிவு என்ற ஒன்றே வேண்டாம்  என்பதே அவர்கள் கருத்து. … Continue reading

ஓரினச்சேர்க்கை குற்றமா?

Image

எனது ஓரினச்சேர்க்கை குற்றமா? கட்டுரை தமிழ் பேப்பர் இணையதளத்தில் வெளியிடப்படுள்ளது. மேலும் படிக்க பின்வரும் பிணையை அழுத்தவும்.

http://www.tamilpaper.net/?p=5594

கொலையா? கொள்ளையா? எது கொடிய குற்றம் ?

This gallery contains 1 photo.

இன்றைய தலைப்புச்  செய்திகளில் வங்கிக் கொள்ளையடித்த ஐந்து பேரைக் காவல்துறை, தற்காப்பு கருதி சுட்டுக் கொன்றதாக பரபரப்பான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. மனித நேய கமிட்டி இச்செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கொள்ளை அடித்தவர்கள் ஐவரும் வட மாநிலத்தவர்கள் என்று காவல் துறை குறிப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  நிறைய எழுத்தாளர்கள், கொன்றது குறித்து தங்கள் இணையதளங்களில் பின்வரும் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.  வே. மதிமாறன் இணையதளக்  கேள்விகள்: குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த … Continue reading

விரல்களும் உள்ளங்கைகளும்

This gallery contains 1 photo.

நான் மென் பொருள் பற்றிய குறுகிய கால பயிற்சி எடுத்த போது, ஒரு பெண் என்னிடம் பேசலானாள்.  அவள் பேசும் போது, அவள் சொற்களைக் காட்டிலும் விரல்கள் அதிகம் பேசின. பேசியவள் சென்று விட்டாள்.  அதுநாள் வரை விரல்கள் பற்றிய எந்த எண்ணமும் இல்லாதவனாகவே இருந்தேன். நீளமான விரல்கள். நகங்கள், கழுகின் அலகு போன்ற கூர்மை. இளஞ் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தன. எவ்வளவு வெண்மை. எவ்வளவு அழகு.   குழந்தையின் விரலும் பெண்ணின் விரலும் கடிப்பதற்கு அதிகம் தூண்டும். விரல்களில் கண்ணுக்கு தெரியாத … Continue reading

நீதியும் நியாயமும்

This gallery contains 1 photo.

   நீதி என்பது பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பான்மையான மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றே.  நீதி ஒட்டு மொத்த உலகத்திற்கும் பொதுவானதாக இல்லை. ஒவ்வொரு நாடும் அதனதன் வாழ்வியல் சூழல் முறையிலும் , மதக் கோட்பாட்டின் அடிப்படையிலும், ஜாதிய வழிமுறைகளாலும், இன அடிப்படையாலும் தங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆகையால்தான் ஒவ்வொரு நாட்டிற்க்கும் நீதி வேறுபடுகிறது.  சரி இது, தவறு இது என்று ஒழுங்குபடுத்திக் கொண்டு, செய்கிற தவறுகளுக்கு தகுந்தவாறு தண்டனையை வகுத்துக் கொண்டார்கள்.  சட்டத்தை ஆதி காலத்தில் உருவாக்கியவர்கள் ஆண் வர்க்கதினராகத்தான் இருந்திருக்கக் கூடும் . அவர்கள் தங்களுக்கு சாதகமாக … Continue reading

தமிழ் புத்தாண்டு

சித்திரைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டா, தைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டா என்ற தலைப்பில் நான் எழுத விரும்பியதற்கு காரணம்,  எல்லா இளைஞர்களும் தமிழக அரசுகள் புத்தாண்டு தினத்தை மாற்றி மாற்றி  அறிவித்த பொழுது மிகுந்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். மேலும் இந்த தலைப்பை அதிகமுறை விவாதப்பொருளுக்கு எடுத்திருப்பார்கள் என்று நம்புவதுதான். இந்த கட்டுரையின் நோக்கம் நான் பல்வேறு இணைய தளங்களிலிருந்து படித்த பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவதும் மற்றும் அது குறித்த என்னுடைய எண்ணங்களையும் பகிர்கிறேன். தைத்திங்கள் முதல்நாள் … Continue reading