நரேந்திர மோடியின் புத்தாண்டு கொண்டாட்டம் 2015

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தமது பிரதம அலுவலக அதிகாரிகளுடன் கொண்டாடிய போது சில சுவாராஸ்யமான உரையாடல்களும், சில கேள்விகளுக்கு மோடி நகைச்சுவையாகவும், ஊக்கமளிக்கும் பதிலாகவும் அமைந்துள்ளதைப் படிக்கும் போதே நம்மால் உணர இயலும்.

இந்த நிகழ்ச்சிக்கு முதன்மைச் செயலாளரில் ஆரம்பித்து, குறைந்த நிலையில் உள்ளவர் வரை அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தமது துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது உரையாடுவதற்கு இதுபோன்ற கொண்டாட்ட மனநிலையில் அவர்களது கருத்தை ஆழமாகவும் திறந்த மனதுடனும் முன் வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்டே இது போன்ற கொண்டாட்டங்களை அவ்வப்போது மேற்கொள்வார்.

மோடிக்கு தமது அதிகாரிகள் சர்வ நிச்சயமாக பல யோசனைகளை வைத்திருக்கக் கூடும், அதை அவர்களின் சிந்தனைகளைத் தம்முடன் பகிர்வதன் மூலம் நாட்டுக்குத் தேவையான நலத்திட்டங்களை முன்னெடுக்க உதவும் எனத் தீவிரமாக நம்புகிறார்.

பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அழைத்துள்ளார். ஒரேயொரு சாம்பிள் மட்டும் இப்போது.

ஏழு வயது சிறுமி தனது மூன்று வயது தம்பியைத் தூக்கிக் கொண்டு மலை உச்சிக்கு ஏறிச் சென்றாள். அங்கு ஒரு துறவியைக் கண்ட போது துறவிக்கும், சிறுமிக்கும் நடந்த உரையாடல்.

துறவி: உன் தம்பியைத் தூக்கிக் கொண்டு இவ்வளவு உயரத்திற்குத் சுமந்து கொண்டே வந்தாயே? உனக்கு அயர்ச்சியாக இல்லையா? என்று கேட்டார்.

சிறுமி: அயர்ச்சியாக இல்லை.

துறவி: உண்மையிலேயே அயர்ச்சியாக இல்லையா?

சிறுமி: இல்லை. ஏனெனில் அவன் என் தம்பி.

துறவி: மீண்டும் அதே கேள்வி.

சிறுமி: மீண்டும் அதே பதில்.

இந்தக் கதையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தமது அலுவலக அதிகாரிகளோடு கலந்து கொண்ட போது, ஓர் அதிகாரி ஒவ்வொருவருவம் எவ்வாறு ஊக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், பாரத தேசத்து மக்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பூர்த்தி செய்ய உங்களைத் தான் நம்புகிறார்கள் என நீங்கள் எண்ணும் போது நமது பணியில் ஒருபோதும் நமக்கு அயர்ச்சியும் வருவதில்லை, சுமையாகவும் தோன்றாது என மேற்கோள் காட்டிப் பேசியது அனைவருக்கும் சர்வ நிச்சயமாக அதிகாரிகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் அல்லவா?

கட்டை அடி ஆட்டம் (பகடை)

நேற்று விஜய் டிவியின் மகாபாரதத்தில் பகடை உருட்டும் காட்சி நடந்தது. உடனே எனக்கு நினைவுக்கு வந்தது எங்கூரு கோயில் கொடையில் நாங்க கட்டை விளையாடியது தான்.எங்க கிராமத்தில் நடக்கும் கோயில் கொடையின் போது கட்டை உருட்டுவார்கள். ஒரே கூட்டமா இருக்கும். சில நேரம் சின்ன பசங்களை சேர்க்க மாட்டாங்க. நாங்க என்ன பண்ணுவோம்னா வீட்டில் கலர் குடிக்க பைசா வேணும்னு கேட்டு ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ வாங்கிக்கிறது. கலர்ன்னா , வேற ஒண்ணுமில்ல. சீனியைப் போட்டு கலர் … Continue reading

கவரி மான் – சிறுகதை :

This gallery contains 1 photo.

சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான். அவனைப் பொறுத்த வரையில் மெசேஜை பாஸ் பண்ணனும். அவ்வளவு தான். என்ன மனுசன்டா இவன்னு நினைச்சுக்கிட்டே பாஸ் அறைக்குள் சென்றேன். சார்….. கூப்பிட்டீங்களா? யெஸ் … சிவா , ப்ளீஸ் உட்காருங்க. எப்படி இருக்கீங்கன்னு சகல உபசரிப்புடன் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.   எல்லா கம்பெனியிலும் ஏன் தனி நபர் மீதான அக்கறையைக் … Continue reading

தவிப்பு – சிறுகதை

This gallery contains 1 photo.

  மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் சைக்கிளின் டைனமோ வெளிச்சம். மரத்திலிருந்து வரும் பறவையின் மெல்லிய முனங்கல். எதையும் ரசிக்க இயலாதவனாய் நான். இயலாதவன் என்பதைக் காட்டிலும் ரசிக்க விரும்பாதவனாய் நான்!. ஒன்பது முப்பதுக்கெல்லாம் வந்து விடுவேன் என்றாள். இன்னும் வரவில்லை. நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் நான். வருகிறேன் என்று அவளே ஒத்துக் கொண்டாள். ஆனாலும் … Continue reading

துப்பாக்கி – திரை விமர்சனம்

This gallery contains 2 photos.

துர்பாக்கிய நிலையில் இருந்த விஜய்க்கு துப்பாக்கி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது!. “இங்க அடிச்சா அங்க  வலிக்கும். அவன் தானா வெளிய வருவான் பாருங்கன்னு” யூகிசேது ரமணாவில் ஒரு காட்சியில் சொல்வார். அதே தந்திரத்தை நம் கண்ணுக்குத் தெரியாமல் துப்பாக்கியிலும் இந்த ஸ்லிப்பர் செல்-சை பிடிக்கிறதால் ஒரு விஷயமும் கிடைக்கப் போறதில்ல, ஆனால் இவங்கள கொன்னுட்டா ,  தீவிரவாதியின் தலைவன் தானா நம்ம தேடி வர வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் சொல்கிற அந்தக் காட்சியில் இருந்து படம் சூடு … Continue reading

நீயா நானாவில் கருபழனியப்பன் – சுவாராஸ்யமான பேச்சு – காணொளி

கரு பழனியப்பனின் காதல் திருமணம் குறித்த பேச்சில் குறிப்பாக நான் கவனித்தது இதுதான்: ” எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய். ஆனால் செய்த பிறகு , உன்னால் அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் மீண்டும் , மீண்டும் தாராளமாக செய். ஏனெனில் நீ செய்கிற விஷயம் சரியானது. ஆனால் ஒரு காரியத்தை செய்து விட்டு, அதை உன் தந்தை என்னிடம் பகிர முடியாதெனில், மீண்டும் அதைச் செய்யாதே. ஏனெனில் அது தவறு”. மிகச் சரியான, … Continue reading

ஆசிரியர்- சிறுகதை

பிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அவரின் பார்வைக்கும், பேச்சுக்கும் கட்டுப்பாடாத மாணவர்கள் உண்டெனில் அது ஆச்சர்யம்தான்!. இறை வழிபாட்டில் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் அவர் பேசுகிற போது, இவர் தமிழாசிரியர் தானா என்ற சந்தேகம் ஒருவர் மிஞ்சாமல் ஏற்படும் என்றால் மிகையாகாது. பிரம்மநாயகம் பணியாற்றிய ஊர் தளபதி சமுத்திரம். பெயரில் சமுத்திரம் இருந்ததே … Continue reading

ஹைக்கூ கவிதைகள்

This gallery contains 1 photo.

எனது அத்தான் திரு. முருகன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் :   1947 க்கு முன்: ஆங்கிலேயனிடம் தேசத்தைக் கொடுத்ததால் விடுதலையை இழந்தோம்! 1947  க்குப் பின் : ஆங்கிலேயன் விடுதலை கொடுத்ததால் தேசத்தை இழந்தோம்! மௌனம் :- பலவற்றைச் சாதிக்கிறது சில சமயம் -அது பலரையும் பாதிக்கிறது!

பிள்ளையார் பிடிக்க முயன்று!

This gallery contains 1 photo.

எனது அத்தான் திரு. முருகன், ராமநாத புரத்திலிருந்து, எனது வேண்டுகோளுக்கு இணங்க எழுதித் தந்த கவிதை!. அத்தானுக்கு சமயங்களைப் பற்றிய அறிவும், இறைப் பாடல்களும் அத்துப் பிடி. ஏனைய நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர். மாமா தமிழ் பண்டிட் என்பதாலோ என்னவோ, அத்தானுக்கு தமிழ் மீதான ஆர்வமும், இறை பக்தியும் அதிகம். பனிச் சுமைக் காரணமாக அவரால் அதிகம் எழுத இயலவில்லை என்ற போதிலும், எனது நச்சரித்தலும், மேலும் அவருக்கும் உள்ள ஆர்வத்தினால் அவர் எனக்கு 08 … Continue reading

பெருமை – ஒரு பக்கக் கதை

This gallery contains 1 photo.

ஏட்டி சகானா….. டிபன் பாக்ஸ்ல நாலு கட்லெட் செஞ்சு வச்சிருக்கேன். பள்ளிக் கூடத்தில அவளுக்குக் கொடுத்தேன்… இவளுக்குக் கொடுத்தேன்னு கொடுத்த… பார்த்துக்க. ஒழுங்காக் கட்டா நீ மட்டும் சாப்பிட்டிட்டு வரணும். புரிஞ்சுதா…. எட்டாம் வகுப்பு படிக்கிற சகானா டிபன் பாச்சை வைக்கிற வரைக்கும் அமைதியாய் இருந்தவளுக்கு, என்ன தோன்றியதோ அம்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். அம்மா, நேத்து நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தப்போ “பகிர்ந்து உண்ணுதலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலும் தான் என்னை சிறந்த குடிமகளாக அடையாளம் … Continue reading