இந்துத்துவாவை எவ்வாறு பார்க்க வேண்டும்?

முஸ்லிம் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இந்தோனேசியா இன்று விளங்கினாலும், அதனுடைய ஆதி காலக் கலாச்சாரமாக விளங்கியற்கான அடையாளம் தான், இந்தோனேசியாவின் தேசிய விமானத்தின் பெயர் கருடா, அதனுடைய தேசிய வங்கியின் பெயர் என்ன தெரியுமா? குபேரா. இந்தோனேசியாவிலுள்ள ஜகார்தா பல்கலைக் கழகத்தின் பெயர் சாந்தி பணே ( கிருஷ்ணாவின் குரு). இன்றைய இந்தோனேசியாவில் இஸ்லாமிய மக்கள் அதிகமிருந்தாலும்(87%), (Hindu 3% ) அதனுடைய கலாச்சார அடையாளம் தான், ராமாயாணமும் மஹா பாரதமும். Cultural tradition is common … Continue reading

ஆணாதிக்கமும் பெண் சுதந்திரமும்:

This gallery contains 2 photos.

ஆணாதிக்கம் என்ற வார்த்தையே மிகச் சிறந்த அரசியல் வார்த்தையா?அது எல்லா காலக் கட்டத்திலும் இருந்ததா என்பதை அறிவியலின் துணை கொண்டு நான் புரிந்து கொண்டதையே கருத்தாக்கி உள்ளேன்.. 1. செக்ஸ் என்ற ஒற்றை ஆசையும் இனப் பெருக்க விருத்தியும் தான் தன் வாழ்நாள் சந்தோசம் என்றெண்ணியே ஆணும் பெண்ணும் வாழ்ந்துள்ளார்கள். இல்லையெனில் ஏன் ஒரு ஆண், ஒருத்தியோடு செக்ஸ் வைத்துக்கொள்வதற்காக  காடு மேடு என சுற்றி கஷ்டப்பட்டு வேட்டையாடி அவளுக்காகவும் , அவள் குழந்தைக்காகவும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும்?? … Continue reading

சவுதி அரேபியா சில தகவல்கள்

This gallery contains 1 photo.

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது. அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும். சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். உலக மனிதர்களில் ஒருவனாக எனக்கும் பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற … Continue reading

உழைப்பாளர்கள் தினம்:

This gallery contains 5 photos.

மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் எனக் கூறப்படுகிறது. இதுதான் நாம் அறிந்த செய்தி. இத்தினம்தான் உலக நாடுகள் முழுவதும் ஏற்றுக் கொண்டாடுகின்றனவா?  இத்தினம் எவ்வாறு மே ஒன்றாம் தேதியாக மாறியது…. என்பதை அறியும் பொருட்டே இக்கட்டுரை. இரண்டாவதாக, உழைப்பாளர் தினம் ஏன் ஒரு தொழிற்சாலையோடு பணியாற்றுகிற தொழிலாளிகளுக்காக மட்டுமே கொண்டாடப் படக் கூடிய விழாவாக உருவெடுத்தது. அப்படியானால், விவசாயிகளுக்கான விழா எது? கைவினை பொருட்களை வடிக்கும் குயவர்களுக்கான விழா எது? கடலில் மீன் பிடிக்கும் தொழிலாளிக்கான விழா எது? இன்னும்…இன்னும்…தொழிற்சாலைக் கூடத்தில் பணியாற்றும் தொழிலாளிகளைத் தவிர மற்ற உழைப்பாளிகளுக்கான விழா என்கிற கேள்விக்கான விடை … Continue reading

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாகம் 3

This gallery contains 1 photo.

“நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை … Continue reading

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாகம் 2

This gallery contains 1 photo.

‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி’. பாகம் 1 ல், நேதாஜியின் இளமைக் காலத்தையும், ஆன்மிகத்தில் அவருக்கு இருந்த நாட்டத்தையும் கண்டோம். இந்த வாரம், அவர் காங்கிரசில் இணைந்து பணியாற்றியதையும், காங்கிரசில் அவர் வகித்த பதவிகளையும், காந்தியுடன் அவருக்கு ஏற்பட்ட முரண்களையும் கற்போம்.    ஐ.சி.எஸ். முடித்து 1921 ஆம் ஆண்டு, தனது 23 வது வயதில் மீண்டும் இந்தியா வந்த சுபாஷ் சந்திர போஸ், ஐ.சி.எஸ். அதிகாரியாக பணியில் சேரவில்லை. ஆனால் … Continue reading

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாகம் 1

This gallery contains 1 photo.

“அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது – எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ – அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது… ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் … Continue reading

நீதியும் நியாயமும்

This gallery contains 1 photo.

   நீதி என்பது பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பான்மையான மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றே.  நீதி ஒட்டு மொத்த உலகத்திற்கும் பொதுவானதாக இல்லை. ஒவ்வொரு நாடும் அதனதன் வாழ்வியல் சூழல் முறையிலும் , மதக் கோட்பாட்டின் அடிப்படையிலும், ஜாதிய வழிமுறைகளாலும், இன அடிப்படையாலும் தங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆகையால்தான் ஒவ்வொரு நாட்டிற்க்கும் நீதி வேறுபடுகிறது.  சரி இது, தவறு இது என்று ஒழுங்குபடுத்திக் கொண்டு, செய்கிற தவறுகளுக்கு தகுந்தவாறு தண்டனையை வகுத்துக் கொண்டார்கள்.  சட்டத்தை ஆதி காலத்தில் உருவாக்கியவர்கள் ஆண் வர்க்கதினராகத்தான் இருந்திருக்கக் கூடும் . அவர்கள் தங்களுக்கு சாதகமாக … Continue reading

தமிழ் புத்தாண்டு

சித்திரைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டா, தைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டா என்ற தலைப்பில் நான் எழுத விரும்பியதற்கு காரணம்,  எல்லா இளைஞர்களும் தமிழக அரசுகள் புத்தாண்டு தினத்தை மாற்றி மாற்றி  அறிவித்த பொழுது மிகுந்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். மேலும் இந்த தலைப்பை அதிகமுறை விவாதப்பொருளுக்கு எடுத்திருப்பார்கள் என்று நம்புவதுதான். இந்த கட்டுரையின் நோக்கம் நான் பல்வேறு இணைய தளங்களிலிருந்து படித்த பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவதும் மற்றும் அது குறித்த என்னுடைய எண்ணங்களையும் பகிர்கிறேன். தைத்திங்கள் முதல்நாள் … Continue reading