பித்தத்தில் ஆம் ஆத்மியும் மோடி வெறுப்பாளர்களும்:

ஆம் ஆத்மி கட்சியும் மோடி வெறுப்பு வெறியர்களும் ஒரு பொய்யைப் பிரதானமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது மோடி 3,00,000 க்கும் அதிகமான போலி வாக்காளர்களை தமது கட்சிக்காக சேர்த்துத்தான் வெற்றி பெற்றார் என்பதே. இது பற்றிய எனது ஆய்வையும், வாக்கு விவரங்களை இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்திலிருந்து எடுத்தே முன்வைக்கிறேன்.

வாரணாசி 2009 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 15,61,854

வாரணாசி 2014 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 17,66,487

வாரணாசி வாக்காளர் வித்தியாசம் (2014 -2009) = 2,04,633

2009 தேர்தல் வாக்கு சதவீதம்/பதிவான வாக்குகள் = 42.6 % ( 6,70,891)

2014 தேர்தல் வாக்கு சதவீதம்/பதிவான வாக்குகள் = 58.35 % (10,30,685)

பதிவான வாக்குகள் வித்தியாசம் 2014 – 2009 = 15.75% ( 3,59,794)

BSP ஓட்டு வித்தியாசம் (2009 -2014 தேர்தல்) = 1,85,882 – 60,534= 1,25,348(இழப்பு ஓட்டுகள்)

SP ஓட்டு வித்தியாசம் (2009 – 2014 ) = 1,23,826 – 45,266 = 78,560(இழப்பு ஓட்டுகள்)

Congress ஓட்டு வித்தியாசம் (2009 – 2014) = 66,352 -75541 = -9189 (அதிக ஓட்டுகள் 2009 –யோடு compare செய்தால்)

ஆம் ஆத்மி 2009 தேர்தலில் நிற்கவில்லை = 2,09,111 (2014 தேர்தலில் பெற்ற ஓட்டுகள்)

ஆம் ஆத்மி இல்லாமல் பிரதான கட்சிகளான BSP + SP + Cong கட்சிகள் 2009 ல் பெற்ற ஓட்டுகள் = 3,76,060

ஆம் ஆத்மியையும் சேர்த்து இந்த கட்சிகள் 2014 ல் பெற்ற ஓட்டுகள் = 4,23,746

அப்னா தள் (2009ல் பெற்ற ஓட்டுகள்) = 65,907 (2014 ல் பாஜக கூட்டணியில் வந்துவிட்டது.)

பாஜக 2009 ல் பெற்ற வாக்குகள் = 2,02,969 + 65,907 = 2,67,907

மோடி பெற்ற வாக்குகள் = 5,80,423

இந்த விடயங்களை ஆராய்ந்தால் சில விஷயங்கள் புலப்படும்.

1. ஓட்டு சதவீதம் 15.75 % கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது.

2. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2009 தேர்தலோடு ஒப்பிடுகையில் 2,04,633 அதிகரித்திருப்பது + 3,59,794 வாக்குகள் 2014 தேர்தலில் அதிகமாகப் பதிவாகி இருப்பது கவனிக்க வேண்டியது. இது ஏதோ வாரணாசியில் மட்டும் அதிகரித்த வாக்காளர்களின் எண்ணிக்கையோ/ வாக்கு சதவீத வித்தியாசமோ அல்ல. இந்தியா முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்துள்ளது.

3. நாட்டின் பிரதம வேட்பாளர் என அறிவித்துக் கொண்ட இரண்டு தலைவர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அங்கு இயல்பாகவே இருதரப்பு ஆதரவாளர்களும் வாக்களிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆதலால் பிரதமராக யார் வரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு அதிக வாக்குகளை அளிப்பார்கள் என்பது நிதர்சனம். இந்தியா முழுவதும் மோடி என்ற மனிதன் மீது நம்பிக்கை வைத்து பாஜகவை இந்தியா முழுக்க பாஜகவே கனவில் காணாத தனிப் பெரும்பான்மையை மக்கள் அளித்துள்ளார்கள் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயமாக 25,000 to 30,000 வரை போலி வாக்காளர்கள் இருக்கக் கூடும் இது வாரணாசி என்கிற ஒரு தொகுதிக்கு மட்டும் பொருத்தமல்ல.

4. SP, BSP ஆகிய இரு கட்சிகளும் தமது வாக்கைப் பெருமளவுக்கு இந்தத் தேர்தலில் உத்திரப்பிரதேசம் முழுவதுமே இழந்திருந்தார்கள். அவர்கள் ஆதரவு ஓட்டுகளை வாரணாசியில் (2,03,908) இந்த முறை இழந்ததையும் , புதிய வாக்காளர்களையும்தான் (2,04,633) மோடியும் கெஜ்ரிவாலும் பகிர்ந்துள்ளார்கள் என்பதை மேற்கூறிய எண்ணிக்கை வித்தியாசத்திலிருந்து நம்மால் உணர இயலும்.

5. கேஜ்ரிவாலுக்கு விழுந்த ஓட்டுகள் எங்கிருந்து வந்தது என்பதை அவர்தான் விளக்க வேண்டும். டெல்லி சட்டசபைத் தேர்தலில் ,2008 தேர்தலைக் காட்டிலும் 10 சதவீதம் வாக்குகள் 2013 தேர்தலில் விழுந்ததற்காக குதுகலித்தவர் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதே மாநிலத்தில் 10 % அதிக அளவுக்கு வாக்குகள் பதிவானதற்குக் காரணம் என்றாரே. இப்போது இரு பிரதம வேட்பாளர்கள் நிற்கிற வாரணாசியில் 15% அதிகரித்திருப்பதற்கு மட்டும் போலி வாக்காளர் வாக்குப் பதிவு என எப்படி சொல்ல இயலும்.

மோடியை வெல்ல இயலாதவர்கள் மோடியின் வெற்றி போலியானது என்று சொல்ல முனைவது இந்திய வாக்காளர்களை முட்டாள்கள் என்று சொல்ல முனைவதற்கு சமம்தான். ஆம் ஆத்மிக்கு எதிராக டெல்லி தேர்தல் முடிவுகள் சொல்லும். அப்போதும் மோடி மக்களை ஏமாற்றுகிறார் என சொல்லிக் கொண்டு மனதைத் தேற்றுவது ஒன்றே ஆம் ஆத்மி ஆதரவாளர்களும் மோடி வெறுப்பாளர்களும் செய்ய வேண்டி இருக்கும்.

ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?

This gallery contains 2 photos.

என்னுடைய கட்டுரை தமிழ் ஹிந்து இணைய இதழில் வெளிவர உதவிய நண்பர் திரு ஜடாயு அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிற்கும் எனது நன்றிகள்.   ஆம் ஆத்மியை ஆதரிப்பவர்கள் அதை ஆதரிப்பதற்கு முன் வைக்கும் முதன்மையான மூன்று காரணங்கள் இவைதான். 1.       ஆம் ஆத்மி ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிறது. 2.       ஆம் ஆத்மி அதிகாரப் பகிர்வு குறித்து பேசுகிறது. 3.       ஆம் ஆத்மி மக்கள் பங்களிப்புடன் கூடிய ஜனநாயகம் பற்றி பேசுகிறது. கிராம சபை, மொகல்லா சபை ஆகியவற்றைக் … Continue reading