பருவமெய்தும் வரை
எட்டிப் பிடித்தும் விளையாடினோம்
கட்டிப் பிடித்தும் விளையாடினோம்
கள்ள நெஞ்சமல்ல…
யாரும் கண்டுகொள்ளவுமில்லை!
நீ ஆளாகினாய்
என்னை ஆளாக்கினாய்!
மண்பார்த்து நடந்தாலும்
பின் தொடர்வதைக் கவனித்தாய்
என்ன நினைத்தாயோ
இறுதியில் சம்மதித்தாய்!
அச்சம் கைமாறியது
இச்சையை நிறைவேற்ற நான் சொல்கிற
கச்சையைக்கூட கட்டி வந்தாய்
நான் கரைக்க
ஊர் குரைக்க
பொருட்படுத்தாமல் ஓடி வந்தாய்!
தனித்துப் போனோம்
களித்துக் கிடந்தோம்
உச்சத்தை அடைதலென்பது ’
மோட்சத்தை அடைவது மட்டுமல்ல
மோகத்தைக் காண்பதும்தான்
சிற்றின்பமெனும் ஊடகமே
பேரின்பம் காணும்
பெரும்வழி….
Tag Archives: கவிதை
செல்லமே! சீலமாய் வாழ்ந்து காட்டுவாயா! அப்படி ! !

This gallery contains 1 photo.
செல்லமே! சீலமாய் வாழ்ந்து காட்டுவாயா! அப்படி ! ! பள்ளி சென்று படி! – உடன் பயில்வோருடன் பழகப் படி! – ஆசிரியருக்கு பணிந்து படி! எழுத்து, சொல் மற்றும் எண்ணும் நன்றாய்ப் படி! – பேசப்படி! எழுதப்படி ! – முதலில் ஒழுக்கம் படி! – முதல் மூன்று வகுப்புவரையில் உரக்கப்படி ! – ஆம் ! சரியாய் உச்சரிக்கப் படி ! ஐயம், திரிபு நீங்கப்படி! அன்றாடம் ஒழுங்காய்ப் படி! தமிழாம் தாய்மொழியைத் தரமாய்ப் … Continue reading
மனம்- குணம்-மரம்

This gallery contains 2 photos.
கொடை பிறவிக்குணம் ! ———————————————- உலகைச் சூழ்ந்த கடல்நீர் ஒரு துளிகூட குடிக்கமுடியாது ! உள்ளங்கைதான் மூழ்கும் ஊற்றுநீர் எனினும் நீர்ப்பெருக்கால் உலகுஊட்டும் ! பெரும்பணக்காரர்களால் ஆகாதது ,- சிறு வள்ளல்களால் நிறைவேறும் . – திருமுருகு ஹைக்கூ பண்புடையாளர் தொடர்பு ——————————————– நட்பினால் கற்றதா இது?! மரஞ்செடி, கொடிகள் ,மலர்களிடம் ! மென்மையாய் வருடும் தென்றலே! – திருமுருகு ஈரமான மரத்தை ஈரமில்லா கொடூரர்களால் மட்டுமே வெட்ட முடியும்! மரத்திடம் இருக்கும் மனமும் … Continue reading
எண்ணிப் பார்க்கிறேன்…

This gallery contains 1 photo.
ஜூனியராய் இருந்த போது ராக்கிங் பண்ணுதல் தவறென்றெண்ணினேன் சீனியராய் மாறிய போது ராக்கிங் பண்ணுதல் ஜாலி என்றெண்ணினேன் மருமகளாய் இருந்த போது தொட்டதுக்கெல்லாம் நொட்டை சொல்லும் மாமியாரை – இவளெல்லாம் என்ன மாமியார் என்றெண்ணினேன் மாமியாராய் மாறிய போது இஷ்டத்துக்கு செய்ய நினைக்கிறாளே – இவளெல்லாம் என்ன மருமகள் என்றெண்ணினேன் பதின்ம வயதினனாய் இருந்த போது காசு தர கஞ்சத் தனம் காட்டும் இவரெல்லாம் அப்பாவா என்றெண்ணினேன் அப்பாவாய் மாறிய போது வடவர்த்தனை தெரியாமால் காசைக் கரியாக்குகிறானே … Continue reading
ஊக்கமே ஆக்கம்

This gallery contains 2 photos.
உதிர்ந்த இளைச்சருகுகளுக்காக வருந்தாது துளிர்விடும் மரங்கள் !! தன் எடையிலும் அதிகம் தள்ள, இழுக்க,தாங்கி நடக்கின்ற எறும்புகள் !! வேரில்லாவிடினும் விழுதுகளால் வென்றுநிற்கும் ஆலமரங்கள் !! இரண்டுபட்டாலும் இறக்காமல் இரண்டாய் வளரும் மண்புழுக்கள் !! விளைந்தாலும் பயிர் அழிந்தாலும் வேளாண்செய்யும் விவசாயிகள் !! கற்பிக்கும் பாடம் புரிகிறதா !! ஊக்கமது கைவிடேல் !! அதுதான் உண்மையான ஆக்கம்!!! ( தயவுகூர்ந்து யாராகிலும் ஊக்க மது கைவிடேல் என்று பிரித்து படித்து தவறாக பொருள்கொள்ளாதீர்கள்! உலகில் சிறக்க ஊக்கம் … Continue reading
ஒருமையின் பொருண்மை

This gallery contains 2 photos.
ஆக்கம் – திருமுருகன் ஒருமையின் பொருண்மை நிலம் ,நீர் ,தீ , காற்று , வான் தனியே சிந்தித்தால் ஒருமைதான் ! ஆய்ந்து ஆய்ந்து தனித்தனியே ஒவ்வொன்றையும் பன்மைசெய்கின்றான் தனது சிற்றறிவால் இதயம்குறுகிய மனிதன் ! அன்பு, அருள், தூய்மை இவையும் தனித்தனியே பார்க்கின்,ஒருமையே ! இவற்றின் விசாலம் பெரிதும்பெரிது! மனிதன் உணரக்கூடும் ! -எவரால் அளவிடக்கூடும்! அறிவுகள்,அன்புகள், தூய்மைகள் என்று … Continue reading
வறண்ட தமிழகம் – கவிதை

This gallery contains 3 photos.
நண்பர் முருகன் ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய கவிதை. இதோ உங்கள் பார்வைக்காக. வறண்ட தமிழகம்: காவிரி வடிகாலாகிறது கல்லணை வரலாறாகிறது நன்செய் நிலங்கள் மானாவாரிகளாகின்றன! விவசாயிகளைத் “தற்கொள்ளிகள் “ ஆக்கியதுதானோ? அறுபத்திரெண்டாண்டு கால இந்தியக் குடியரசின் சாதனை ! பாலை: முல்லையும் குறிஞ்சியும் உறைமை திரிந்தால் பாலை!!! நடுவண் அரசும் மாநில அரசும் முறைமை திரிந்தால் காவிரி டெல்டாவும் பாலைதான்! காவிரி தண்ணீர் விடயத்தில் குடியரசு முடியரசிடம் தோற்றே விட்டது! பெருந்தன்மையா? கையாலாகாத்தனமா? காவிரி நீரை இலவசமாகப் … Continue reading
பிள்ளையார் பிடிக்க முயன்று!

This gallery contains 1 photo.
எனது அத்தான் திரு. முருகன், ராமநாத புரத்திலிருந்து, எனது வேண்டுகோளுக்கு இணங்க எழுதித் தந்த கவிதை!. அத்தானுக்கு சமயங்களைப் பற்றிய அறிவும், இறைப் பாடல்களும் அத்துப் பிடி. ஏனைய நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர். மாமா தமிழ் பண்டிட் என்பதாலோ என்னவோ, அத்தானுக்கு தமிழ் மீதான ஆர்வமும், இறை பக்தியும் அதிகம். பனிச் சுமைக் காரணமாக அவரால் அதிகம் எழுத இயலவில்லை என்ற போதிலும், எனது நச்சரித்தலும், மேலும் அவருக்கும் உள்ள ஆர்வத்தினால் அவர் எனக்கு 08 … Continue reading
ஏக்கம்- வலி-களங்கம் : ஹைக்கூ கவிதைகள்

This gallery contains 4 photos.
தீக்குச்சிகள்: பெட்டிக்குள் உள்ளவரை உனக்கு சாவில்லை ! வெளிவந்து பற்றிக் கொண்டால் பிணமாகிறாய்…. சில நேரங்களில் பிணமாக்குகிறாய் ! ஏக்கம்: அன்னாந்து விமானம் பார்த்தது வெறும் வேடிக்கையல்ல… ஏழைகளின் ஆகாய அளவு எக்கமும்தான்….. வலி: மறந்து விடு எனை நீ… சொன்ன தருணத்திலேயே இறந்து விட்டேன் … உணர்வற்ற உயிராய் இன்று நான்…. கவிஞன் : கல்லாய் இருந்தவனை சிலையாய் செதுக்கினாய்…. காளையாய் வலம் வந்தவனை கலைஞன் ஆக்கினாய் …. திசை தெரியாதிருந்தபோது வழி காட்டினாய் … … Continue reading
வலி – வலிமை – காதல்

This gallery contains 4 photos.
வலி: கடந்து போன காலமென்றாலும் … கடிந்து சொன்ன வார்த்தைகள் -நெஞ்சில் படிந்து கிடக்கின்றன எதையும் மறக்க முடியாத வலியோடு…. வலிமை: உன் கோபத்தைக் காட்டிலும் உன் மௌனமே என்னைக் கட்டிப்போடுகிறது! உன் பேச்சைக் காட்டிலும் உன் பார்வையே என்னைக் கட்டிப்போடுகிறது! காதல்: தேகம் பார்த்து மலர்கின்ற காதல் மோகம் கொள்வதால் மோசம் போகிறது! மனம் பார்த்து வந்த காதல் மணம் கொள்கிறது… திருமணமும் கொள்கிறது! காமம் -காதல்: உடல் கவர்ச்சி காமம்… உள்ளக் கவர்ச்சி காதல்… … Continue reading