வழக்கு எண் 18 /9 – விமர்சனம்

This gallery contains 1 photo.

மூன்று விடயங்களுக்காக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு நமது பாராட்டுக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட தைரியத்திற்காக மனம் திறந்த பாராட்டுகள். சில நடிகர்களாவது, கதைக்கு மெருகூட்ட, அனுபவம் வாய்ந்த  நடிகர்களை, நடிகைகளை, இயக்குனர்கள் கையாள்வது யாவரும் அறிந்த விடயம். ஆனால் எல்லா கேரக்டரும் புதுமையானவர்களைக் கொண்டு கையாண்டமைக்கு இயக்குனருக்கு  ஒரு பூங்கொத்து பார்சல்…   விளிம்பு நிலை (ஏழை ஹீரோ, ஹீரோயின்), நடுத்தர வர்க்கம் ( மற்றொரு ஹீரோயின்), உயர்தர வர்க்கம் (மற்றொரு ஹீரோ), முத்தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையை ஓரிடத்தில் கொண்டு வந்து குவியச் செய்தமைக்கு ஒரு சொட்டு. சதையையும், தொழில் நுட்பத்தையும், பெரிய பட்ஜெட்டையும் நம்பாது, தன் கதையையும் திறமையையும் நம்பி படம் எடுத்தமைக்காக மனமார்ந்த பாராட்டுகள்.   கதைக்கு வருவோம். “பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” என்பார்களே அதுதான் கதையின் … Continue reading

கமலஹாசனின் பகுத்தறிவும் நாத்திகமும்

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்து மத மூட நம்பிக்கைகளை மட்டும் சாடினாலே போதும். நீங்கள் தான் பகுத்தறிவுவாதி. பார்ப்பன எதிர்ப்பே மிகச் சிறந்த பகுத்தறிவுவாத அடையாளம். பொது பிரிவில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ஜாதிய வெறியோடு இருந்தால் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த பகுத்தறிவு. மற்ற மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை பற்றிக் கூறும் தைரியமில்லாமல், இந்து மதத் துவேஷம் செய்பவர்களில் சகல கலா வல்லவனும் ஒருவர். சகல கலா வல்லவனின் பகுத்தறிவைப் பேசும் முன், இன்றைய தமிழக … Continue reading