தொழில் நுட்பத்துடன் பயணிக்கும் இந்து மதம்

இந்து மதம் உருவ வழிபாட்டையும் பல தெய்வ வழிபாட்டையும் கொண்டிருப்பது அதன் மிகப் பெரிய பலம். மற்ற மதங்களைப் பற்றி அதிகம் தெரியாதாகையால் ஒப்பிட்டு எதையும் எழுதப் போவதில்லை. தமது இஷ்ட தெய்வத்திற்குப் பல உருவங்களைக் கொடுத்தும், ஒரே தெய்வத்திற்குப் பல பெயர்களைக் கொடுத்தும் இந்து மதம் தன்னை விஸ்தரித்துக் கொண்டே செல்கிறது. அழிவில்லாமல் விஸ்தரித்துக் கொண்டே செல்லும். அது எவ்வாறு என்பதை எனது சிறிய புரிதலிலிருந்து வெளிப்படுத்துகிறேன்.

பல புராண கதைகளாக, நடந்த விஷயங்களாக ஒவ்வொரு பகுதி மக்களும், ஒவ்வொரு சாதி மக்களும் தமது இஷ்ட தெய்வத்தை வழிபட சொல்கிற காரணங்கள், கதைகளின் மூலமாக அது மேல் எழுந்து கொண்டே செல்கிறது. உதாரணமாக சிவன் தன்னை ஈஸ்வரனாக , சுடலை மாடனாக, இடுகாட்டுப் பிரியனாக, நடராஜராக, அர்த்தநாரிஸ்வரராக, ஹரனாக ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு உருவத்திலும் ஒவ்வொரு போஸிலும் (தமிழ் வார்த்தையென்ன) காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கதை.

இந்து மதத்தில் பிள்ளையாரின் உருவம் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களில் மக்கள் நம்பும் சக்தி வாய்ந்தவராக ஆனால் அதே வேளையில் அவர் எந்த பெயரிலும் இருப்பார் என்பதைப் பார்த்து பலமுறை ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது. சுந்தர விநாயகர், கண்திருஷ்டி கணபதி, குளத்தடி பிள்ளையார், விக்ன விநாயகர், வெற்றி விநாயகர் என எந்தப் பெயரிலும் பெயர்க்காரணத்தோடு வலம் வரும் கடவுள் பிள்ளையாராகத் தான் இருக்க முடியும்.

இந்து மதத்தில் மக்கள் தொகையைக் காட்டிலும் கடவுள்களின் மக்கள்தொகை அதிகம். அத்தனை கடவுள்களையும் நேசிக்கும் தன்மையை கால மாற்றத்தில் மக்கள் புரிந்து கொண்டதும், அதன் வளர்ச்சி மேன்மேலும் பெருகுமேயன்றி இந்து மதம் அழியவே வாய்ப்பில்லை.

உருவ வழிபாட்டைத் தன்னகத்தே வைத்துள்ள இந்து மதம் அதை மக்கள் மனதில் நிலைக்கச் செய்ய தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கமுடிகிறது. அதன் மூலமாக சிறுவர்களைக் கவரச் செய்யும் நிகழ்வுகள் இயல்பாகவே இந்து மதத்தில் நடக்கிறது. சிறுவர்களைக் கவர பாலகனாக ஐயப்பன் கதைகள், கிருஷணர் கதைகள், முருகன் கதைகள், பிள்ளையார் கதைகளில் ஆரம்பித்து குடும்பப் பெண்களுக்கான துர்க்கை, காளி, லக்ஷ்மி கதைகள் என பல கடவுள்களைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்கள் காட்சிகளாக மக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. காட்சிகள் மக்கள் மனதில் எந்த விஷயத்தையும் எளிதாகப் பதிவு செய்யும். அவ்வகையில் உருவ வழிபாட்டை தனது வழிபாட்டில் ஒரு முறையாகக் கொண்டுள்ள இந்துமதம் தனது மக்களிடம் எளிதாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரேயொரு பெயரில் கடவுள் பற்றிய கதைகள் சொல்லுதல் மற்ற மதங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஆண்டுகள் கணக்கில் சொல்லப்பட ஆயிரம் கதைகளை இம்மதம் வைத்துள்ளது.

நான் சிறுவனாக இருந்தபோது கடவுள், நார்மல் மனிதராக நடித்துக் கொண்டிருப்பார். தனது அடியாருக்கு காட்சியளிக்க (வேறு போஸுக்கு மாற) புகைமூட்டம் வரும். புகை தெளியும்போது சிவன் வேறொரு சொருபத்தைக் காண்பிப்பார். ஒவ்வொரு கடவுளின் பெயரிலும் தனித் தனியாக படங்கள் வந்துள்ளன. இப்போது பெரியவர்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில் கிராபிக்சுடன் வலம் வரும் இந்து கடவுள்கள், சிறுவர்கள் பார்க்கும் சுட்டி, போகோவில் அனிமேஷனுடன் அதிசயங்களை நிகழ்த்துகிறார்.

பல கடவுள், பல வழிபாட்டு முறைகள், பல சடங்கு முறைகள், பல வகைகளில் உருவங்களைக் கொடுக்க அனுமதித்தல் என இந்து மதம் தன்னை எளிதாக இயல்பாக மக்களுடைய வாழ்வோடு ஒன்றிப் போய் விடுகிறது. ஆகவே தொழில் நுட்பம் வளர வளர இன்னும் பல அதிசயங்களுடன் மக்கள் நம்பும் அதிசய சக்தியாக அத்தனை கடவுள்களும் வலம் வருவார்கள். இது இந்து மதத்தை மேலும் மேலும் வளர்க்க வழி செய்யும்.

இன்று சுட்டி டிவியில் பிள்ளையார் எப்படி ஆனை முகத்தான் ஆனான் என்பதில் ஆரம்பித்து, சுண்டு எலியுடன் அவர் வலம் வருதல் என அனைத்தையும் அனிமேஷனில் காண்பிக்கிறார்கள்.

மறுபிறப்பும் கர்மாவும் – ஓர் பார்வை

இந்து புராணக் கதைகளை படித்திருப்போம். ஆனால் இப்போது சொல்லப் போகும் கதை வித்தியாசமானது. இந்து மதம் கர்மா பற்றியும் cycle of life பற்றியும் பேசக்கூடியது.

உலகில் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் இன்னொன்றை கொன்று தின்று வாழும் மிருகங்கள்தான். இயற்கை மற்ற உயிரினங்கள் உண்டு வாழ எல்லாவற்றையும் கொடுக்கும். ஒரு நாள் இயற்கை தன்னிடமிருந்து பெற்று வாழ்ந்த அத்தனை உயிர்களையும் அழிக்கவும் செய்யும். மீண்டும் இதே cycle of life தொடரும் என்பதே இந்து மதம் சொல்ல வரும் விஷயம். ஆகையால் தான் மறுபிறப்பு பற்றியும் கர்மா பற்றியும் இந்துமதம் பேசுகிறது. படைக்கப்பட்ட உயிரனங்கள் அனைத்துக்குமே பசி இருக்கவே செய்யும். இன்னொரு உயிரிடத்திருந்து தன்னைக் காக்க வேண்டிய பயமும் இருக்கும்.

இந்து மதத்தில் மிருகங்கள், பறவைகள் ஆகியவை பல கடவுள்களின் வாகனமாக இருப்பது என்பது நாமறிந்த ஒன்றே. இப்போது கதைக்குச் செல்வோம்.

சிவன் கைலாயத்தில் இருக்கிறார். பனியால் மூடப்பட்டு புல் கூட முளைக்காத இடமாக காட்சியளிக்கிறது. சிவன் தமது குடும்ப சகிதம் காட்சி அளிக்கிறார். அங்கு அனைவரின் முகத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் தவழ்கிறது. ஒவ்வொருவரும் தமது வாகனத்தோடு சந்தோஷமாகக் காட்சி அளிக்கிறார்கள்.

“பிள்ளையாரின் வாகனம் என்ன?”

“எலி”

நல்லது.

“சிவனின் வாகனம் என்ன?”

“பாம்பு, நந்தி(காளை) ஆகியவை”

அப்படியா ரொம்ப நல்லது.

“முருகனின் வாகனம் என்ன?”

“மயில்”

“சக்தியின் வாகனமென்ன?”

” புலி”

இப்ப சில கேள்விகள். பாம்பு எதைத் தின்னும்? எலியைத் தின்னும். சிவனின் வாகனம் பிள்ளையாரின் வாகனமான எலியைத் தின்னும்.

மயில் எதை உண்ணும்? பாம்பை உண்ணும். அதாவது சிவனின் வாகனத்தை உண்ணும். சிவனின் இன்னொரு வாகனமான காளையை சக்தியின் வாகனமான புலி தின்னும். சரியா?

சிவனின் கைலாயத்தில் காளை தின்னுவதற்கு மட்டும் புல் கூட இல்லை அல்லவா? ஆனால் இவையாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு எந்தப் பயமும் முகத்தில் காட்டாமல் குடும்ப போட்டோவில் போஸ் (காட்சி) கொடுப்பதன் ரகசியமென்ன?இது மிகப்பெரிய குடும்ப நாடகமாகத் தோன்றுகிறதல்லவா? smile emoticon

இந்தக் கதை சொல்ல வரும் விஷயம் இதுதான். பசியற்ற உலகில் பயமிருக்காது. பசியற்ற நிலையில் மனம் சாந்தி கொள்ளும். In the place of Greater Kailash, Siva is outgrown the hunger என்பதே.

அப்படிப்பட்ட ஒரு நிலை நடைமுறையில் வருமா? வராது. ஆனால் அப்படிப்பட்ட பசி போக்கிய (பசி நீங்கிய) உலகை அமைத்தலே கதை சொல்ல வரும் விஷயமாக நான் புரிந்து கொள்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்கள் இன்னொருவரை வதைக்காதே! வன்முறையற்ற வாழ்க்கையே சிறந்தது என்று அன்றாடம் பாடம் எடுக்கிறோம் அல்லவா? மேற்கூறிய கதையைக் குண்டக்க மண்டக்க எடுத்து என்னிடம் கேள்வி எழுப்ப நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான். அதற்குப் பதில் சொல்ல முடியுமானால் , உங்கள் கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கும்.

“வன்முறையற்ற ” வாழ்க்கை வாழ்தலே சிறந்தது என்பதே அன்றாடம் நாம் கற்றுத்தரும் விஷயம். அவ்வாறானால் உங்களுடைய பசியை எவ்வாறு போக்குவீர்கள்? ” The idea of eating itself is violence” You want to stop violence. Then Stop Eating. எதையாவது கொன்று தின்பதே வாழ்க்கையின் அம்சம். ஆகையால் கதையைத் தவறாகப் புரிந்துகொண்டால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

இயற்கையிலிருந்து நாம் தினமும் பெற்றுக் கொள்கிறோம். ஒருநாள் இயற்கையும் நீ எனக்கு என்ன தரப்போகிறாய் என்று கேட்காமலே உங்களின் உயிரைப் பறிக்கிறது. மீண்டும் ஒரு உலகை இறைவன் படைக்கிறார். இதைத் தான் இந்து மதம் கர்மா என்கிறது. cycle of life என்கிறது.

பி.கு: தேவ் தத் எழுதிய நூல்களைப் படியுங்கள். பேச்சுகளைப் பாருங்கள். பல விஷயங்கள் கிடைக்கும்.