ஐநாவில் இந்தியை கொண்டு வர நடக்கும் முயற்சிகள் சரியா? தவறா?

மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது சரியா? தவறா?

ஐநாவில் இந்தியை கொண்டு வர நடக்கும் முயற்சிகள் சரியா? தவறா?

மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது சரியா? தவறா? என்னுடைய கருத்துகளையும் ஐயங்களையும் முதலில் சொல்லி விடுகிறேன். மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கும் போதுள்ள சூழலை அடிப்படையாகக் கொண்டு சொல்கிற கருத்தாக எடுத்துக் கொள்ளவும். மொழி வாரியாகப் பிரித்த போது பெரும்பாலான மக்கள் தம் தாய்மொழிக் கல்வியைப் படிக்கும் பாக்கியம் கிட்டியது. அவ்வகையில் சரி. இன்னொரு விஷயம், எல்லையின் அடிப்படையில் மக்கள் தொகையைச் சரிசெய்யும் நோக்கில் மாநிலங்களைப் பிரித்திருந்தால் ஆங்காங்கே சாதிக் கட்சிகளைப் போல மொழியை அடிப்படையாகக் கொண்ட சிறுபான்மை கட்சிகள் தோன்றி இருக்கக் கூடும். அது தற்போதைய நிலையை விட மோசமான நிலைக்கு இந்தியாவைக் கொண்டு சென்று இருக்கலாம். அவ்வகையில் மொழி வாரி மாநிலங்கள் பிரிவை வரவேற்கிறேன்.

இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தவறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசியம் பேசுபவர்களும் தமக்கு இலகுவான விஷயத்தின் அடிப்படையில் மட்டும் கேள்வி கேட்பதுதான் சரியல்ல என்று படுகிறது. நேர்மையாக விவாதிப்போம்.

மத்திய அரசு இங்குள்ள இதர மாநில மொழிகளை அலுவல் மொழியாக ஆக்காமல் ஐ.நாவில் இந்தியை அலுவல் மொழிகளில் ஒன்றாக ஆக்க முயல்வது தவறு என்பது கருணாநிதி மற்றும் தமிழ் தேசியம் பேசும் , திராவிடம் பேசுபவர்களின் கருத்தாக உள்ளது. இக்கேள்வி நேர்மையென ஒருவர் கருதும் பட்சத்தில் என்னிடம் அடிப்படையாக சில கேள்விகள் உள்ளன.

இந்தி மீதோ, இதர மொழிகள் மீதோ தங்களுக்கு எந்தக் காழ்ப்பும் இல்லையென வாயில் சொல்லிக் கொள்கிற தமிழ் தேசியம், திராவிடம் பேசுபவர்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏன் மூன்றாம் மொழியாக மாணவர்கள் விரும்பும் மொழியை அரசுப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பைக் கெடுத்தார்கள். உதாரணமாக தெலுகு பேசும் நாயக்கர்களும், செட்டியார்களும், நாயுடுகளும் இதர தெலுகை அடிப்படையாகக் கொண்ட சென்னை, வேலூர் சார்ந்த மாகாண மக்களும் கல்வி கற்க மூன்றாம் பாடமாக (முதல் பாடமாக வேண்டாம்) தமிழக அரசே அரசுப் பள்ளிகளில் ஏன் கொண்டுவரவில்லை? மலையாளம், கன்னடம் பேசும் மக்களுக்காக அரசுப் பள்ளியில் இல்லாமல் இரு மொழிப் பாடக்கொள்கையோடு திராவிட அரசுகள் நிறுத்திக் கொண்டது ஏன்?

மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு எனில் ஆங்கில வழிக் கல்வி முறையைத் தமிழகத்திற்கு ஏன் அறிமுகப்படுத்தினார்கள்? அங்கு ஹிந்தி மூன்றாம் பாடமாகக் கற்பிக்கப்படும் போது ஏன் மௌனம் சாதித்தார்கள்? சாதிக்கிறார்கள்? மற்ற மொழியின் மீது மாற்றாந்தாயாக மத்திய அரசுகள் நடந்து கொள்கிறது என சொல்பவர்கள் தமிழகத்திலும் கணிசமான மக்கள் மாற்று மொழியைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக இங்குள்ளார்கள் என்பதை மறந்தது எப்படி?

ஒரு வகுப்பில் பதினைந்து மாணவர்களுக்கு மேல் படிக்க சேரும் பட்சத்தில் மூன்றாம் பாடமாக தெலுங்கையோ, இந்தியையோ, கன்னடத்தையோ, மலையாளத்தையோ வைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? உண்மையில் மற்ற மொழிகள் மீது காழ்ப்பு கிடையாது, அது திணிக்கப்படுவதாலேயே எதிர்க்கப்படுகிறது என சொல்லிக் கொண்டு இங்குள்ள மற்ற மொழி பேசும் சிறுபான்மையினருக்குத் தமது கல்வியை அரசே ஏற்படுத்திக் கொடுக்காமல் வேண்டுமென்றால் அவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் போய் படிக்கட்டும் என்று சொல்வது எவ்வகையில் சேர்த்தி? மாநிலங்களில் பன்மைத் தன்மை பேணிக்காக்கப் பட வேண்டிய அவசியம் கிடையாதா? இந்தியை சாமானியர்கள் படிப்பதை வைத்து எதிர்காலத்தில் மத்திய அரசு இந்தியை எளிதாகத் திணித்து விடும் என்ற அடிப்படையில் தூக்கியது என நியாயம் கற்பிக்க இயலும். அது சரியெனக் கொண்டால், ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இந்திய மொழியை (சமஸ்கிருதம்) கட்டாயமாக்கலை எதிர்ப்பது மட்டும் எவ்வகையில் நியாயமாகும். அங்கு மட்டும் மாணவர் நலன் , மாணவர் விருப்பம் எங்கிருந்து வருகிறது? திராவிடக் கட்சிகள் தமிழர் நலன் கருதி முடிவெடுத்தால் சரியென்றும், அதையே இந்திய மொழி மீதுதான் முக்கியத்துவம் கொடுக்க முடியுமென மத்திய அரசு கொள்கை முடிவெடுப்பதை மட்டும் தவறு என எந்தத் தார்மீகத்தில் கேள்வி எழுப்ப முடிகிறது?

தமிழ்நாட்டில் பெரும்பான்மை மொழியாக தமிழ் இருக்கும்பட்சத்தில் அதை முதல் மொழியாகக் கொண்டு நடத்துவதுதான் சரி. அதைப் போலவே ஐ.நாவில் இந்தியாவில் இந்தியை அதிக மக்கள் பேசும், புரிந்து கொள்ளும் மொழி என சேர்க்க முயற்சிப்பது மட்டும் தவறா? இப்போதும் சொல்கிறேன். இந்தி படிக்காமல் ஆங்கிலம் படித்ததால் தமிழன் முன்னேறி இருக்கிறான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்திய அரசியல் நிலைப்பாட்டில் மத்திய அரசின் மீது நமக்கு இலகுவான விவாதத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொள்வதில் என்ன நியாயம் உள்ளது? அலுவல் மொழியாக தமிழ் இருந்தால் ஒவ்வொரு தமிழனும் மகிழ்வான் என்பது போலவே, மாநில அரசுகளே மற்ற மொழி பேசும் சிறுபான்மை மக்களும் அவர்தம் தாய்மொழியை அறிந்து கொள்ள மூன்றாம் பாடமாக அமைத்து ஆசிரியரைப் பணியில் அமர்த்துவதுதானே முறை. அதிக அளவில் மக்கள் பேசுகிற மொழி தான் முதல் பாடமாக இருக்க வேண்டும் என்பது சரியெனில் , ஐநாவில் இந்தியை எடுத்துச் செல்வது மட்டும் எவ்வாறு தவறு என சொல்ல முடியும். இந்தியாவின் பன்மைத் தன்மையைக் காட்டத் தான் இந்தியாவின் பணத்தாளில் 17 மொழிகளும் அச்சிடப்பட்டுள்ளது என சொன்னால் ஏற்றுக் கொள்ளப்போகிறோமா? என் வாயை நீங்கள் இவ்வாறு ஒரே வரியில் அடைத்து விட்டுச் செல்லலாம். “ ஐ.நாவில் இந்தி , இந்தியாவில் அதிக மக்கள் பேசுவதன் அடிப்படையில் கொண்டு செல்வதை ஆதரிப்பதற்கு இத்தனை நன்னூல் கேள்விகள் தேவையற்றது” என சொல்லி விட்டுக் கடந்து செல்லலாம். ஆனால் என்னுடைய கேள்விகள் உங்களுக்கும் நிச்சயமாக சில நேர்மையான கேள்விகளை எழுப்பவே செய்யும். அவரவர்க்கு அவரவர் அரசியலில் பிழைத்துக்கிடக்க மொழியும் கிடைத்துள்ளது.

“ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. அரசுகள் அவர்கள் விரும்பும்
————————————————————————————————————
கொள்கை முடிவுகளைமட்டுமே எடுப்பார்கள்.”
—————————————————————————–

மத்திய அரசு சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும் !!!

1. மத்திய அரசு சமசுகிருத வாரமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள CBSE பள்ளிகள் கொண்டாடுவது சரியா? தவறா? என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்கான பதில் கட்டுரை அல்ல இது.

2. தமிழைக் காட்டிலும் சமசுகிருதம் உயர்ந்த மொழி என்று வாதிடுவதற்காக எழுதப்படவில்லை. தமிழை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்களோ அதே அளவிற்கு உளப்பூர்வமாகக் காதலிக்கிறேன். ஆதலால் தமிழைக் காட்டிலும் சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்களாகப் பொருள் கொண்டு என்னிடம் கேள்வி எழுப்புவதால் எந்தப்பயனும் இல்லை.

இப்போது சமசுகிருதத்திற்கு மத்திய அரசு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு சமயத்திற்குமான மூல நூல்கள் குறிப்பிட்ட மொழியில்தான் அதிகம் உள்ளன. அவ்வகையில் என்னுடைய இந்தியாவின் ஆதிகாலச் சமயமான இந்து சமயத்தின்(அதுதான் இந்தியாவின் அடிப்படை கலாச்சார, பண்பாட்டின் அடையாளங்கள்) மூல வேதங்களான ரிக், யசூர்,சாம, அதர்வணம் போன்ற வேத நூல்களாகட்டும், இரு பெரும் இதிகாசங்களான மகாபாரதம், ராமாயாணம், பகவத் கீதையாகட்டும். அவையாவும் சமசுகிருத மொழியில் தான் முதன்முதலாக எழுதப்பட்டுள்ளன.

இந்தியா ஆகச்சிறந்த தத்துவார்த்த நாடாக விளங்குவதற்கு இந்நூல்கள் கற்பிக்கும் வாழ்வியல் பாடங்கள் முக்கியம். சமசுகிருதத்தை தமிழ் மீது கொண்ட காதலால் வெறுப்பவர்களை மன்னித்து விடலாம். மத நம்பிக்கைகளில் ஈடுபாடில்லாதவர்களுக்கு இது முக்கிய விடயமாகப் படப்போவதில்லை. ஆனால் இந்து என்கிற உணர்வோடு இருக்கிறவர்கள் எந்த அடிப்படையையும் புரிந்து கொள்ளாமல் இந்திய அரசு, சமசுகிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்ப்பதைத் தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நம்மவர்களுக்கு கட்சித் தலைமைகள் சொல்வதே வேத வாக்கு. அதன் அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு விடயத்தையும் அணுகுகிறார்கள். அதுதான் அடிப்படைப் பிரச்சினை.

அவர்களின் முக்கியக் குற்றச்சாட்டே பேச்சு வழக்கற்ற தற்போதைய காலக்கட்டத்தில் எழுத்து வழக்கிலும் அல்லாத மொழிக்கு தமிழைக் காட்டிலும் (பிற பிராந்திய மொழியைக் காட்டிலும்) பன்மடங்கு அதிக நிதியை ஒதுக்குவதைத் தான் பொறுக்க முடியாமல் எதிர்க்கிறார்கள். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டு எதிர்க்கிறார்களோ அதே காரணத்திற்காகத் தான் நான் ஆதரிக்கிறேன். ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்படலாம்?

கோடிக்கணக்கிலான மக்கள் பெருவாரியாக பேசுகிற , எழுதுகிற பிராந்திய மொழிக்குக் கல்விக்கு ஒதுக்குகிற நிதியும், மாநிலங்கள் கொடுக்கிற முக்கியத்துவம் மற்றும் பிராந்திய மொழியைப் பயன்படுத்துபவர்களைக் கொண்டே, அம்மொழிகளை பேணிக்காக்க இயலும். குறிப்பாக மாநில அரசுகள் தாய்மொழி வழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அரசு வேலை வாய்ப்பில் தாய்மொழிக் கல்வி கற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அரசு அலுவல் மொழி மற்றும் மொழி ஆய்வுத்துறைகளுக்கான மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் மொழி வளர்ச்சிக்கான வழிமுறையைக் கையாள்வதன் மூலம் மொழியை மேம்படுத்தச் செய்ய இயலும்.

சமசுகிருதம் உத்திரகாண்டில் கூட இரண்டாம் மொழியே ஒழிய பிரதான மொழியாக இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். லத்தீன் மொழி பயன்பாட்டாளர்கள் இன்று யார் உள்ளார்கள்? ஆனால் அதைப் பொக்கிஷமாகப் பாதுக்காக்க அவர்கள் தொடர் முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வோம். மேலும் சமசுகிருத்ததிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் எதிர்க்கக் குறிப்பிடும் முக்கியமான காரணமாகிய எவனும் பேசாத, எழுதாத மொழிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து இந்து சமயத்தின் நூல்களையும் , அதில் சொல்லப்பட்டுள்ள தத்துவார்த்த விடயங்களையும், வானியல், அறிவியல், கணிதம் சம்பந்தப்பட்ட விபரங்களைப் பேணிப் பாதுகாக்கா விடில் நம்முடைய அடிப்படையை இழந்து விடுவோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது எவ்வாறு? மத்திய அரசு அதைச் செய்யாவிட்டால் யார்தான் அதைச் செய்வார்கள்?. சிந்தியுங்கள் நண்பர்களே. இந்து சமயத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் இதை ஆதரிக்க வேண்டும்.

 

 

ஆசிரியர்- சிறுகதை

பிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அவரின் பார்வைக்கும், பேச்சுக்கும் கட்டுப்பாடாத மாணவர்கள் உண்டெனில் அது ஆச்சர்யம்தான்!. இறை வழிபாட்டில் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் அவர் பேசுகிற போது, இவர் தமிழாசிரியர் தானா என்ற சந்தேகம் ஒருவர் மிஞ்சாமல் ஏற்படும் என்றால் மிகையாகாது. பிரம்மநாயகம் பணியாற்றிய ஊர் தளபதி சமுத்திரம். பெயரில் சமுத்திரம் இருந்ததே … Continue reading