மோடி விவசாயத்திற்கு எதிரானவரா?

மோடி விவசாயத்திற்கு எதிரானவரா?
——————————————————–
வேளாண் உற்பத்தியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மத்திய அரசு இயங்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு “ மோடி அரசுக்கு ஓர் எச்சரிக்கை மணி ” என்று முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தேன். [மோடி அரசுக்கு ஓர் எச்சரிக்கை மணி கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ]

அதைப்படித்த ஒரு நண்பர் மோடி விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிரானவர், அவர் ஒரு கார்ப்பரேட் கைக்கூலி என்று குறைப்பட்டுக் கொண்டார். பாஜகவே விவசாயிகளுக்கு எதிரான கட்சி எனக் குற்றம் சுமத்தினார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தமிழகத்தின் அறிவு ஜீவிகளில் பாஜக வெறுப்பை மட்டும் பிரதானமாகக் கொண்டிருப்பவர்களின் மிக முக்கியமான பிரச்சாரமும் இதுதானே !

பாஜகவையும் மோடியையும் இந்த அறிவு ஜீவிகள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்ற பிரம்மையைக் கொடுப்பதற்குப் பின்னால் மிகப் பெரிய அரசியலும், சாமானிய மக்களின் மனதில் ஏற்படும் உளவியல் மாற்றங்களும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கொள்ளலாகாது.

உலக மயமாதலுக்குள் இந்தியா காலடி எடுத்த ஆண்டிலிருந்து [1991], அடுத்த 20 ஆண்டுகளில் விவசாயத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதைப் புள்ளி விவரங்களுடன் அசோக் குலாதி விவரிக்கிறார். புள்ளி விவரங்களைப் பார்க்குமுன் அசோக் குலாதி யார் என்பதை அறிந்து கொள்வோம். மன்மோகனின் ஆட்சியில் விவசாயம் சார்ந்த ஆய்வுகளையும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு உரிய பரிந்துரைகளையும் செய்தவர். மேலும் பல பொறுப்புகளில் உள்ளார். He is an Agriculture expert as well. அசோக் குலாதி பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் ஒன்றே ஒன்று தான். அவரின் அரசுப் புள்ளி விவரங்களைக் கூட சுருக்கி மோடியின் கையாள் என்று சொல்லிவிடக் கூடாதல்லவா?

உலக மயமாதலில் காலடி எடுத்து வைத்த பிறகு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ள புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். 1991 to 2001 வரை மாநிலங்களில் இருந்த விவசாய வளர்ச்சியையும்/ வீழ்ச்சியையும், 2001 to 2011 வரையிலான காலக்கட்டத்தில் அனைத்து மாநிலங்களின் விவசாய வளர்ச்சியையும்/ வீழ்ச்சியையும் ஒப்பிட்டு பேசுகிறார்.

2001 to 2011 காலக்கட்டத்தில் பாஜக ஆண்ட குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் விவசாயத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அசாத்தியமானது. இந்த மாநிலங்களோடு ராஜஸ்தான் (காங்கிரஸ் + பாஜக) மாறி மாறி ஆட்சி செய்த மாநிலமும் மிகப் பெரிய பங்களிப்பை விவசாய வளர்ச்சியில் அளித்துள்ளது.

[ 1991 to 2001 காலக் கட்டத்தில் மாநிலங்கள் Agricultural % of Growth/Annum அடைப்புக் குறிக்குள்ளும் , 2001 to 2011 காலக் கட்டத்தில் Agricultural % of Growth/Annum வெளியேயும் குறிப்பிடப்பட்டுள்ளது ]

குஜராத் 9.8 % [ 1.9 %], ராஜஸ்தான் 9.6 % [ 3.9% ], சத்திஸ்கர் 8.9 % [ -4.0 % ], மத்தியப் பிரதேசம் 7.4 % [1.9 % ] வளர்ச்சியையும் அடைந்துள்ளது. தேசிய சராசரி 3.3 % ஆகும். தமிழ்நாடு 2.9 % [ 3.9 %] ஆக வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. கழகங்கள் ஆட்சி புரியும் தமிழகம்தான் மிகப் பெரிய வீழ்ச்சியை விவசாயத்தில் சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. தண்ணீர் வசதியிலும், மண் வளத்த்திலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் குஜராத் குறைவு என்பதும், அவ்வாறிருந்தும் மோடியின் ஆட்சியில் விவசாயத்தில் குஜராத் செய்த சாதனைகள் மிகப் பெரியது என்கிறார்.

அசோக் குலாதி தமது உரையில் இரு விஷயங்களைக் குறிப்பிடுகிறார். மூன்று முறை தொடர்ச்சியாக பாஜக இந்த மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள மிக முக்கியமான காரணம், விவசாய வளர்ச்சி என்கிறார். அவர் தமது பேச்சில் விவசாயத்தில் முதலிடத்துக்குத் தமது மாநிலத்தைக் கொண்டு வந்த குஜராத் முதல்வராக இருந்தவர்தான், தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்கிறார். மேலும் மோடி தம்மிடம் குஜராத் விவசாய வளர்ச்சி குறித்துப் பேசும் போது “ PER DROP MORE CROP “ என்பதே தமது ஆட்சியின் ஸ்லோகன் என்று கூறியதாகப் பகிர்கிறார். மோடியின் அந்த ஸ்லோகனை இந்தியா முழுக்க உள்ள மாநிலங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார்.

குஜராத் அரசு மற்ற அரசுகளைப் போல குறைந்த கால அரசியல் நலன் கருதி செயல்படாமல் மிகப் பெரிய திட்டத்துடன் செயல்பட்டதே விவசாய வெற்றிக்குக் காரணம் என்கிறார். [ அரசியல் லாபம் கருதி தமிழகம் மின்சாரம் இலவசம், கடன் தள்ளுபடி என்று நாடகம் போடுகிறது ]. ஆனால் மோடி 24 * 7 தடங்கலில்லா மின் வசதியையும்[ இலவசம் கிடையாது], மானியங்களைக் குறைத்து அதே வேளையில் தண்ணீர்ப் பாசனத்தையும் உறுதி செய்தார். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திக் காட்டியதும் மோடி குஜராத்தில் செய்த சாதனை என்கிறார்.

மோடிக்குக் குஜராத்தைக் கையாண்டதைப் போல இந்தியா முழுமையையும் கையாள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. விவசாயம் சார்ந்த பல பாலிசி மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேலும் மாநில அரசுகளுக்கு அதிக பொறுப்பை வழங்க வேண்டும். MSP யை விவசாயிகளுக்கு நலன் பலக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும். இப்படி பல சிக்கல்கள் மோடிக்கு உள்ளது.

மோடி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானவர் என்கிற பிரம்மைக்கு மிக முக்கியக் காரணம், அவர் ஏதோ உற்பத்தி நிறுவனங்களுக்கும், சேவைத் துறைக்கும், தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுத்தது போல மட்டுமே முன்னிறுத்தப் பட்டுள்ளார். கடந்த காலத்தில் மோடி விவசாயத்தில் தமது ஆட்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியதிலிருந்து புரியவில்லையா?

மோடிக்கு எச்சரிக்கை என்பது அவருக்கு விவசாயம் சார்ந்த அக்கறையல்ல என்று பொருள் கொள்ளலாகாது. மேலும் மோடியை விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானவர் என சித்தரிப்பதை, அரசியல் பிழைப்பை நடத்துவதற்கு மட்டுமே உதவும் என்பதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளையும் நேசித்த தலைவனால் மட்டுமே அரை பாலைவன மாநிலத்தைக் கூட விவசாய முன்னோடி மாநிலமாக மாற்றிக் காட்டவும் செய்ய முடியும். மோடி அதைச் சாதித்துக் காட்டிய மாபெரும் தலைவர்.

ஆதாரம் : காணொளியில் 17.25 மணித் துளியிலிருந்து பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=mWz9sAP8C04

மோடி அரசுக்கு ஓர் எச்சரிக்கை மணி :
==============================

கடந்த மூன்று வருடங்களாக விவசாயம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. காலநிலைகள் தான் காரணமென்றாலும் , மத்திய அரசு மிகுந்த கவனத்தை விவசாயத்தின் மீது திருப்ப வேண்டியது கட்டாயம். கண்ணை மூடிக் கொண்டிருந்தால் மிகப் பெரிய இழப்புகளை அரசும் விவசாயிகளும் எதிர் கொள்ள வேண்டி வரும். 4% Growth /Annum என்பது குறைந்த பட்ச இலக்கு என இருந்தும், வெறும் 2% க்கும் குறைவான வளர்ச்சிதான் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும்? Trade Policy, How MSP has to be decided, How farmers to get Premium when there is storm or natural calamity etc.,. and how the farmers shall get money into their account?, How Insurance policy has to be transferred to States? How much Irrigation land has to be minimum Insured?

அசோக் குலாதி குஜராத், ம.பி, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆட்சியை மீண்டும் மீண்டும் பிடிக்க முக்கியக்காரணம் விவசாய உற்பத்தி 7% க்கும் அதிகமாக இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார்.

மத்திய அரசின் காட்டன் துறை இந்த வருடம் CRISIS ஏற்பட்டதை மிகத் திறமையாகக் கையாண்டது போல, MSP and Trade Policy க்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல விளக்கங்களை அசோக் குலாதி விவரிக்கிறார். மோடி அரசு அனைவருக்கும் பேங்க் அக்கௌன்ட் ஓப்பன் பண்ண சொன்னது, இதற்கு நிச்சயம் உதவும். அசோக் குலாதி மோடி அரசின் நிதி ஆயோக்கின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.

மத்திய அரசு விவசாயத்தைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரும். அதைக் காட்டிலும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு மோடி உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் திருப்பம் தரவல்ல திட்டம் – முத்ரா வங்கி

பிரதமரின் பெயரில் பல திட்டங்களை தற்போதைய மத்திய அரசு அறிவித்து வருகிறது. அவற்றில் குறுந்தொழில் நிறுவனங்களின் வணிகம் மிகச் சிறப்பாக நடந்தால்தான் இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இயலும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்படுகின்ற திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். இந்தத் திட்டம் உறுதியாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்பத்தைத் தரும் என பொருளாதார வல்லுனர்கள் பலரும் கருத்துரைத்துள்ளார்கள்.
முத்ரா வங்கி திட்டத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) (Small , Micro Enterprise or Unincorporate) நிறுவனங்களே 50% க்குப் பங்களிப்பு செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு 12 to 14% மும், விவசாயம் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தலா 18% மும் உள்ளது.

12 % to 14% இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 40% அளவிற்குக் கடனுதவி பெறுகின்றன. ஆனால் மற்ற நிறுவனங்களோ குறைந்த அளவிற்கே கடனுதவியை வங்கியின் மூலம் பெறுகின்றன. பெரும்பாலும் வட்டி மூலமே தமது வணிகத்தை மேற்கொள்ள நடவைக்கைகளை எடுத்து வருகின்றன.

முத்ரா வங்கி திட்டம் ஏன் கொண்டுவரப்படுகிறது?
==========================================

1. கடன் நிதியுதவியை வங்கியின் மூலம் குறுந்தொழில் செய்பவர்களுக்கு வழங்குதல். அவர்களை முறையாகப் பதிவு செய்ய வைத்தல்.

2. தொழில் வளர்ச்சி பெருகுவதன் மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கல்.

3. நிதி அமைச்சகத்தின் தகவலின் படி 5.77 கோடி(57.7 million) சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. Economic Access 2014 ன் கணக்கின் படி, குறுந் தொழில் செய்பவர்களின் Gross Fixed Asset11.5 இலட்சம் கோடி ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களை விட இவை மிகவும் திறம் வாய்ந்தவை. (Efficient one)

RBI யின் கணக்கின் படி, மைக்ரோ தொழில் செய்யும் நிறுவனங்கள், அவர்களின் Gross Fixed Asset ல் 55% (6.26 Laksh Crore) அதிக பங்கீட்டைத் தருவதாகவும், இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெறும் 36% தான் பங்கீடு தருகிறது எனவும் தெரிவிக்கிறது. இதுவரையிலும் வெறும் 4% அளவிற்கே வங்கிக் கடனாக மைக்ரோ தொழில் செய்பவர்கள் பெற்றுள்ளார்கள். அதாவது 11.5 Laksh Crore ல் வெறும் 46,000 கோடிதான் கடனாகப் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் 50 லட்சம் கோடியைக் கடனாக FDI , FII and வங்கிகள் மூலமாக 1991 லிருந்து 2011 வரைக்குள்ளான காலத்தில் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் கடந்த இருபது ஆண்டுகளில் (1991-2011) 29 மில்லியன் வேலை வாய்ப்புகளே பெருகியுள்ளது. அதாவது ஆண்டுக்குத் தோராயமாக ஒரு லட்சம் மக்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. Economic Access 2014 ன் கணக்கின்படி, சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் (பெரும்பாலும் பதிவு செய்யப்படாத இந்த நிறுவனங்கள்) மூலம் 128 மில்லியன் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் கட்டுமானப்பணியில் வேலை வாய்ப்பு பெற்றவர்களைக் கணக்கில்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது கார்ப்பரேட்டுகள் மட்டுமல்ல.. கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் என்பதைப் புரிந்துகொண்ட மத்திய அரசு செயல்படுத்த முன் வந்துள்ள திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும்.
கார்ப்பரேட் அல்லாத இந்த நிறுவனங்களின் பங்களிப்பு உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் அளப்பரியது. குறிப்பாக சேவைத் துறையில். கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, லாட்ஜ், உணவகங்கள், மளிகைக்கடைகள், ரியல் எஸ்டேட், சொந்தமாகத் தாமாகவே செய்துவரும் எலெக்ட்ரிசியன், ப்ளம்பர், மெக்கானிக், வக்கீல், ஆடிட்டர்கள் என சொந்தத் தொழில் செய்துவருபவர்களின் பங்களிப்பு 70 க்கும் அதிகமாக சேவைத் துறையில் உள்ளது.
நடைமுறை வாழ்க்கையில் சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களைப் பாருங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் காலையில் 100 ரூபாயைக் கடனாக வாங்கி மாலையில் 110ரூபாய் கொடுப்பவர்கள் உண்டு. இது உதாரணம் மட்டுமே. 10000 ரூபாய் கடன் வாங்குபவரை எடுத்துப்பார்த்தால் அவரின் வருட வட்டி விகிதம் குறைந்த பட்சம் 20 % to 30% க்கும் அதிகமாக இருக்கும். நம்மூரில் கந்து வட்டி முறையில் அரசிற்கும் பலனில்லாமல், சொந்தத் தொழில் செய்பவர்களும் முன்னேற முடியாமல் கறுப்புப் பணம் சம்பாதிப்பவர்களின் கைகளில் பணம் சென்று சேர்கிறது. கந்து வட்டி, சீட்டு உடன்படிக்கை, பத்திர ஒப்பந்தம் போட்டு கடன் கொடுத்தல் என பல வழிகளில் கடன் பெறுவோர் அதிகமிருப்பதை அன்றாடம் நாம் காண இயலும்.
இவர்களைக் கணக்கில்கொண்டே முத்ரா வங்கியின் மூலம் அவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 5.77 கோடி சிறு தொழில் செய்பவர்கள் பலன் பெறுவார்கள்.
வங்கயில் இதன் ஆரம்ப முதலீடாக 20,000 கோடியையும், கடன் உத்தரவாதத்திற்கு 3000 கோடியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறுபவர்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள்.

சிசு : முதன் முதலாக தொழில் செய்யும் சிறு தொழில் செய்பவர்களுக்குக் கடனாக ரூபாய் 50,000 வழங்கப்படும்.

கிஷோர்: இந்த நிலையை அடைந்தவர்களுக்கு Rs 50,000 to Rs 5,00,000 வரையிலும் கடன் வழங்கப்படும்.

தருண்: இந்நிலையை அடைந்தவர்களுக்கு Rs 5,00,000 to Rs 10,00,000 வரை கடனுதவி கிடைக்கும்.
முத்ரா வங்கி இந்தப் பணம் கொடுத்தல், திரும்பப் பெறல், எப்படி பெறுவது என்பதற்கான சட்ட திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் செயல்படும் எனவும், இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாக இவற்றை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சிபியின் துணையோடு செயல்படும் என்றும், பின்னர் தனி வங்கியாக செயல்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
குறுந் தொழில் செய்பவர்களில் 62% த்தினர் SC, ST and OBC வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசே தெரிவித்துள்ளது. இவர்கள் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். “Funding the unfunded companies “ என்பதை அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் குறிப்பிடுகிறார். அதில் சிறு குறுந் தொழில் நிறுவனங்களுக்கு முறையாக பதிவு செய்ய வைத்தல் மற்றும் வங்கி மூலமாகக் கடன் உதவி செய்வதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளையும், அதிகளவிற்கு உள் நாட்டு உற்பத்தியையும் பெருக்க இயலும் என்று அறிவித்தார்.
முத்ரா வங்கியின் முதலீட்டை இன்னும் மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும். இதை முதலில் வெற்றிகரமாக அமல்படுத்தினாலே இந்தியா தமது பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பத்துடன் கூடிய பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதை நிச்சயமாக மோடி செய்வார் என்றே தோன்றுகிறது. 2016 ஏப்ரலுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த பட்ஜெட்டில் இதன் முழு வடிவம் பற்றிய தெளிவும் நமக்குக் கிடைக்கும்.

தமிழ்நாடு அங்காடி, தொழிலகம் & உணவகங்களுக்கான சட்டம் தேவையா?

TAMILNADU SHOPS AND ESTABLISHMENT ACT:
=====================================

மோடியிடம் சொல்லி முதலில் இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும்.

தமிழக அரசின் Shops and establishment சட்டத்தைப் படித்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. அந்தச் சட்டத்தில் என்ன சொல்லியுள்ளது என்பது பற்றிய சில முக்கியமான ரூல்ஸ் மட்டும் சொல்கிறேன். இந்த மாதிரி சட்டம் தேவையா என்பதே எனது கேள்வி?

1. கடைகளை வாரத்தில் எந்த நாளும் திறக்கலாம். உதாரணமாக உணவகங்களை எடுத்துக்கொள்வோம். அங்கு பணிபுரிபவர் அதிக பட்சமாக NT = 48HRS/week & Including OT = 54/week. தான் பணி செய்யச் சொல்ல வேண்டும். இது எந்த ஊர்ல நடக்குதுன்னு சொல்லுங்க.

2. நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை one Hour break கொடுக்க வேண்டும். இல்லையெனில் அது சட்டமீறல் என்கிறது சட்டம்.

3. வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். (இது ஓரளவுக்கு உண்டு)

4. பெயிண்ட் அடிச்சுருக்கனும். தீ பிடிக்காமல் இருக்கவும், தீப்பிடித்தால் அதை அணைக்கக் கூடிய உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

5. ventilation proper ஆக இருக்கனும். அதாங்க காற்றோட்டத்துடன் இருக்கனும்.அரசு இன்ஸ்பெக்டர் வந்து விசிட் பண்ணும் போது இவையெல்லாம் இல்லையெனில், இன்ஸ்பெக்டர் சொல்வதே சரி எனக் கொள்ளப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

6. கடையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் ஒழுகக்கூடாது. எலி வரக்கூடாது. மீறினால் அபராதம்.

7. வருஷத்துக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை , மேலும் 12 நாட்களுக்கு sick லீவ் எடுத்துக்கலாம். முதலாளி முறையாகச் சம்பளம் கொடுக்க வேண்டும்.

8. குழந்தைகள் (14 வயதுக்குக் குறைந்தவர்களை) பணியில் அமர்த்தக்கூடாது.

9. பெண்களை காலை ஆறு மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை மட்டுமே இருக்கும் வகையில் (8 மணி நேரம் தான், எந்த நேரத்தில் கடைகளோ, ஹோட்டலோ, எதுவாக இருந்தாலும்) தான் வேலை வாங்க வேண்டும்.

10. பெனால்டி எவற்றிற்கு உண்டு என அடுக்கியுள்ளார்கள். பெரும்பாலும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களை முதல் தடவை சரியாக இல்லையெனில் 25 Rs ம், இரண்டாவது முறை கண்காணிப்பில் செய்யாமல் இருந்தால் Max of rs 250 வரையிலும் அபராதம் விதிக்கலாம். இது தெரியாமல் நம்மிடம் 500 Rs முதல் 1000Rs வரை லஞ்சமாகப் பெறுவார்கள்.

11. தொழிலாளிக்கு மீதமுள்ள சம்பளத்தைக் கொடுக்காமலோ, ஒரு மாத முன்னறிவிப்புச் செய்யாமலோ வேலையை விட்டுத் தூக்கினால் சிறைத் தண்டனை உண்டு.

சட்டம் எழுதியிருப்பதெல்லாம் ஓகே. ஆனால் நடைமுறையில் இவைதான் ஊழலுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக point no 4 to 9 , அதிகாரிகள் விசிட் பண்ணிட்டு லஞ்சப் பணம் வாங்கிட்டுப் போக மட்டுந்தான் உதவுது. என்னைக் கேட்டால் இந்த மாதிரி இந்தியாவிற்கு நடைமுறையில் பலனளிக்காத சட்டங்களைத் தூக்கி விட்டாலே லஞ்சம் வாங்க முடியாது. அதற்குப் பதிலாக Shops and establishment சட்டத்தை மிக எளிமையாக்கி விடலாம்.

என்னுடைய யோசனை என்னவென்றால் ஒன்று முறையாக கடையைப் பதிவு செய்வது, அதற்கு ஆண்டுதோறும் வரி செலுத்துவது, பணியாட்களுக்கு கையெழுத்துடன் கூடிய சம்பளக் கவர் வழங்குதல், தவறினால் அந்தத் தொழிலாளி வழக்குப் போட்டு வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கான செலவையும் முதலாளி ஏற்றுக் கொள்ளல், கடைகளுக்கு இன்சுரன்ஸ் செய்து விடுதல், அதற்குக் கட்டாயமாக அரசுக்கு ஆண்டுதோறும் வரியோடு ஒரு தொகையைச் செலுத்தச் செய்தல் (தீ விபத்து போன்றவையால் பாதிக்கப்பட்டால்) போன்றவையே போதுமானது. அதிகாரிகள் பதிவு செய்யும் போது, அதை வழங்கும் போது மட்டும் கடையில் மேற்கூறிய விஷயங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனப் பார்த்தால் போதும். எப்ப வேணும்னாலும் போகலாம் என்று இருப்பதால்தான் கை அரிக்கும் போது காசைப் பிடுங்க வருவார்கள். சில யோசனைகள் எனக்குத் தோன்றாமல் போயிருக்கலாம்.

இன்ஸ்பெக்டர் வரும்போதெல்லாம் மேற்பார்வை என்ற பெயரில் லஞ்சம் வாங்க மட்டுமே இச்சட்டம் நடைமுறையில் உதவுகிறது. இதன் மூலமாக தொழிலாளி அடைந்த பலன் என்ன? வாடிக்கையாளர்கள் கடை சுத்தம், காற்றோட்டம் என அடைந்த பலன்கள் இவர்கள் இன்ஸ்பெக்ட் பண்ணியதால் கிடைத்தது என ஒன்று கூட கிடையாது. முதலாளிகள் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்தால் , வர வேண்டுமானால் என்ன வசதியை தற்காலத்தில் செய்து கொடுத்தால் வருவார்கள் என்று தெரியும். அதை வைத்து அவர்களே அதை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆகவே முதலில் இதுபோன்ற சட்டங்களை அரசு அதிகாரிகள் மேற்பார்வை என்ற பெயரில் லஞ்சம் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சட்டமாகக் கொண்டு வர வேண்டும். மோடி தேவையற்ற சட்டங்கள் நீக்கப்படும் என சொல்லியுள்ளார். முதலில் இதுபோன்ற கதைக்குதவாத சட்டங்களைப் பிடுங்கி எளிதாகக் கொண்டு வாங்க. தேசம் போற்றும்.

http://nics.in/wp-content/uploads/2014/03/TN-Shop-act.pdf
இதைப் பற்றி அறிய விரும்புபவர்கள் மேலுள்ள லிங்கில் சென்று படித்துப் பாருங்கள். முக்கியமான விஷயங்கள் மட்டுமே சொல்லியுள்ளேன்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசைச் சூழ்ந்துள்ள சவால்கள் :

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டிற்கும் தீர்ப்பிற்கும் முன்பாக நாம் மத்திய அரசின் சில சட்ட திருத்த நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நிலக்கரி உள்ள நிலப்பகுதியில் சுரங்கத் தொழிலில் தனியார் நிறுவனங்கள் முறையாக செயல்படவில்லையென்பதைக் கணக்கில் கொண்ட மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் உரிமை கொண்டாட இயலாது என அறிவித்து 1973 ஆண்டு Coal mines Nationalisation act என்ற சட்டத்தின் வாயிலாக ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்கீழ் 1975 ஆம் ஆண்டில் அனைத்து நிலக்கரி சுரங்கத் தொழிலும் கோல் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1973 to `1993 வரை கோல் இந்தியா நிறுவனம் மட்டுமே சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்தது. ஆனால் நிலக்கரியை மின் உற்பத்திற்குத் தேவையான அளவு உற்பத்தி செய்வதிலுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் பொருட்டு 1993 ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் ஈடுபடும் நிலக்கரி, இரும்பு, எஃகிரும்பு, சிமெண்ட் .போன்ற துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களும் பங்கேற்க வழி செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதில்தான் அதிக அளவு ஊழல்கள் நடந்தன என்று மத்திய அரசின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் உள்ள முறைகேடு தொடர்பான வழக்கில் 1993 to 2010 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 218 நிறுவனங்களுக்கு மத்திய அரசுகள் தான்தோன்றித்தனமான முடிவுகளை சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில் எடுத்துள்ளன என அறிவுறுத்தி நான்கு நிறுவனங்களைத் தவிர்த்து இதர நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் செப்டம்பர் 24,2014ல் அளித்தது. அனுமதியுள்ள நான்கு நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SAIL மற்றும் NTPC யே ஆகும். இது தவிர 36 நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் நிறுவனங்கள் 31-03-15 வரை மட்டுமே செயலாற்ற வேண்டுமெனவும் அதன் பின்னர் அந்த சுரங்கங்கள் கோல் இந்தியாவின் சொந்த பொறுப்பிற்கு சென்று விடும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

கோல் இந்தியா 01-04-15 க்கு முன்னதாகவே சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். கோல் இந்தியா பற்றி சொல்வதானால் உலகிலேயே மிகப் பெரிய நிலக்கரி நிறுவனம் என்ற பெருமையுடையது. அதேபோல கோல் இந்தியாவும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் கொண்ட நிறுவனங்களில் ஒன்று. நிலக்கரி துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கோல் இந்தியா நிறுவனத்தில் 3,46, 638 ( As on April 2014) தொழிலாளிகள் பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 429 நிலக்கரிச் சுரங்கங்களைக் கோல் இந்தியா கொண்டுள்ளது. 2013 – 2014 ஆம் நிதியாண்டில் 462.62 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. 89,374.5 கோடி அளவிற்கு மொத்த விற்பனை செய்துள்ளது.

நிலக்கரி சுரங்கப் பணிகள் தங்கு தடையின்றி செயல்படவேண்டும். ஒருவேளை நிலக்கரி சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டால், தற்போது நிலக்கரியை இறக்குமதி செய்வதைக் காட்டிலும் அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை வரும். மேலும் மின் உறபத்தியில் தடை ஏற்படும். அது அரசுகளுக்கு மிகுந்த நெருக்கடியைத் தரும். தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். ஏனெனில் இந்தியாவின் மின் உற்பத்தியில் ஏறத்தாழ 68% நிலக்கரியை மூலதனமாகக் கொண்ட அனல் மின் நிலையம் வாயிலாக என்பது குறிப்பிடத்தக்கது.

1990 வரையிலும் இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்யவில்லை. ஆனால் அதன் பிறகு மின்தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 21% (142 Million tones with the worth of 16 Billion Dollars) அளவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவிடமிருந்தே 50% க்கும் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறோம். அதிகரித்து வரும் மின்தேவையால் இந்த ஆண்டில் 170 million tones அளவிற்கு இறக்குமதி செய்ய வேண்டி வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதியை எந்த அளவுக்குக் குறைக்க வேண்டுமோ அந்த அளவிற்குக் குறைக்க மத்திய அரசும் கோல் இந்தியாவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Kotak Institutional Equities செய்த பரிந்துரையில், 600-800Rs/Tonneஅளவிற்கு captive coal உற்பத்திக்கு செலவாகிறது என்றும் அதையே இறக்குமதி செய்வதாக இருந்தால் 3500 Rs/tonne வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ ஐந்து முதல் ஆறு மடங்கு அதிக பொருட்செலவில் இறக்குமதி செய்வதால் மின் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். உள்நாட்டில் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடியின் அரசு செயல்பட முனைய வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் நிறைய வேலை வாய்ப்புகளையும் எளிதாக உருவாக்க இயலும்.

நிலக்கரி இறக்குமதி மாபெரும் சுமையை அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்துகின்றன என்பது ஒருபுறம். மற்றொரு புறம் அதிக அளவிற்கு நிலக்கரி இறக்குமதியைச் செய்கிற அளவிற்கு இந்தியாவிடம் முறையான port வசதிகளும், coal linkage வசதிகளும் இல்லை என்பது சிக்கலாக உள்ளது. இந்திய ரயில்வே துறையால் இந்தியாவின் பல்வேறு முனைகளிலுள்ள மின் உற்பத்தி மையங்களுக்குக் கொண்டு செல்கிற அளவிற்கு முறையான வசதிகள் இல்லை. இவ்விடத்தில் சின்ன விஷயத்தை மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது. உடன்குடியில் அனல் மின் நிலையம் அமையப் பெறும் என தமிழக மாநில அரசு அறிவித்தும் இன்று வரையிலும் அதன் coal linkage திட்டமிடப்படவில்லை. Environmental clearance ம் இன்று வரை பெறவில்லை.

Enam Securities மதிப்பீட்டின் படி 37,000 கோடி அளவிற்கு சுரங்க பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் அளித்துள்ளது. நிலக்கரி சுரங்க நிறுவனங்களின் மீதான ரத்து நடவடிக்கையை அடுத்து வங்கிகள் மிகப் பெரிய அழுத்தத்திற்குள்ளாகும் நிலை வந்துள்ளது. குறிப்பாக ஆந்திர வங்கியும் UCO வங்கியும் தான் தொழில்துறை கடனாக நிலக்கரி சுரங்கத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 13 % அதிகமாக வழங்கியுள்ளதால் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

நிலக்கரி சுரங்கத் தொழிலிலும் , நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு environment clearance மிகப் பெரிய சவாலாக உள்ளது. மேலும் அதற்கான நிலத்தை ஆக்கிரமிப்பதிலும், பகுதி மக்களை ஏற்றுக் கொள்ள செய்யவும் மத்திய அரசும் மாநில அரசும் போராட வேண்டியுள்ளது.

உச்ச நீதி மன்றத் தீர்ப்பையடுத்து மத்திய அரசு மின்னணு முறையில் இ ஏலம்(E auction) என்ற முறையைக் கையாளப்போவதாக அறிவித்துள்ளது. அது வெளிப்படையான(Transparency) தன்மையைத் தரும் என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன் மூலம் என்.டி.பி.சி. மற்றும் நில மின்சார வாரியங்களுக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்யப்படும். சுரங்க ஒதுக்கீடு வெளிப்படையாக நடைபெறும். அனைத்து ஏல நடவடிக்கைகளும் மாநில அரசு மூலமாகவே நடைபெறும். மேலும் சிமெண்ட், ஸ்டீல், மின்சாரத் துறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களுக்கும் போதிய நிலக்கரிச் சுரங்கங்கள் இ-ஏலம் மூலம் விடப்படும்.

இதன் மூலம் ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், லிக்னைட் மூலமாக தமிழ்நாடு என மாநில அரசுகளுக்கு நிறைய வருவாய் கிடைக்கும். மாநிலங்களுக்கு நலன் அளிக்கக்கூடிய வகையில் முடிவெடுத்துள்ள மோடி அரசு பாராட்டுக்குரியதே. அவசரச் சட்டம் வாயிலாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் மத்திய அரசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிறுவனங்களுக்கு இ ஏலம் விடுவதில் தொடங்கி, தேவையான அளவிற்கு உற்பத்தி, ஊழலுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுதல், இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை, வங்கிகளுக்கான சிக்கலைத் தீர்த்தல், இறக்குமதி வசதிகள், மாநில நலன்கள், மின் உறபத்தியில் தங்குதடையின்மை, முறையாகவும் விரைவாகவும் வழித்தடங்களை அமைத்தல், நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்ட அனல் மின் நிலையங்களை சுரங்கத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அமைக்க ஆவண செய்தல், சுற்றுச் சூழல் தடைநீக்கம் பெறுதல் என சுற்றிலும் அக்னி வலைகள் நிரம்பி உள்ளன என்பதை உணர்ந்து செயல்படவேண்டிய இடத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசும் கோல் இந்தியா நிறுவனமும் உள்ளது என்பதே தற்போதைய நிலை.

பித்தத்தில் ஆம் ஆத்மியும் மோடி வெறுப்பாளர்களும்:

ஆம் ஆத்மி கட்சியும் மோடி வெறுப்பு வெறியர்களும் ஒரு பொய்யைப் பிரதானமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது மோடி 3,00,000 க்கும் அதிகமான போலி வாக்காளர்களை தமது கட்சிக்காக சேர்த்துத்தான் வெற்றி பெற்றார் என்பதே. இது பற்றிய எனது ஆய்வையும், வாக்கு விவரங்களை இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்திலிருந்து எடுத்தே முன்வைக்கிறேன்.

வாரணாசி 2009 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 15,61,854

வாரணாசி 2014 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 17,66,487

வாரணாசி வாக்காளர் வித்தியாசம் (2014 -2009) = 2,04,633

2009 தேர்தல் வாக்கு சதவீதம்/பதிவான வாக்குகள் = 42.6 % ( 6,70,891)

2014 தேர்தல் வாக்கு சதவீதம்/பதிவான வாக்குகள் = 58.35 % (10,30,685)

பதிவான வாக்குகள் வித்தியாசம் 2014 – 2009 = 15.75% ( 3,59,794)

BSP ஓட்டு வித்தியாசம் (2009 -2014 தேர்தல்) = 1,85,882 – 60,534= 1,25,348(இழப்பு ஓட்டுகள்)

SP ஓட்டு வித்தியாசம் (2009 – 2014 ) = 1,23,826 – 45,266 = 78,560(இழப்பு ஓட்டுகள்)

Congress ஓட்டு வித்தியாசம் (2009 – 2014) = 66,352 -75541 = -9189 (அதிக ஓட்டுகள் 2009 –யோடு compare செய்தால்)

ஆம் ஆத்மி 2009 தேர்தலில் நிற்கவில்லை = 2,09,111 (2014 தேர்தலில் பெற்ற ஓட்டுகள்)

ஆம் ஆத்மி இல்லாமல் பிரதான கட்சிகளான BSP + SP + Cong கட்சிகள் 2009 ல் பெற்ற ஓட்டுகள் = 3,76,060

ஆம் ஆத்மியையும் சேர்த்து இந்த கட்சிகள் 2014 ல் பெற்ற ஓட்டுகள் = 4,23,746

அப்னா தள் (2009ல் பெற்ற ஓட்டுகள்) = 65,907 (2014 ல் பாஜக கூட்டணியில் வந்துவிட்டது.)

பாஜக 2009 ல் பெற்ற வாக்குகள் = 2,02,969 + 65,907 = 2,67,907

மோடி பெற்ற வாக்குகள் = 5,80,423

இந்த விடயங்களை ஆராய்ந்தால் சில விஷயங்கள் புலப்படும்.

1. ஓட்டு சதவீதம் 15.75 % கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது.

2. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2009 தேர்தலோடு ஒப்பிடுகையில் 2,04,633 அதிகரித்திருப்பது + 3,59,794 வாக்குகள் 2014 தேர்தலில் அதிகமாகப் பதிவாகி இருப்பது கவனிக்க வேண்டியது. இது ஏதோ வாரணாசியில் மட்டும் அதிகரித்த வாக்காளர்களின் எண்ணிக்கையோ/ வாக்கு சதவீத வித்தியாசமோ அல்ல. இந்தியா முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்துள்ளது.

3. நாட்டின் பிரதம வேட்பாளர் என அறிவித்துக் கொண்ட இரண்டு தலைவர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அங்கு இயல்பாகவே இருதரப்பு ஆதரவாளர்களும் வாக்களிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆதலால் பிரதமராக யார் வரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு அதிக வாக்குகளை அளிப்பார்கள் என்பது நிதர்சனம். இந்தியா முழுவதும் மோடி என்ற மனிதன் மீது நம்பிக்கை வைத்து பாஜகவை இந்தியா முழுக்க பாஜகவே கனவில் காணாத தனிப் பெரும்பான்மையை மக்கள் அளித்துள்ளார்கள் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயமாக 25,000 to 30,000 வரை போலி வாக்காளர்கள் இருக்கக் கூடும் இது வாரணாசி என்கிற ஒரு தொகுதிக்கு மட்டும் பொருத்தமல்ல.

4. SP, BSP ஆகிய இரு கட்சிகளும் தமது வாக்கைப் பெருமளவுக்கு இந்தத் தேர்தலில் உத்திரப்பிரதேசம் முழுவதுமே இழந்திருந்தார்கள். அவர்கள் ஆதரவு ஓட்டுகளை வாரணாசியில் (2,03,908) இந்த முறை இழந்ததையும் , புதிய வாக்காளர்களையும்தான் (2,04,633) மோடியும் கெஜ்ரிவாலும் பகிர்ந்துள்ளார்கள் என்பதை மேற்கூறிய எண்ணிக்கை வித்தியாசத்திலிருந்து நம்மால் உணர இயலும்.

5. கேஜ்ரிவாலுக்கு விழுந்த ஓட்டுகள் எங்கிருந்து வந்தது என்பதை அவர்தான் விளக்க வேண்டும். டெல்லி சட்டசபைத் தேர்தலில் ,2008 தேர்தலைக் காட்டிலும் 10 சதவீதம் வாக்குகள் 2013 தேர்தலில் விழுந்ததற்காக குதுகலித்தவர் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதே மாநிலத்தில் 10 % அதிக அளவுக்கு வாக்குகள் பதிவானதற்குக் காரணம் என்றாரே. இப்போது இரு பிரதம வேட்பாளர்கள் நிற்கிற வாரணாசியில் 15% அதிகரித்திருப்பதற்கு மட்டும் போலி வாக்காளர் வாக்குப் பதிவு என எப்படி சொல்ல இயலும்.

மோடியை வெல்ல இயலாதவர்கள் மோடியின் வெற்றி போலியானது என்று சொல்ல முனைவது இந்திய வாக்காளர்களை முட்டாள்கள் என்று சொல்ல முனைவதற்கு சமம்தான். ஆம் ஆத்மிக்கு எதிராக டெல்லி தேர்தல் முடிவுகள் சொல்லும். அப்போதும் மோடி மக்களை ஏமாற்றுகிறார் என சொல்லிக் கொண்டு மனதைத் தேற்றுவது ஒன்றே ஆம் ஆத்மி ஆதரவாளர்களும் மோடி வெறுப்பாளர்களும் செய்ய வேண்டி இருக்கும்.

தேர்தல் ஆணையமும் ஓட்டலாட்டு சட்ட திட்டமும்

This gallery contains 1 photo.

தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளைக் கூறியுள்ளது. அதில் தேர்தல் தேதியன்று யாரும் சின்னத்தையோ, தமது கட்சிக்கு சாதகமாகவோ, வேட்பாளருக்கு சாதகமாகவோ எதையும்  100 மீட்டர் இடைவெளிக்குள் செயல்படுத்தக் கூடாது என்பதே அது. இன்று மோடி தாமரை சின்னத்தை வாக்களித்து விட்டு வெளிவந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் காட்டியுள்ளதாகவும், மேலும் அம்மா மகனை மக்கள் அகற்றுவார்கள் என்ற பிரச்சாரத்தைப் பேட்டி என்ற வகையில் அளித்துள்ளதாகவும் , ஆதலால் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தேர்தல் ஆணையம். வழக்குப் … Continue reading

குஜராத் மின் உற்பத்தி – சாதனைகளும் சவால்களும்

This gallery contains 2 photos.

நவம்பர் மாத ஆழம் இதழில் நான் எழுதிய குஜராத் மின் உற்பத்தி : சாதனைகளும், சவால்களும் என்ற கட்டுரை வந்துள்ளது. கட்டுரை வரக் காரணமான திரு மருதனுக்கும், திரு பத்ரி சேஷாத்ரிக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் எனது இணையப் பக்கத்தில் உள்ளது. சுருக்கமான வடிவம் இதழில் உள்ளது. உணவு. உடை. உறைவிடம். மூன்றும் தான் அடிப்படைத் தேவைகள் என கதைக்கிறோம். இந்த மூன்றில் கூட மனிதன் உயிர் வாழ உணவு மட்டுமே தேவை. அதுதான் … Continue reading

நான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க என்ன காரணம்?

நான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க சில காரணங்கள் உண்டு. சில முக்கியப் பிரச்சினைகளை விட்டிருக்கலாம். குஜராத் பற்றியோ  & பிஜேபியின் சாதனைகளைத் தவிர்த்தும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு, ஒப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பிஜேபியை ஆதரிக்கிறேன். 1. பாரதிய ஜனதாவை ஆதரிப்பதில் முக்கியமாக நான் கருதுவது, மாநிலக் கட்சிகளை அடக்கியாள காங்கிரஸ் அளவுக்கு பிஜேபி செய்யாது என்பது என் அனுபவம். ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் அளவுக்கு இழி செயல் செய்யமாட்டார்கள். ஏனெனில், ஒரு ஓட்டில் ஆட்சியை … Continue reading