தனி ஈழம் அமைத்திடுவோம்….

eelam

 

தனி ஈழம் அமைத்திடுவோம்….

நாம் வெற்றி பெறுவோம்

வெட்டி அரசியலும்

வெற்று அரசியலும்

செய்யாமலிருந்தால்…..

நாம் வெற்றி பெறுவோம்

அழிந்தது நம் இனம்

எனும் ஈரமும் கோபமும்

நம்முள் இருந்தால்….

நாம் வெற்றி பெறுவோம்

கண்ணிலிருந்து நீர்

வழிந்ததாலல்ல …

இதயத்தில் இருந்து

குருதி கொட்டியதால்….

நாம் வெற்றி பெறுவோம்

கனவு காண்பதால் மட்டுமல்ல

கனவுகளை நனவாக்கும்

நம் செயல்களால்!!

நாம் வெற்றி பெறுவோம்

ஒற்றைச் சிந்தனைகளால்!

ஒன்றுபட்ட அரசியல் செய்தால்!

தமிழால் ஒன்று கூடுவோம் …

உலகத் தமிழரகளை

ஓரணியில் கொணர்வோம்…

ஒற்றை நாடைப் பெற்றிடுவோம்

தன்னலமில்லாமல்

தனி ஈழம் அமைத்திடுவோம்….

ஹைக்கூ கவிதைகள்

This gallery contains 1 photo.

எனது அத்தான் திரு. முருகன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் :   1947 க்கு முன்: ஆங்கிலேயனிடம் தேசத்தைக் கொடுத்ததால் விடுதலையை இழந்தோம்! 1947  க்குப் பின் : ஆங்கிலேயன் விடுதலை கொடுத்ததால் தேசத்தை இழந்தோம்! மௌனம் :- பலவற்றைச் சாதிக்கிறது சில சமயம் -அது பலரையும் பாதிக்கிறது!