கட்டை அடி ஆட்டம் (பகடை)

நேற்று விஜய் டிவியின் மகாபாரதத்தில் பகடை உருட்டும் காட்சி நடந்தது. உடனே எனக்கு நினைவுக்கு வந்தது எங்கூரு கோயில் கொடையில் நாங்க கட்டை விளையாடியது தான்.எங்க கிராமத்தில் நடக்கும் கோயில் கொடையின் போது கட்டை உருட்டுவார்கள். ஒரே கூட்டமா இருக்கும். சில நேரம் சின்ன பசங்களை சேர்க்க மாட்டாங்க. நாங்க என்ன பண்ணுவோம்னா வீட்டில் கலர் குடிக்க பைசா வேணும்னு கேட்டு ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ வாங்கிக்கிறது. கலர்ன்னா , வேற ஒண்ணுமில்ல. சீனியைப் போட்டு கலர் … Continue reading

விஸ்வநாதன் ஆனந்த் – சதுரங்கம்

This gallery contains 1 photo.

ஆறாம் நூற்றாண்டில் குப்தர்களின் காலத்தில் இந்தியாவில் தோன்றிய சதுரங்கம் என்ற விளையாட்டின், 2012 ஆம் ஆண்டுக்கான  உலக சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக ஆனந்த் பெற்றுள்ளார். நேற்று நடந்த போட்டியில் இஸ்ரேலின் ஜெல்பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார். இந்தியாவில் பெரும்பாலும் தனி நபர் விளையாட்டில் ஒருமுறை உலக சாம்பியனாகவோ ஒலிம்பிக் சாம்பியனாகவோ வந்தவர்கள் மீண்டும்  அதே இடத்தைத் தக்க வைத்தார்களா என்றால் அது மிகப் பெரிய கேள்விக் குறி!. அவ்வகையில் ஆனந்த் மட்டும் விதிவிலக்கு.   ஆனந்த் FIDE என்ற பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு நடத்திய போட்டியில் ஐந்து முறை( ஆண்டு 2000, 2007,2008, 2010 & 2012) உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    சதுரங்க பதக்கங்கள்: (AS PER விக்கிபீடியா) உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தை பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு நடத்திய போட்டியின் மூலம் 2003 – ல் பெற்றார். 2003 அதிவேக … Continue reading