ஹைக்கூ கவிதைகள்

This gallery contains 1 photo.

எனது அத்தான் திரு. முருகன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் :   1947 க்கு முன்: ஆங்கிலேயனிடம் தேசத்தைக் கொடுத்ததால் விடுதலையை இழந்தோம்! 1947  க்குப் பின் : ஆங்கிலேயன் விடுதலை கொடுத்ததால் தேசத்தை இழந்தோம்! மௌனம் :- பலவற்றைச் சாதிக்கிறது சில சமயம் -அது பலரையும் பாதிக்கிறது!

காதல் – கவிதை

This gallery contains 4 photos.

நீ இல்லா வாழ்க்கை: பொல்லாத உலகத்தில் கூட என்னால் வாழ முடியும்.. நீ இல்லாத உலகத்தில் கற்பனையில் கூட வாழ முடியவில்லை! என்னுடைய கனவில் எனக்கானவளாய் இருக்கிறாய்….. நிஜ வாழ்க்கையில் மட்டும் கனவாகவே இருப்பதேன்! காதல் தோல்வி : சொல்லாக்  காதலிலுள்ள சுகம், சோகம், ஏக்கம், வலி, சுவாராஸ்யம், கனவு, கற்பனை அத்தனையும் காதலைச் சொல்லிய பிறகு அர்த்தமிழந்து கிடக்கின்றன! அப்பா : அதிக நேரம்  பேசாது அதிகமாய்  கோபப்படாது அதிகம் கண்டுகொள்ளாது அதிக நேரம்  கவனிக்காது … Continue reading

நண்பன் – கவிதை

This gallery contains 3 photos.

நண்பன்: விழி பார்க்க வாய்ப்பில்லா தேசத்திலிருந்தும் வழிகாட்டியாய் நீ! என்மீது பழி விழுந்த போது பழி ஏற்று பலியாகியவன் நீ! இழப்பு: என்னை மட்டும் இழந்தவளாய் திருமணக் கோலத்தில் நீ! எல்லாமும் இழந்தவனாய் நான்! தி.மு காதல் – தி.பி, காதல்: அர்த்தமில்லாமல் பேசிய தி.மு காதலைக் காட்டிலும் மௌனமான தி.பி காதல் வலிமையானது… நல்லவனாக நடித்துக் காட்டிய தி.மு காதலைக் காட்டிலும் சுய ரூபம் காட்டப்படுகிற தி.பி காதல் மேலானது!

புனிதம் – கவிதை

This gallery contains 3 photos.

புனிதம்: தரங்கெட்ட உறவுகளினால் குப்பைத் தொட்டிகளும் புனிதமாகி விட்டன… அனாதைக் குழந்தைகளின் வரவினால்! சலனம்: கொலுசு சத்தத்தோடு சலனமில்லாமல் நீ கடந்து விட்டாய்….. சலனத்தோடு என் இதயம் எதையும் கடக்க இயலாது தவிக்கிறது! தேடல்: இதயம் இதயத்தைத் தேடுகிறது! எல்லா பெண்களிடமும் இதயம் இருக்கிறது !? எனக்கான இதயம் யாரிடம் இருக்கிறது!?

முத்தம்-நியாயமா-ஏமாற்றம்-தற்கொலை-கவிதை

This gallery contains 10 photos.

    முத்தம்:   உலர்ந்து போன உதடுகளுக்கு    ஈரம் கொடுத்தாய்!   பேசாதிருக்க நீ செய்த    தந்திரச் செயல்!     நியாயமா:   உளவு வந்தேன்- இதயம்   களவு செய்தேன்….   கலவு கொண்டோம்!   பற்றுக் கொண்டேன்…   பற்றிக் கொண்டாய் – உனை   பெற்று விட்டவர்களுக்காக   அற்று விட்டாய் – காதலை   விற்று விட்டாய்…   வெற்று மனிதனாய்   பற்று அற்ற … Continue reading