கர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.

கர்நாடக அமைச்சர்கள் மூன்று பேர் சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்ததை தொலைக்காட்சி படம் பிடிக்க, மூவரும்  சமூகத்தின் முன்பாக  மாட்டிக் கொண்டார்கள். இப்படி அமைச்சர்களோ, சட்ட சபை உறுப்பினர்களோ நடந்தது ஒழுக்க விதிகளுக்கு நிச்சயமாக முரணானது. ஒழுக்க விதி என்று நான் குறிப்பிடுவது சட்டசபை ஒழுக்க விதிகளையும், சட்டசபையில் அவர்களின் செயலாக்கத்தையும்தான். அவர்களுக்கு சட்டசபை விதிப்படி, ஒழுங்கு மீறலுக்கு என்ன தண்டனையோ அது மட்டும் கொடுத்தாலே போதுமானது என்பதே எனது கருத்து. இவர்களை ஜெயிலில் போடவேண்டும் என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார் பெரியவர் அண்ணா ஹசாரே. … Continue reading