தலைகீழாக ஒரு தவம்

This gallery contains 1 photo.

  “உன்னோடு பேச வேண்டும் ! கேள்!  நான் கடவுள் படைத்த கவிதை! என்னைக் கதிரவனும், மதியும் கண்டுகண்டு போவதுண்டு! தென்றல் என்தேகத்தை மென்மையாய் வருடிவிடும் ! தன்வேகம் மாறி புயலானால் என்னைப் புரட்டியும்போட்டுவிடும்! பைங்கிளிகளும், மைனாவும் பலப்பல இனிமை பேசும்! என்னை நாடிவந்திருந்து குயில்கள் தனித்தும் கூடியும் கச்சேரி நடத்தும்; அணில்கள் ஓடியோடி அழகாய் விளையாடும் ! மயில்கள் கூட்டங்கூடி மகிழ்ந்தே நடனமிடும் ! -கூடவே என் தலையாடும் இக்கோலம் கண்டுகண்டு மனிதர் சுவைத்திடில் அவர்தம் … Continue reading

உழைப்பவர் தாழ்ந்திடலாமோ?!

This gallery contains 2 photos.

உழைப்பவர்  தாழ்ந்திடலாமோ?! ——————————————————–     விழுந்தே கிடக்கின்றன     முதலாளிகளின் காலடியில்      விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும்      ஒப்பந்தச்சட்டங்களும் !      சிப்பந்திகளும், பணியாளர்களும்      ஒப்பந்தம் என்ற முறையில்     முதலாளியின் முகவரி      தெரியாமலேயே       பணிசெய்யும் பரிதாபம் !      இந்த நூற்றாண்டு       உழைப்பவனுக்கும்      முதலாளிக்கும்        உறவிலும் ,        உரிமையிலும்        பெரிய இடைவெளியைச்        செய்துவிட்டிருக்கின்றது !        ஆமாம்!        பசியை அதிகம் உணராத       இவ்வுலகத்தில்தான்       சோமாலியா போன்ற       தேசத்துமக்கள்       இறந்துகொண்டே இருக்கிறார்கள்  !       சமூக அக்கறைஇன்மையும் … Continue reading

உயிர்க்காற்றே…

This gallery contains 1 photo.

      காற்றே நீயும்       கடவுளின் சாயல்;       கடவுள் நீ ! என்ற       கருத்து  என்னிடம் உண்டு.         இல்லை, நீ அவரினும்         சிறந்தவன்;உயர்ந்தவன்;         ஆம் ! மும்மூர்த்திகளுக்கும்          கோயில்கட்டி  மூர்த்திகள் வைத்து          கோயில் செய்து பூட்டிவைத்ததாகக்           கூறிக்கொண்டாரின்           நாசிபடுகாற்று அல்லவா நீ!           இவ்வுலகில் மட்டுமன்று !            எவ்வண்டத்திலும்             எவரேனும் உனைச் சிறைவைத்தலோ             தனிச்சொந்தம் பாராட்டவோ              கூடுமோ!             எரிகின்ற எரிமலை … Continue reading

பரத்தை – கவிதை

This gallery contains 1 photo.

நித்தம் நித்தம் வயிறு கழுவ  சித்தம் விற்கிறாள்!   எச்சம்தான்! –  இருந்தாலும் இனிக்கிறாள்   இருட்டில்தான்- இவள் வாழ்க்கை வெளிச்சம்   கட்டழகு உள்ளவரை களப்பணியில் குறையில்லை வருபவர்களின் எண்ணிக்கையிலும் குறையில்லை வரவிலும் குறையில்லை   வாடிக்கையாளர்களுக்கு தகுதி தேவையில்லை பரத்தையின் உடல் வாலிபத்திற்கே – தேவை தகுதி   உழைப்பு அவளது.. சுரண்டல்கள் காவலர்களது   வேசி, தேசி பிராத்தல், தேவடியாள் பட்டப்பெயர்களுக்குப் பஞ்சமில்லை   படுக்கைப் பகிர்வுகளுக்கும் பஞ்சமில்லை எழில் உள்ளவரை தொழில் பஞ்சமில்லை!   சீண்டல்களினால் … Continue reading