உளறல்கள் 1

உளறல்கள் 1
காதலிக்கும் போது  தனக்கானவரிடம் தனது பாசிட்டிவிட்டியை மட்டும் காண்பிப்பவர்களின் சுயரூபம் கல்யாணத்திற்குப் பிறகு  தெரியும் போது தான் காதலும் கசக்கிறது.
அறிவாளிகள் எல்லோரும்  நாகரிகமாகத்தான்  மறுமொழி செய்வார்கள் என எதிர்பார்த்தால் அதுவும்  உன் பிழை தான்.
காமம் மட்டுமே நீடிக்கும் போதுதான் காதலும் செத்துப் போகிறது, கற்பிற்கும் பாதுகாப்பில்லாமல் போகிறது.
நீ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. என்னைப் பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லிவிடாதே.
என்னை விட்டு விலகி விடு என்று கூட சொல்லிடு. அண்ணனாகத் தான் பழகினேன் என்று மட்டும் சொல்லிடாதே.
ஒருதலைக் காதலில் உள்ள சுகமும் திரில்லும் ஏற்றுக் கொண்ட காதலில் கிடைப்பதில்லை.
காலில்லா மனிதனைக் காட்டிலும் காதலில்லா இளைஞன்தான் ஊனமாகிக் கிடக்கிறான்.
என் காதலை மறுக்க மட்டுமே உனக்கு உரிமை இருக்கிறது. மறந்து விடு என்று சொல்வதற்குக் கிடையாது.
என்னை வேண்டுமானால் நீ மறுத்து விட இயலும்.
நான் சொன்ன காதலை ஒருக்காலும் உன்னால் மறந்து விட இயலாது.
மகிழ்ச்சிக்கு வயது ஒரு பொருட்டல்ல.
வியாதிக்கு வயதும் ஒரு பொருட்டுதான்.
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது- வைரமுத்து.
சொல்லாத காதல் எல்லாம் சொப்பனத்தில் சேரும். – இலட்சுமணப் பெருமாள்
காதலைச் சொல்லாமலேயே காதலை வாழ வைப்பவர்கள் காதலில் வெற்றி பெற்று காதலைச் சாகடிப்பவர்களைக் காட்டிலும் மேன்மையானவர்களே!

நீயா நானாவில் கருபழனியப்பன் – சுவாராஸ்யமான பேச்சு – காணொளி

கரு பழனியப்பனின் காதல் திருமணம் குறித்த பேச்சில் குறிப்பாக நான் கவனித்தது இதுதான்: ” எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய். ஆனால் செய்த பிறகு , உன்னால் அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் மீண்டும் , மீண்டும் தாராளமாக செய். ஏனெனில் நீ செய்கிற விஷயம் சரியானது. ஆனால் ஒரு காரியத்தை செய்து விட்டு, அதை உன் தந்தை என்னிடம் பகிர முடியாதெனில், மீண்டும் அதைச் செய்யாதே. ஏனெனில் அது தவறு”. மிகச் சரியான, … Continue reading

தலைமுறை – சிறுகதை

This gallery contains 2 photos.

  கிராம நிர்வாக அதிகாரியாய் இருந்த காலத்தில் இருந்தே கோபால் பிள்ளை இன்று வரை விடிகாலை நான்கு  மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். நான்கு மணிக்கு எழுவதை இன்று வரை சிரமமாக பார்த்ததில்லை. இப்போது வயதாகி விட்டதால் தூக்கமும்  வரமாட்டேன்கிறது. காலைக் கடனை எல்லாம், பம்ப்செட் அருகில் உள்ள உடைமரப் புதர்களில் கழிப்பதுதான் அந்த ஊரில் உள்ள ஆண்களின் வழக்கம். கோபால் பிள்ளையும் எழுந்தவுடன் கையில் பல்பொடியையும், சோப்பு வில்லையும் எடுத்துக் கொண்டு பம்ப்செட்டில் குளிக்க கிளம்பி விடுவார். நட்சத்திரங்கள் கலையாத வானம். அழகான நிலா. இருந்தும் சாலைகளின் ஓரத்தில் உள்ள மரங்களின் கிளைகளில் உள்ள இலைகளின் … Continue reading

கண்ணனின் காதல்

This gallery contains 1 photo.

இப்போதெல்லாம் கண்ணனுக்கு கனவிலும் அவள், நினைவிலும் அவள். என்னத்த சொல்றது… கருமம் காதல் யாரைத்தான் விட்டுத் தொலைச்சது… ராவும் பகலும் அவள் நினைப்பே அவனைப் புரட்டி எடுக்கிறது. கண்ணன் பன்னிரெண்டாம்  வகுப்பு படிக்கிறான். படிக்கிறான் என்று சொல்வதை விட பன்னிரெண்டாம்  வகுப்பிற்கு போய் வருகிறான் என்றே சொல்ல வேண்டும். கண்ணன் படிக்கிற பள்ளி செந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. செந்தூரிலிருந்து  ஏழு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற அய்யனார்விளை தான் அவனது ஊர். மிதிவண்டியில் தான் பள்ளிக்கு வந்து செல்கிறான்.கண்ணன் படிப்பில் மக்குமல்ல, முதலாமவனும் அல்ல. கண்ணனை பற்றிப் புகழ வரலாறு … Continue reading