இன்று நான் எழுதிய “காக்க … காக்க…. ” என்ற சிறுகதை திண்ணையில் இந்தவார ( ஜூலை 09 ,2012 ) இதழில் வெளிவந்துள்ளது. எனது சிறுகதையை வெளியிட்டமைக்காக திண்ணை இதழுக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்கான பிணையை இதனோடு இணைத்துள்ளேன். திண்ணைக்கும் நன்றி, திண்ணையின் வாசகர்களுக்கும் நன்றி. http://puthu.thinnai.com/?p=12912
Tag Archives: sirukathai
மனைவி – சிறுகதை

This gallery contains 1 photo.
கார்த்திக்கிற்கு தேவியை இப்போதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக கார்த்திக்கிற்கும், தேவிக்கும் திருமணம் ஊர் மெச்சுகிற அளவுக்கு வெகு விமரிசையாக நடந்தது. தேவி கார்த்திக்கிற்கு சொந்த தாய்மாமன் மகள். தேவி பன்னிரெண்டாம் வகுப்பு வரையில்தான் படித்திருந்தாள். தேவி வெகுளி. அழகு.. கொள்ளை அழகு. சேலை கட்டியிருந்தால் அவள் அழகை மிஞ்ச ஆளில்லை. லட்சுமி கடாட்சமான முகம் என்றால் தேவிக்கு அது நூறு சதவிகிதம் பொருந்தும். எதுவெல்லாம் பிடித்துப்போய் தேவியைக் கார்த்திக் கல்யாணம் செய்தானோ அதுவெல்லாம் இன்று அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக அவளது வெகுளித்தனமான பேச்சு. அடுத்து அவள் அணியும் சேலை என்ற ஆடை. மனிதர்களின் … Continue reading
கோகிலவாணியின் பக்குவம்

This gallery contains 1 photo.
சில நேரங்களில் இறைவன் கருணை காட்டத் தவறி விடுகிறான் என்பதற்குக் கோகிலவாணி ஒரு சாட்சி. கோகிலவாணிக்கு இப்போது வயது பதினாறு. பிறந்த போதே இறைவன் தந்தையை அழைத்துக் கொண்டான். தாய் மட்டுமே அவளை வளர்த்து வந்தாள். அவளும் கோகிலவாணிக்கு 13 வயதாக இருக்கும் போது,புற்றுநோய் என்ற அரக்கனுக்கு ஆளாகி இன்று இல்லாமல் போய்விட்டாள். சில நோய்கள் ஏன் நமக்கு வந்துள்ளது என்று இதுவரை எல்லோரும் யோசிக்கிறோம். குடிப்பதில்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனாலும் நோய் சில நேரங்களில் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. அடுப்படியில், புகையோடு … Continue reading