சிறுகதை ” விடிந்தால் தேரோட்டம் “

This gallery contains 1 photo.

மணி 06.45. கதிரவன் முழுவதாய் மறைந்துவிட்ட மாலைநேரம். தூங்குமூஞ்சி வாகைமரங்களின் இலைகள் எல்லாம் மூடி உறங்கதொடங்கி இருந்தன. ” பிர்ர்!  ” என்ற விசில் சத்தம் .  சத்தத்தைத் தொடர்ந்து ஒரு அரசுப் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவும், “மன்னார்புரம் சந்நிதித் தெரு” என்று நடத்துநரின் குரல் உள்ளேயிருந்து  ஒலிக்கின்றது.  அதனைத் தொடர்ந்து, பேருந்திலிருந்து,நிறைய பேர்கள்  இறங்குகின்றனர். இறுதியாக,  அதிலிருந்து பரதனும், பாரதியும் இறங்கி நடக்கின்றனர்.               ” எல்லாம் இன்பமயம் புவியில் ! ” என்ற எம்.எல்.வசந்தகுமாரியின் … Continue reading

ஒரு பேருந்து – இரு ஆய்வாளர்கள்

This gallery contains 1 photo.

  காலை 8மணி , வைகாசி மாதம்,  வானம் மேகமூட்டத்துடன் பன்னீர் தெளித்தாற்போல சின்னஞ் சிறிதாய் தூறியது ! நெல்லை சந்திப்பு நகரப்  பேருந்து நிலையம், அன்று  முகூர்த்த நாள்,    நிலையம் முழுக்க பயணிகள்கூட்டம்!              ” அரசு அலுவலர் குடியிருப்பு ”  என்று முகப்பு பலகையில் எழுதப்பட்டு அரசு பேருந்து ஒன்று வந்து நிற்கவும், ஒருபுறம் அதிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்; பேருந்தில்ஏறுவதற்காக  ஓடிவந்த பயணிகளில் சிலர் கைக்குட்டை,துண்டு, கைப்பை இவற்றைச் சன்னல் வழியே எதிர்புறம் … Continue reading

குழந்தை மனசு – சிறுகதை

This gallery contains 1 photo.

அக்சயா என்னடி பண்றே… அம்மா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், கதவுல சுவத்துல கிறுக்காதன்னு… சொல்லிக் கொண்டே வந்த செல்வி அன்று என்ன நினைத்தாலோ தெரியவில்லை, அக்சயாவைப் போட்டு அடி… அடின்னு அடிச்சுத் தொலைத்து விட்டாள். தொலைத்தவளின் கோபம் புருஷன் பக்கமாகத் திரும்பியது. கொஞ்சமாவது பிள்ளைகளைப் பார்க்கீங்களா… என்ன பண்ணுதுன்னு? ஆபீஸ்க்கு போயிட்டு வந்தா போதும், எப்ப பார்த்தாலும் டிவி இல்லன்னா, லேப்டாப் என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பொதுவாகவே அவளது கணவன் அவள் புலம்புவதைப் பொருட்படுத்துவதில்லை. ஒருவேளை … Continue reading

தலைமுறை – சிறுகதை

This gallery contains 2 photos.

  கிராம நிர்வாக அதிகாரியாய் இருந்த காலத்தில் இருந்தே கோபால் பிள்ளை இன்று வரை விடிகாலை நான்கு  மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். நான்கு மணிக்கு எழுவதை இன்று வரை சிரமமாக பார்த்ததில்லை. இப்போது வயதாகி விட்டதால் தூக்கமும்  வரமாட்டேன்கிறது. காலைக் கடனை எல்லாம், பம்ப்செட் அருகில் உள்ள உடைமரப் புதர்களில் கழிப்பதுதான் அந்த ஊரில் உள்ள ஆண்களின் வழக்கம். கோபால் பிள்ளையும் எழுந்தவுடன் கையில் பல்பொடியையும், சோப்பு வில்லையும் எடுத்துக் கொண்டு பம்ப்செட்டில் குளிக்க கிளம்பி விடுவார். நட்சத்திரங்கள் கலையாத வானம். அழகான நிலா. இருந்தும் சாலைகளின் ஓரத்தில் உள்ள மரங்களின் கிளைகளில் உள்ள இலைகளின் … Continue reading

மனைவி – சிறுகதை

This gallery contains 1 photo.

கார்த்திக்கிற்கு தேவியை இப்போதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக   கார்த்திக்கிற்கும், தேவிக்கும் திருமணம்  ஊர் மெச்சுகிற அளவுக்கு வெகு விமரிசையாக  நடந்தது.   தேவி கார்த்திக்கிற்கு சொந்த தாய்மாமன் மகள். தேவி பன்னிரெண்டாம் வகுப்பு வரையில்தான் படித்திருந்தாள். தேவி வெகுளி. அழகு.. கொள்ளை அழகு. சேலை கட்டியிருந்தால் அவள் அழகை மிஞ்ச ஆளில்லை. லட்சுமி கடாட்சமான முகம் என்றால் தேவிக்கு அது நூறு சதவிகிதம் பொருந்தும்.   எதுவெல்லாம் பிடித்துப்போய் தேவியைக் கார்த்திக் கல்யாணம் செய்தானோ அதுவெல்லாம் இன்று அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக அவளது வெகுளித்தனமான பேச்சு. அடுத்து அவள் அணியும் சேலை என்ற ஆடை.  மனிதர்களின் … Continue reading